அக்தரின் பந்தை எதிர்கொள்ளும்போது சச்சின் நடுங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடந்த சில நாட்களுக்கு முன் கான்டிரவர்சியலி யுவர்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் தனது பந்துவீச்சைக் கண்டு சச்சின் பயந்ததாக தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அப்ரிடி, அக்தர் சொல்வது உண்மை தான் என்றும், அக்தர் பந்து வீசும் போது, சச்சின் கால்கள் நடுங்குவதை தான் பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அக்தரின் காண்ட்ராவர்ஷியலி யுவர்ஸ் புத்தகத்தில் சச்சின் பற்றி அவர் எழுதிய கருத்து, இரு நாட்டு எல்லையிலும் பெரும் பிரச்னையைக் கிளப்பியது. அக்தரின் இந்தப் புத்தகம் வெளியாக இருந்த நிகழ்ச்சி, மும்பையில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல், அப்ரிதி, அக்தருக்காகப் பரிந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அக்தர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் அவர் பந்துவீச்சுக்கு பயந்தது உண்மை. நான் களத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த நேரத்தில், அக்தரின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் சச்சினின் கால்கள் பயத்தில் நடுங்குவதைக் கண்டிருக்கிறேன்... என்று தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்ரிதி கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறை நெருக்கடி ஏற்படும்போதும் பேட்ஸ்மென்கள் இவ்வாறு நடந்து கொள்வது இயல்பு. பாகிஸ்தானின் ஆப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் பந்துவீச்சுக்கும் இப்படி ஒருசூழ்நிலை ஏற்பட்டதுண்டு என்று கூறியிருக்கிறார் அப்ரிதி.
கடந்த 2011 உலகக் கோப்பை நேரத்தில், இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் விளையாடிய அணியில் அக்தரை சேர்த்துக்கொள்ளவில்லை. அதற்காக அணித்தலைவர் அப்ரிதியை அக்தர் வாய்க்கு வந்தபடி திட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் அணிக்கு மீண்டும் திரும்பவேண்டும்; அணிக்காக விளையாட வேண்டும். அதற்காக அணி மேலாளரிடம் கேட்டுக்கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.
டிஎன்எஸ்

0 comments:
Post a Comment