இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மற்றும் 5 ஒரு நாள் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வருகிற நவ.,6 ஆம் தேதி தலைநகர் டில்லியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான தேர்வு நேற்று மாலை கொல்கத்தாவில், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலமையில் நடைபெற்றது. அதன்படி இந்திய அணியில் அதிரடி மாற்றங்களாக 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளது.
காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடமல் போன சீனியர்கள் சச்சின், சேவாக் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல் படாத ஹர்பஜன் நீக்கப்பட்டு தமிழக வீரர் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அது...
சென்னையில் கடந்த புதன் கிழமை தீபாவளியன்று, மழையையும் பொருட் படுத்தாமல் திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. காரணம் ஆர்ப்பாட்டமாக மூன்று பெரிய படங்கள் வெளியாகியன.
ஒன்று பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான சூர்யாவின் "ஏழாம் அறிவு", மற்றொன்று இந்தியாவிலே பெரிய எதிர்ப்பார்ப்புடன் ஷாருக்கான் மற்றும் ரஜினி (சில காட்சிகள்) நடித்து வெளியான "ரா ஒன்", இவையிரண்டுடன் ஒப்பிடுகையில் சற்று எதிர்ப்பார்ப்பில் பின் தங்கி வெளியான விஜய் நடித்த வேலாயுதம்.
மேலும் ஏழாம் அறிவு மற்றும் ரா ஒன் படங்கள் முடிந்த அளவிற்கு முதல் தர திரையரங்களிலே வெளியாயின. தமிழ் நாட்டைப் பொருத்த வரை, வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவுக்கும் இடையே போட்டி நிலவியதால் ஓபனிங்கை...
பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் "விண்டோஸ்" எனும் இயங்குதளம் (Operating System) கொண்டு இயங்கவல்ல இரண்டு ஸ்மார்ட்போன்களை நோக்கியா நிறுவனம் இன்று அறிமுகப் படுத்தியுள்ளது.
ஒன்று லுமியா 800 !
இது பேஸ்புக் போன்ற சமுக வலை தளங்களை சப்போர்ட் செய்வது மட்டுமில்லாமல் நேவிகேஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ .28000 மட்டும்
மற்றொன்ரு லுமியா 710
இதில் 1.4 GH புராஸசர் பொருத்தப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸள் கொண்ட கேமரா, எல்.ஈ.டி பிளாஷ் மற்றும் இன்டர்னள் மெமரி 8 GB ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன்கள் மைக்ரோசாப்ட் மற்றும் நோக்கியா நிறுவனத்தின்...
இயக்குனர்: ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பாளர்: உதயநிதி ஸ்டாலின்
கதை: ஏ. ஆர். முருகதாஸ்
நடிப்பு:
சூர்யா
சுருதி ஹாசன்
ஜானி ட்ரை ஙுயென்
இசை: ஹாரிஸ் ஜயராஜ்
ஒளிப்பதிவு: ரவி கே. சந்திரன்
இணையதளங்களில் ஏழாம் அறிவு படத்திற்கு ஆஹா ஓஹோ எனப் பாராட்டுகள் ஒரு பக்கம் குவிந்தாலும், இன்னொரு பக்கம் மொக்கை, சுமார் என்றும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. எதில் உண்மை என்பதே குழப்பமாக உள்ளது. படத்தை பார்த்த பிறகு தான் தெரிகிறது ஏன் இந்த முரண்பாடான கருத்துக்கள் என்று.
படத்தில் பணியாற்றியிருப்பவர்களை பற்றி பெரிதாக விவரிக்க தேவையில்லை, படத்தின் கதையைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுறத்தில் வாழ்ந்த போதி தர்மர் சீனாவிற்கு...
கீழ்காணும் பொது விடுமுறை தினங்கள், அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேஷன்களுக்கும், வாரியங்களுக்கும் பொருந்தும்.
1. புத்தாண்டு தினம் ஜனவரி 1 (ஞாயிறு)
2. பொங்கல் ஜனவரி 15 (ஞாயிறு)
3. திருவள்ளுவர் தினம் ஜனவரி 16 (திங்கள்)
4. உழவர் திருநாள் ஜனவரி 17 (செவ்வாய்)
5. குடியரசு தினம் ஜனவரி 26 (வியாழன்)
6. மிலாடி நபி பிப்ரவரி 5 (ஞாயிறு)
7. தெலுங்கு வருட பிறப்பு மார்ச் 23 (வெள்ளி)
8. வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு ஏப்ரல் 2 (திங்கள்)
9. மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 5 (வியாழன்)
10. புனித வெள்ளி ஏப்ரல் 6 (வெள்ளி)
11. தமிழ் புத்தாண்டு தினம் ஏப்ரல் 13 (வெள்ளி)
12. டாக்டர் அம்பேத்கார் பிறந்த...
ஒரு காலத்தில் மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக கடிதம் மற்றும் தந்தி என்றழைக்கப்பட்ட விரைவு குறுந்தகவல் போன்றவற்றை பயன்படுத்தினர். பிற்காலத்தில் தொலைபேசி மற்றும் செல்போன்களின் வரவால் கடிதம், தந்தி மதிப்பிழந்து போனது.
தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட தொலைபேசி, தற்போது விளம்பரச் சேவை என்கிற பெயரில் தொல்லை தர ஆரம்பித்துள்ளன இந்த செல்போன் நிறுவனம் மற்றும் பொது நிறுவனங்கள்.
பொது நிறுவனங்கள் விளம்பரச் சேவைக்காக ஒரு குருந்தகவல் ஒன்றை ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து அனைத்து செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்புகிறது. இது போன்ற பலதரப்பட்ட பொது நிறுவனங்களின் குருந்தகவல்களால், வேலையில் அல்லது கல்லூரியில் இருக்கும் நமக்கு, மிகவும்...
இந்திய அணி கிரிக்கெட்டில் பங்குபெற்று, முதன் முதலாக 300 ரன்களை சேர்க்க சுமார் 22 ஆண்டுகள் எடுத்துகொண்டது, சின்ன அணி என்று குறிப்பிடப்படும் ஜிம்பாப்வே கூட இந்த 300 ரன்களை வெகு குறுகிய காலகட்டத்தில் எட்டிவிட்டது. 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை இந்தியா தனது 300 ரன்களை சேர்த்து, தன்னையும் சாதனை படைத்த அணிகளுடன் தடம் பதித்துகொண்டது.
அதன் பிறகு இந்தியா அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்கியது. நேற்று முன் தினம் மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 300 ரன்களை குவித்தது. இதன் மூலம் 65 வது முறையாக் 300 ரன்களை கடந்து இந்தியா ஆஸ்த்ரேலியாவின் சாதனை முறியடித்துள்ளது.
இந்த 65 முறைகளில், 16 முறை இரண்டாவது பேட்டிங் தேர்வு செய்து...
தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1 முதல் பாகம்
முதல் பாகத்தில் முடியை பற்றி அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்த்தோம், இப்போது முடி உதிர்வின் காரணங்களை பார்ப்போம்.
ஒரு கேசத்தின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அது உதிர்ந்து விடும், அடுத்து பிற வேர்களிலிருந்து புதிய கேசம் வளரும். இவ்வாறு பழைய கேசம் உதிர்வதும் வளர்வதும் அன்றாடம் நடக்கும். உதிரும் அளவும் வளரும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக உதிர்வது அதிகாமாக இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இயல்பாகவே 70 முதல் 100 கேசங்கள் வரை உதிர்ந்து விடும். பெண்கள் தலை வாரும் போது 10-20 கேசங்கள் வருவது இயல்பான ஒன்று. கொத்துக் கொத்தாக உதிர்வது இயல்பை மீறிய ஒன்று, அதன் காரணங்களை...
சிம்பு தனது ரசிகர்களுக்காக கொடுத்த சிறு பேட்டி
'தபாங்' சல்மான் கேரியரில் அல்டிமேட் ஹிட். 'ஒஸ்தி' உங்களுக்கு அப்படி அமையுமா? 'தபாங்' செமத்தியான ஒரு போலீஸ் படம். ஆனா, முரட்டுத்தனமா பெரிய மீசை வெச்சுக்கிட்டு, நரம்பு தெறிக்கிற மாதிரி பேசிக்கிட்டு இருக்கிற போலீஸ் இல்லை இது. விஜய் கேரியரில் 'கில்லி' அடிச்ச தரணி துணைக்கு வந்தார். அந்த மாஸ் இந்தப் படத்தில் அப்படியே இருக்கு. தொண்ணூறே நாள்ல படத்தை முடிச்சுக் கொடுத்தார். சல்மான் மாதிரியும் பண்ணக் கூடாது. சல்மான் செஞ்ச சில விஷயங்களைப் பண்ணாமலும் இருக்க முடியாது. முதல் நாள், முதல் ஷாட் எடுக்கிறவரை யோசனையா இருந்தது. ஆனா, அப்புறம் அடி பின்னிட்டோம். இதுவரை இப்படி ஒரு மாஸ் ஃபிலிம் நான் செய்தது இல்லை....
இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமெக் படமான ஓஸ்தி, தரணியின் இயக்கத்தில் சிம்பு மற்றும் புதுமுகம் ரிச்சா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சற்றும் எதிர்பாராமல் நடிகர் விஜய் கலந்து கொண்டு பாடல் கேசட்டை வெளியிட்டார்.
விஜயைப் பார்த்து விழாவில் கலந்து கொண்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர், காரணம் சிம்பு, "தல" அஜித்தின் தீவிர ரசிகன் ஆயிற்றே. இவ்விழாவில் இயக்குனர் தரணி, பாடாலாசிரியர் வாலி, சிம்புவின் தந்தை டி.ஆர் ராஜேந்திரன் மற்றும் நடிகர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினை பற்றி சிம்பு தனது பேஸ்புக்கில், பாடல்...
டுமாரோ நெவர் டைய்ஸ் எனும் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த பெரும் வெற்றிப் படம். அப்படத்தை இயக்கிய ரோஜர் ஸ்போட்டிஸ்வுட் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் நடிகர் ஒருவர் நடிக்கிறார். அவர் தான் நம்ம சித்தார்த்.
ரங் தே பசந்தி படத்தில் ரோஜரை மிகவும் கவர்ந்த சித்தார்த், இப்படத்தில் கணித மேதை ஸ்ரீநிவாச இராமானுஜமாக நடிக்கிறார். சித்தார்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மக்களைத் தொடர்ந்து உலக மக்களிடையே பிரபலமாகப் போகிறார். தற்போது சித்தார்த் தீபா மேத்தா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
சிலம்பரசன் ஜீவா இடையே சிறிது காலமாக புகைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது. கோ திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது, பின்பு அதில் ஜீவா நடித்தார். சிம்புவின் இடத்தில் ஜீவாவா? என்று பலதரப்பட்ட கேள்விகள் எழும்பின. ஆனால் படத்தின் வெற்றி ஜீவாவும் சளைத்தவர் அல்ல என நிரூபித்தது. அது முதல் ஜீவாவும் சிம்புவும் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒருவரை ஒருவர் பற்றி பேசிவந்தனர்.
இப்போது சிம்பு தனது ஓஸ்தி பட வெளியீட்டு வேலைகளில் உள்ளார், அடுத்ததாக போடா போடி படத்தில் இறங்குவார். தற்போது கௌதம் மேனன் இயக்கும் நீதானே எந்தன் பொன்வசந்தம் படத்தில் ஜீவா நடிக்கிறார். போடா போடியும், நீதானே எந்தன் பொன்வசந்தம் படமும் காதலர் தின படமாக வெளிவர உள்ளது....
விஜய்யின் வேலாயுதம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரூ.2 கோடி செலவு செய்து இருந்தார். இரண்டு கோடி செலவில் எடுக்கப்படும் காட்சிகள் மிகப் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இந்த சாதனையை முறியடித்துள்ளது விக்ரமின் ராஜபாட்டை.
தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை முடித்துள்ள ராஜபாட்டை படக்குழு, படத்தில் அப்பகுதிக்கு மட்டும் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாயை செலவழித்துள்ளது. காட்சிகள் நன்கு வரவேண்டும் என்பதற்காக செலவை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தியுள்ளார் சுசீந்திரன். கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என கூறப்படுகிறது. ஒரு கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் அதிக செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட...
கேசத்தின் அடிப்படை
கேசம் ஏன் உதிருகிறது என்பதை தெரிந்து கொள்ள கேசம் குறித்த சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். நமது கேசம் இறந்த திசுக்களால் ஆன மெல்லிய ஆனால் உறுதியான ஒரு பாகம். இவை கெராட்டின் என்ற ஒரு வகை புரதத்தால் உருவானவை.
உள்ளமைப்பு
கேசத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்
1. தோலுக்கு வெளியே
2. தோலுக்கு உள்ளே
தோலுக்கு வெளியே இருக்கும் பகுதியின் பெயர் கேசத் தண்டு (Hair Shaft) , தோலுக்கு உள்ளே இருக்கும் பகுதியின் பெயர் கேச வேர் (Hair Root). கேசத் தண்டில் மெடுலா (Medula)எனும் உட்பகுதி, கார்டெக்ஸ் (Cortex) எனும் வெளிப்பகுதி உள்ளது. கேச வேர்களில் அடிப்பகுதி பெரிதா இருக்கும் அதை கேசக் குமிழ் (Hair Bulb) என்கிறோம், அது பாலிக்கிள்...
ரெட் ஜாயின்ட் மூவிஸின் ராஜெஷ் இயக்கி உதயநிதி நடித்த ஓகே ஓகே படம் திரைக்கு விரைவில் வெளிவர வரவிருக்கிறது. இப்படத்தின் ட்ரைலர் விஜய் நடித்து திபாவளியன்று இருக்கும் வேலாயுதம் படத்தின் நடுவே திரையிடப்படவுள்ளனர். இதற்காக அவர் வேலாயுதம் படத்தின் தயாரிப்பாளரான ரவிசந்திரனக்கு நன்றி தெரிவித்துள்ளர். அதேசமயம் இப்படத்தின் ட்ரைலர் ஏழாம் அறிவு படத்தின் நடுவேவும் வருகிறது. உதயநிதி பிழைக்க தெரிந்த மனிதராயிற்றே... வெகு சாதாரனமாக பெரிய விளம்பரத்தை தேடிக்கொள்கிறார்....
இன்றைய மேற்கத்திய கலச்சார வாழ்க்கையில் ஜீன்ஸ் ஆடை நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண், பெண் என இருபாலரும் அணியும் நாகரீக உடை என்றே கூறலாம். அதைவிட இத்தகைய உடை ஆண்களை விட பெண்களே அதிகமாக விரும்புகின்றனர், காரணம், ஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தால் போதும், டி-சர்ட், ஷார்ட் டாப்ஸ், சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அது மட்டும் இன்றி வெளியில் செல்லும்போது அது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக பெண்கள் கருதுகின்றனர். அத்தகைய உடை வடிவமைப்பு மற்றும் தயாரிக்கும் முறை பற்றிய வீடியோ பதிவு உங்களுக்காக....