மாற்றான் திரை விமர்சனம் - Maattraan review - maatran review

இராமச்சந்திரன் எனும் ஒரு விஞ்ஞானி, குழந்தைங்களோட வடிவத்த பத்தி ஆராய்ச்சி பண்றார். அவரோட மனைவி மேல அத சோதனையும் செய்றார், ஆனா அந்த முயற்சி தோல்வி அடஞ்சிடுது. அதனால ஒரே இதயத்தோட ஒட்டிபிரக்கறாங்க ரெண்டு சூர்யாவும். (அகிலன் & விமலன்). அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சா ஒருத்தர் இறந்துடுவாங்க, அதனால இராமச்சந்திரனோட மனைவி பிரிக்க மறுத்துடறாங்க. 

அதுக்குள்ளே இராமச்சந்திரனோட திட்டம் நிராகரிக்கப்படுது. அதுக்கப்றம், அவரு கஷ்டப்பட்டு பால் பவுடர் (Energion) தயாரிக்க அது கிளிக் ஆயிடுது. 

அதுக்கப்றம் நடக்கறது தான் மெயின் ஸ்டோரி. அகிலனாவும், விமலனாவும் நடிச்சிருக்காரு சூர்யா, ரெண்டு பேறும் ஒட்டியே இருந்தாலும், ரெண்டு பேருக்கும் வேற வேற டேஸ்ட்டு (இஸ்டக் ஆண் யூ கதை தான் கொஞ்சம்), அவங்க வாழ்க்கையில அஞ்சலி (காஜல் அகர்வால்) வராங்க, ரெண்டு பேருக்குமே காஜல் மேல ஆசை, அனால் காஜல் விமலனத்தான் விரும்பறாங்க.


ஒரு கட்டத்தில் விமலனுக்கு (ஒரு ரஷிய நிருபர் மூலமாக) (Energion) பால் பவுடரில் கலப்படம் இருப்பது தெரிய வருகிறது, அது பிற்காலத்தில் மிகப்பெரிய விளைவை உருவாக்கும்; இந்தியாவின் வருங்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை கண்டு பிடிக்கிறார். அதன் பிறகு இதை பற்றி தெரிந்து கொள்ள முயலும் பொது, நிருபர் கொல்லப்படுகிறார். யார் இதையெல்லாம் செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்று கண்டு பிடிக்க ரஷியா செல்கிறார், அங்கு பிரச்சனை மேலும் பெரிதாகிறது, அதன் பிறகு என்ன நடந்தது என்று சொல்லியிருக்கிறார் ஆனந்த்.

மாற்றான் சூர்யாவுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் எதிர் பார்த்த மாற்றமில்லை ...!

by

P Dineshkumar


சிங்கப்பூரிலிருந்து சில ரசிகர்களிடம் இருந்து வந்த தகவல்கள்:

படம் முதல் பாதி நல்லா இருக்கு, இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார்.

கே.வி.ஆனந்த் இந்த முறை சொதப்பிட்டார்.

அயன் மாதிரி இல்ல.

வித்தியாசமான முயற்சி! எல்லோருக்கும் பிடிக்குமா என்பதில் சந்தேகம்.

_______________________________________________________________________________

படத்தின் கதை, எடுக்கப்பட்ட விதம், படத்தின் வேகம் போன்றவற்றில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அனைவரின் ஒருமித்த கருத்து: ‘சூர்யா பிரமாதப்படுத்திட்டார்!’
படத்தின் முதல் பாதி முழுக்க ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ள சூர்யா, இடைவேளைக்குப் பிறகுதான் தனித்தனி சூர்யாவாக வருகிறார்.
இரண்டு சூர்யாக்கள், அதுவும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டே சண்டை போடுவதும், காதல் வயப்படுவதும் என தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத பரிமாணத்தை சூர்யா வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.
கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்பது இன்னும் சிலரின் கருத்து.
படம் சராசரிக்கு சற்று மேல் என்று கருத்து சொல்பவர்கள் கூட, சூர்யாவுக்கு 100-க்கு 100 மார்க் போட்டிருப்பது, இந்தப் படம் சூர்யாவுக்காக பாக்ஸ் ஆபீஸில் நின்றுவிடும் என்று கூறலாம்.

_______________________________________________________________________________


ஹீரோவோட அப்பா பெரிய  பேபி மில்க் பிராடக்ட் ஓனர். வெற்றிகரமா தொழில்ல முன்னேறியவர்.அவர் எப்படி மற்ற போட்டி கம்பெனிகளை எல்லாம் சர்வசாதாரணமா அடிச்சு முன்னேறுதுன்னு எல்லாருக்கும் ஒரு குழப்பம்.அப்போ ஒரு ஃபாரீன் லேடி பத்திரிக்கை ரிப்போர்ட்டர் என்ற போர்வையில்  அவர் கம்பெனிக்கு வந்து அவரை பேட்டி எடுக்கற சாக்குல  தொழில் ரகசியம் , அந்த பால் ஃபார்முலா ரகசியம் எல்லாம் தெரிஞ்சுக்கறா. 

இப்போ ஒரு திருப்பம். அந்த ஃபாரீன் லேடி பிரஸ் ரிப்போர்ட்டரும் இல்லை, போட்டி கம்பெனியும் இல்லை. ஃபாரீன் உளவாளி.ஹீரோவோட அப்பா தான் வில்லனே.

ஒலிம்பிக்ல  நடக்கும்  விளையாட்டு போட்டிகளில் யூ எஸ் பல தங்க பதக்கங்கள் வாங்க குறுக்கு வழியா ஊக்கமருந்து கண்டு பிடிக்கறார். சோதனைல யாராலும் கண்டு பிடிக்க முடியாத ஃபார்முலா . அந்த ஃபார்முலா சக்சஸ் ஆகி யு எஸ் அவரை கொண்டாடுது. அந்த ஃபார்முலாவை கொஞ்சம் சேஞ்ச் பண்ணி குழந்தைகளுக்கான பால் பவுடர்ல மிக்ஸ் பண்றாரு. 

 இதன் படி பசுக்கள்  2 மாதத்தில் வாழ்நாள்ல எவ்வளவு பால் கறக்க முடியுமோ அத்தனையும் கறக்கலாம். ஆனா பிற்காலத்துல இது ஆபத்து . ஒரு தலை முறையையே பாதிக்கும். சொந்த அப்பாவா இருந்தாலும் எப்படி பையன் அந்த சதியை முறியடிக்கறான் என்பதே கதை.. 


படத்தோட முதல் ஹீரோ எழுத்தாளர் சுபாதான். படத்தின் கதை வசனம் எல்லாம் அவர் தான். ஆனா டைட்டில்ல வசனத்துக்கு மட்டும் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க.. படத்துல ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கு.. சுவராஸ்யம் கருதி அதெல்லாம் சொல்லலை,.,. படத்தின் முன் பாதி வேகம் பின் பாதில மிஸ்சிங்க்... 

ஹீரோ சூர்யா ட்வின்ஸ்ஸா வரும்போது இரு மாறுபட்ட கேரக்டர்ஸ்க்கான வேறுபாட்டை வழக்கம் போல் நல்லா காட்டி இருந்தாலும் இடைவேளை டைம்ல இருந்துதான் அவர் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகுது..  சண்டைக்காட்சிகளில் பல இடங்களில் சாகசம் காட்டி இருக்கார். ஏழாம் அறிவு பாதிப்பு ஆங்காங்கே இருக்கு அவர் நடிப்பில் . குறிப்பாக சண்டைக்காட்சிகளில்// . ஆனால் ஏழாம் அறிவில் விட்டதை இதுல பிடிச்சுட்டார்னு சொல்லலாம்../ 

ஹீரோயின் கா ஜில்  வாவ் லால் சாரி காஜல் அகர் வால்.. ஒரு டன் கனகாம்பரப்பூக்க்களை ராட்சச மிக்சில அரைச்சு செய்யப்பட்ட மினியேச்சர்  பீட்ரூட் அல்வா அவர் உதடு. வாழை மரத்துக்கு ரோஸ் பவுடர் போட்டு விட்ட மாதிரி அவர் இடுப்பு ஐ மீன் இடை.. அவர் ஸ்லோ மோஷன்ல ஓடி வரும்போது பேக் கிரவுண்ட்ல  துள்ளி எழுந்தது காத்து சின்ன குயில் இசை கேட்டு பாட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டேன்.. நடிப்பு சொல்லிக்கற அளவு இல்லைன்னாலும் ஜொள்ளிக்கற அளவு இருக்கு. இது போதாதா? தமிழ் நாட்டின் சி எம் ஆகவே ஆகலாம்..


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஸ்டக் ஆன் யூ ஆங்கிலப்பட காப்பின்னு படத்தோட  ஸ்டில் வெளியானதும் தகவல் பரவியதும் படத்தோட கதையை அவசர அவசரமா மாத்தி  சரியா செட் ஆகற மாதிரி செஞ்சது.

2. சாருலதா படத்தின் சாயல் அந்த ட்வின்ஸ் பிரிப்பு  , ஒருவர் உயிர் துறப்பு மேட்டர்ல இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிக்காதவாறு திரைக்கதை அமைத்தது.

3. ஒளிப்பதிவு . லொக்கேஷன்கள் கலக்கலாய் அமைச்சது. கோ படத்துல பாடல் காட்சிகள் எப்படி சிலாகிக்கப்பட்டனவோ அதே போல் அந்த ஒற்றைப்பாறை காட்சி , மலை அருவிகள் இயற்கைக்காட்சிகள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது

4. படத்துல ஏகப்பட்ட திருப்பு முனை காட்சிகள். சில யூகிக்க முடிந்தவை , சில எதிர்பாராதவை. ஒரு நாவல் ஆசிரியர் எழுத்தை நம்பினார் கை விடப்படார் என்ற பாசிட்டிவ் எண்ணத்தை நிலை நிறுத்தியது

5. படத்தின் கதை அனுமதித்தும் ஹீரோ டாமினேஷனோ பஞ்ச் டயலாக்சோ இல்லாமல் இது டைரக்டர் படம் என சொல்ல வைத்தது.

6. ஹீரோவுக்கு  ஹீரோயின் எட்டாக்கனி என்பதை யாரும் கண்டு பிடிக்காத முறையில் கேமரா கோணங்களை வைத்தது..

7. பேசிக் இன்ஸ்டிங்க்  ஹீரோயின் ஷெரன் ஸ்டோன்  சாயலில் ஒரு ஃபாரீன் லேடியை சிறப்பாக நடிக்க வைத்தது , கா”ஜில்” அகர்வால் தக்கபடி உபயோகித்தது


 இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. ப்டத்தோட ஓப்பனிங்க் சீன்லயே  ஹீரோ ஸ்லிப் ஆகி  கீழே விழுவது போல் அமங்கலமான  சீன் எதுக்கு? சூர்யா ர்சிகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா? 

2. சூர்யாவோட அப்பா தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியில் பாத்ரூம் கதவை தாழ் போடாமல் இருப்பது ஏன்? தற்கொலை செய்பவர்கள் முதலில் செய்யும் காரியமே கதவை உள் பக்கம் தாழ் போடுவதுதானே? 

3. உண்ணாவிரதம் இருக்கும் தொழிலாளிகள் பாத்ரூமில் ஒளிச்சு வெச்சு சாப்பிடும் காட்சி உவ்வே + பல படங்களில் வந்தவை 

4. காஜில் அகர்வாலுக்கு அந்த  சோடா புட்டி கண்ணாடி பார்ட்டி செந்தமிழில் காதல் கடிதம் தருவது அந்நியன் அக்மர்க் ஸ்டைல். இதை சமாளிக்க ஹீரோயினே என்ன அந்நியன் ஸ்டைலா? என்ற வசனம் வேறு 

5. ஃபாரீன் லேடி  மில்க் கம்பெனிக்கு வந்து சர்வ சாதாரணமா டாக்குமெண்ட்சை ஃபோட்டோ எடுப்பது எப்படி? மேஜை டிராயர்க்கு லாக் எல்லாம் கிடையாதா? கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள ஃபார்முலாவை இப்படித்தான் அலட்சியமாய் தொறந்து போட்டுட்டு போவாங்களா? அது என்ன நமீதா ஜாக்கெட்டா? 

6. சூர்யாவோட அப்பா அந்த ஃபாரீன் லேடியை உளவாளின்னு கண்டு பிடிச்சதும் குஜராத் போகும்போது ஏன் தன் பசங்க கிட்டே அவ பற்றி எச்சரிக்கை  பண்ணலை? நான் இல்லாத சமயம் இவ வந்தா சேர்க்காதீங்க.. அப்டினு ஃபோட்டோ காட்டி இருக்கலாமே? 


7. ஃபார்முல்கா சீக்ரெட் தந்த பின் மொத்தமா பணம் தராம அந்த ஃபாரீன் லேடி ஏன் தவ்ணை முறைல பணம் தர்றா? கையில காசு வாயில தோசை ஃபார்முலாவை ஃபாலோ பண்ணலை , ஏன்? 

8. படத்தோட ஹீரோ சூர்யா என்ன ஷகீலாவா? அவர் குளிக்கறதை ஏன் விலா வாரியா காட்டனும்? ட்வின்ஸ் எவ்வளவு சிரமப்படறாங்க என்பதை காட்டத்தான் குழந்தையா இருந்தப்ப , சிறுவனா இருந்தப்போ காட்சிகள் வெச்சாச்சே? ஒரு வேளை கமல் மாதிரி பாடியை காட்டியே தான் ஆவேன்னு அடம் பிடிச்சாரா?

9. ஃபாரீன் லேடி தன் ஹேண்ட் பேக்ல முக்கியமான ஆதார ஃபோட்டோக்களை அசால்ட்டா டேபிள்ல வெச்சுட்டு ஏதோ ஃபோன் வந்ததுன்னு அதை அப்படியே சூர்யா முன்னாடி வெச்சுட்டு அந்த பக்கம் போவது ஏன்? நானா இருந்தா அந்த பேக்கையும் கையில எடுத்துட்டு போய் இருப்பேன் 

10. தன் சொந்தக்குழந்தையை கொலை பண்ண முடிவு எடுக்கும் சொந்த அப்பா அதுக்கு ரொம்ப ஈசியான வழி 2 பேரும் தூங்கும்போது கொல்வதே. அதை விட்டுட்டு ட்வின்ஸ்ல ஒரு ஆள் விழிச்சிருக்கும்போது எந்த லூஸ் அப்பாவாவது  இன்னொரு குழந்தையை கொலை பண்ண ட்ரை பண்ணுவாரா? அந்த குழந்தை அம்மா கிட்டே சொல்லிடும்னு தெரியாதா? 

11. திருப்பத்துக்கு மேல் திருப்பம்  வேணும்கறதுக்காக க்ளைமாக்ஸ்ல சூர்யாவின் ”ராவணன்” ரகசியம் தேவையா? 

12. படத்துக்கு முக்கியமான காட்சியான ஃபாரீன் லேடி பென் ட்ரைவரை விழுங்குவது நம்ப்ற மாதிரியே இல்லையே? அதெப்பிடி தண்ணீர் இல்லாம ஒரு பென் டிரைவரை விழுங்க முடியும்? 

13. வில்லன் ஃபோன் நெம்பரை சூர்யா கண்டு பிடிச்சதும், மேனெஜர் கிட்டே  அந்த நெம்பரை சொல்லி ஃபோன் போடுங்க அப்டினு சொல்லும்போது வில்லன் டக்னு செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்கலாமே? ஏன் பேக்கு மாதிரி மாட்டிக்கறான்? டக்னு பேட்டரியை கழட்னாக்கூட போதுமே? 

14. மெடல் லேடி கிட்டே சூர்யா  ஹோட்டல்ல ஹால்ல எல்லாரும் பார்க்கும்போது லேப்டாப்பை ஓப்பன் பண்ணி அந்த ரகசியத்தை பற்றி டிஸ்கஸ் பண்றாரு. ஏன்? வில்லன் பார்க்கட்டும்னா? தனி ரூமுக்கு கூட்டிட்டு போய் செய்ய வேண்டியதுதானே? 

15.   காஜல் அகர்வால் லவ் பண்ணுன ஹீரோ சூர்யா ஆள் அவுட். அவரோட இதயத்தை பொருத்திய இன்னொரு சூர்யா தான் இப்போ உயிரோட . அதாவது நீ வருவாய் என படத்துல அஜித் கண்கள் ஆர் பார்த்திபன் கிட்டே பொருத்தப்பட்டதும் தேவயானிக்கு ஒரு குழப்பம் வருமே அந்த மாதிரி காஜல்க்கு நோ குழப்பம். எவனா இருந்தா எனக்கென்ன? சம்பளம் குடுத்தா சரி அப்டிங்கற மாதிரி லவ்வறது சரியா? கொஞ்சமாச்சும் தடுமாற்றம் , யோசனை வராதா? 

-----courtesy: அட்ராசக்கை


படம் பார்த்தவர்களிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் விமர்சனத்தை கொடுத்த தினேஷ்குமார் அவர்களுக்கும், அட்ராசக்கை தளத்திற்க்கும் நன்றி!

1 comments:

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content