சென்னையில் கடந்த புதன் கிழமை தீபாவளியன்று, மழையையும் பொருட் படுத்தாமல் திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. காரணம் ஆர்ப்பாட்டமாக மூன்று பெரிய படங்கள் வெளியாகியன.
ஒன்று பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான சூர்யாவின் "ஏழாம் அறிவு", மற்றொன்று இந்தியாவிலே பெரிய எதிர்ப்பார்ப்புடன் ஷாருக்கான் மற்றும் ரஜினி (சில காட்சிகள்) நடித்து வெளியான "ரா ஒன்", இவையிரண்டுடன் ஒப்பிடுகையில் சற்று எதிர்ப்பார்ப்பில் பின் தங்கி வெளியான விஜய் நடித்த வேலாயுதம்.
மேலும் ஏழாம் அறிவு மற்றும் ரா ஒன் படங்கள் முடிந்த அளவிற்கு முதல் தர திரையரங்களிலே வெளியாயின. தமிழ் நாட்டைப் பொருத்த வரை, வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவுக்கும் இடையே போட்டி நிலவியதால் ஓபனிங்கை பொறுத்தவரை இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
7 ஆம் அறிவு புதிய களம், புதிய முயற்சி. ஆனால் தொய்வான திரைக்கதை ரசிகர்களுக்கு பல நேரம் கொட்டாவியை வரவழைத்தது எதிர்பாராத ஏமாற்றம்.
"ரா ஒன்" படம் பற்றி கலவையான விமர்சனங்கள் உள்ளதாலும் சொன்ன தேதியில் 3D யில் வெளியாகததினாலும் இப்படத்திற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதே விஜய் படம் என்றாலும் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் சரியான விகிதத்தில் ஜெயம் ராஜா தந்திருப்பதால் வேலாயுதம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
கேரளா மற்றும் வெளி நாட்டின் வசுல் அடிப்படையில், திபாவளியன்று வெளியான படங்களின் ரேசில் வேலாயுதம் முந்தி உள்ளது.
இந்த வார இறுதியில் தமிழ் நாட்டின் நிலமை தெரிந்துவிடும்.

1 comments:
Post a Comment