ஒரு நாள் முன்பு சச்சின் அக்தரின் பந்தை எதிர்கொள்ள நடுங்கினார் என்று கூறி சர்ச்சை கிளப்பிய அப்ரிதி, இன்று மாற்று கருத்து தெரிவிதுள்ளார். "சச்சினின் பெருமையை பற்றி நான் கேள்வி எழுப்பவில்லை, நான் சொன்னதை மறுக்கவும் இல்ல. டெண்டுல்கர் அக்தரின் பந்தில் 1999 ஆம் ஆண்டு கொல்கட்டா டெஸ்ட் தொடரில் அசௌகரியமாக தெரிந்தார். அது அக்தருக்கு இந்தியாவில் முதல் தொடராகும், டெண்டுல்கரை ரன் எடுக்க விடாமல் போல்ட் ஆக்கினார், ஓரே போடியில் டிராவிடையும் வெளியேற்றினார்.
சச்சின் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் அதை உலகமே அறியும். நானோ மற்றவர்களோ இதற்கு சான்று தரத்தேவையில்லை. அவருடைய சாதனைகளே அதைப் பற்றிச் சொல்லும்.
சச்சின் அதற்குப் பிறகு அக்தரின் பந்தில் எவ்வளவோ சிக்சர்களை விளாசியுள்ளார், ஆனால் நான் குறிப்பிட்டது அன்று அக்தரின் நாளாக இருந்ததை. அன்று அவர் அக்தரின் பந்தை எதிர்கொள்ள தயங்கினார் என்றே கூறினேன்.
நான் சச்சினின் ரசிகன், அவர் சிறந்த வீரர் மட்டுமல்ல பணிவானவரும்தான். எனது வீட்டின் அறையில் ஓரே ஒரு படம் மாட்டி வைத்துள்ளேன் அது அவருடைய படம்தான், அதில் அவரது கையெழுத்து உள்ளது. இத்ற்கு மேல் எதாவது கூறவேண்டுமா?" என்று அப்ரிதி இன்று கூறியுள்ளார்.
1 comments:
எழுந்த எதிர்ப்பே அப்ரிதியை பின் வாங்க வைத்து உள்ளது..
சச்சின் அடித்த சிக்ஸர்களால் பயந்து போனது அக்தர் தான்!!
ஆனால், தன் பயத்தை மறைக்க பிறர் பயந்ததாக கூறி உள்ளார்!
Post a Comment