பின்வாங்கிய சிம்பு மற்றும் தனுஷ் !!


விஜய் நடித்த வேலாயுதம், சூர்யா நடித்த ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாகின்றன. இவ்விரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவுவதாலும் மேலும் தியேட்டர் பற்றாக்குறையினாலும் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி படங்கள் விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியிருந்த மயக்கம் என்ன, மற்றும் தரணி இயக்கத்தில் சிம்பு நடித்த ஒஸ்தி தீபாவளித் திரை விருந்தாக வரும் என்று கடைசிவரை கூறப்பட்டது. ஆனால் பெரும்பாலான திரையரங்குகள் ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் படங்களுக்கே ஒதுக்கப்பட்டுவிட்டதால் இப்போது மற்ற இரு படங்களும் வெளியாவது கடினமாகிவிட்டது.

நான்கு பெரிய படங்கள் போட்டியிட்டால் தேறுவது கடினம் என்பதால், மயக்கம் என்ன படத்தை தனியாக வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். சிம்பு படத்துக்கும் அதே நிலைதான். இந்தப் படத்தில் ஒரு பாடல் வேறு இன்னமும் முடியவில்லையாம். எனவே இந்தப் படங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ரா ஒன்னுக்கு கணிசமாக திரையரங்குகள் கிடைத்துள்ளன.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content