மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு; 21 பேர் பலி; காயம் 141

மும்பையில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 141 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று 7.10 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுஸ் ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பை தொடர்ந்து மும்பை முழுவதும் மக்களிடையே பதட்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
நகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே குண்டுவெடிப்பு குறித்த தகவலறிந்து, மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங், மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை டிஜிபி-யை தொடர்புகொண்டு பேசினார்.
முதல் குண்டுவெடிப்பு ஜவேரி பஜாரில் இரவு 7.10 மணி அளவிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தாதர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த டேக்ஸி ஒன்றிலும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடித்தது எந்த வகையான குண்டு என்பது குறித்து உடனடியாக எதுவும் கூற இயலவில்லை என்றும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்த மும்பை காவல்துறை உயரதிகாரி ஒருவர், தாதரில் நடந்த குண்டுவெடிப்பு இடத்தில் டிபன் பாக்ஸ் ஒன்று கிடந்ததாக தெரியவந்துள்ளதாகவும், எனவே வெடித்தது டிபன் பாக்ஸ் வெடிகுண்டா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் இந்தியன் முஜாஹிதீனின் கைவரிசை இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அனைத்து குண்டுவெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களிலும், பரபரப்பான நேரத்திலும் நடந்துள்ளது.இந்நிலையில் குண்டுவெடிப்பை தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content