தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் வெட்டின் அளவு இரண்டரை மணி நேரத்துக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாட்டில் மின்வெட்டு இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் சீரமைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின் நிலையங்களை விரைவில் திறக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2012-க்கு பிறகு தமிழ் நாட்டில் மின்வெட்டு இருக்காது என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறி வருகிறார்.
தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்கப்படுகிறது. கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. நகரங்களில் 2 மணி நேரமும் கிராம பகுதிகளில் 4 மணி நேரம் வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு மின் வினியோகம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை உள்ளிட்ட நகரங்களில் தினமும் 1 மணி நேரமும், மற்ற பகுதிகளில் 2 மணி நேரமும் மின்வெட்டு நடை முறைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மின் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், சென்னை தவிர மற்ற இடங்களில் கூடுதல் மின்வெட்டு இருந்து வருகிறது. கிராம பகுதிகளில் மீண்டும் 3 முதல் 4 மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலை உருவானது. கூடுதல் மின்வெட்டுக்கு காரணம் என்ன என்பது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு சுமார் 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. அந்த அளவு மின் உற்பத்தி இல்லாததால் தட்டுபாடு உள்ளது.
மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவக் காற்று நன்றாக வீசியதால் காற்றாலை உற்பத்தி நன்றாக இருந்தது.
தெலங்கானா பிரச்னை:
தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை அளிப்பதில் ஆந்திர மாநிலம் சிங்க்ரனி பகுதியில் உள்ள சுரங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தச் சுரங்கத்திலுள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கியிருந்து நிலக்கரி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
நிலக்கரி கையிருப்பு உள்ள நிலையில், அனல்மின் நிலையங்கள் மூலம் மின்சார உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது.
பண்டிகைக் காலங்கள் :
தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வருவதால் துணிகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதிகநேரம் இயந்திரங்கள் இயக்கப்படுவதால் மின்சாரத் தேவையின் அளவு கூடுதலாகி உள்ளது. இந்தச் சூழ்நிலைகளை சமாளித்து மக்களுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது.
மின்சாரத்தை வெளிச் சந்தையில் இப்போது பெறமுடியாத நிலை உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார பற்றாக்குறை நிலவுவதால், ஒரு யூனிட் ரூ. 12 அளவுக்கு விற்கப்படுகிறது. அந்த அளவில் மின்சாரத்தை பெறமுடியாத சூழல் மின்சார வாரியத்துக்கு இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான ராமகுண்டம் அனல்நிலையம் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1000 மெகாவாட் மின்சாரம் வரவில்லை. காற்றின் வேகம் குறைந்து விட்டதால் காற்றாலை மின் உற்பத்தியும் தற்போது குறைந்துள்ளது. இதனால் சில தினங்களாக தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
பிரச்சினையை சமாளிக்க இன்று முதல் வெளி மாநிலங்களில் உள்ள தனியார் மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து கூடுதல் விலைக்கு 500 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்தையும் மற்ற மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த மாதம் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
காற்று வேகம் அதிகரித்தால் மீண்டும் மின் உற்பத்தி அதிகரிக்கும். வெளி மாநிலங்களில் இருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவும் 2 நாளில் அதிகமாகும். அதன் பிறகு நிலைமை சீரடையும். 6ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலைமை திரும்பும் என்று அவர் கூறினார்.
டிஎன்எஸ்

0 comments:
Post a Comment