அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான "ஆரக்கிள்' நிறுவனம் ஆன்லைன் மூலம் நடத்திய தொழில்நுட்ப போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் திருநெல்வேலியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் விக்னேஷ்வரன்.
திருநெல்வேலி வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - ரேவதி தம்பதியின் மகனான இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 8-வது வகுப்பு படித்து வருகிறார். தனது இந்தச் சாதனை குறித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாளையங்கோட்டையிலுள்ள தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் "சி' லாங்வேஜ் படித்து வந்தபோது கம்ப்யூட்டரில் எனக்குள்ள ஆர்வத்தைப் பார்த்த பயிற்சியாளர் எஸ்.சுந்தரபாண்டியன், ஆரக்கிள் நிறுவன தேர்வுக்கு உரிய பயிற்சியை அளித்தார். பி.இ., பிடெக் போன்ற உயர் படிப்புகளை முடித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மேலும் பயிற்சிக்காக மைக்ரோசாப்ட், சிஸ்கோ மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் நடத்தும் தொழில்நுட்பத் தேர்வை எழுதி அவர்களது திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். இதற்காக அந்த நிறுவனங்கள் சான்றிதழ் அளிப்பதுடன் அவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியிலும் அமர்த்திக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த வகையில் ஆரக்கிள் நிறுவனம் நடத்திய ஓசிஏ-11ஜி தேர்வை எழுத என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். இத்தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி எழுதினேன். நானே எதிர்பாராத வகையில் இத்தேர்வில் 83 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். இவ்வளவு சிறிய வயதில் இத்தேர்தவை எழுதி வெற்றி பெற்றது நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என எனது பயிற்சியாளர் தெரிவித்தார்.
இதற்கு முன் மிகக் குறைந்த வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 14 வயதான ராகில் என்பவர் ஆவார். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் பொறியாளர் ஆவதே எனது லட்சியம். இத்தேர்வில் வெற்றி பெற்றதால் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக பி.இ., பி.டெக் வகுப்பில் சேரலாம் என்றார் அவர். பேட்டியின்போது உடனிருந்த பயிற்சியாளர் சுந்தரபாண்டியன் கூறுகையில், சாதாரணமாக இத்தேர்வில் வெற்றி பெற முடியாது. விக்னேஷ்வரனின் தீவிர முயற்சியாலும், அவரது பெற்றோர் கொடுத்த ஊக்கத்தாலும் இந்த வெற்றியை அடைந்துள்ளார் என்றார்.
பூமி நாளிதழ்

0 comments:
Post a Comment