தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

செல்லப் பிராணி வளர்ப்பவரா நீங்கள்?

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்தல் அதன் மீது உள்ள ஆர்வம், அன்பு, பொழுதுபோக்கு என ஏதேனும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதனை சரி வர வளர்ப்பதும், கவனிப்பதும், ஆரோக்கியமாக பாதுகாப்பதும் ஒரு சிலரே. நாய் மற்றும் பூனை வளர்ப்பவர்கள் இதனை தொடர்ந்து படிக்கலாம். மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம். நமக்கு சர்க்கரை நோய் வருவது போல், நாம் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய், பூனைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும். இது எத்தனை பேருக்கு தெரியும். மனிதர்களை போலவே மிருகங்களுக்கும் சர்க்கரை நோய் கண்டறியபடுகிறது. இரத்தத்தில் குளுகோஸின் அளவை பொறுத்தே சர்க்கரை நோயின் அறிகுறிகள் சொல்லப்பப்படுகிறது. இன்சுலின் (கணையநீர்) எனப்படும் சுரப்பிதான் குளுகோஸின் அளவையும், குளுகோஸினை...

இலவசமும், இலவச மடிக் கணினியும்

மாணவ-மாணவிகளுக்கு மடிக் கணினி வருகிறது. ஆம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் இலவசக் கணினி வழங்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் இலவசக் கணினி வழங்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் (ஒப்பந்தப் புள்ளி) அறிவிப்பை எல்காட் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். அதில் எச்.சி.எல்., விப்ரோ, எச்.வி. சோனி, லெனோவா, டெல், ஏசர், ஜெனித், சாம்சங், எல்.ஜி., இன்டெல் போன்ற 85-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. சில விதிமுறைகளின் கீழ் அனைத்து நிருவனங்களும் பங்கேற்றன. அனைத்து நிருவனங்களும் வைப்புத் தொகையாக தலா 20 லட்சம் கட்டியிருக்க வேண்டும், மடிக் கணினியில் தமிழ், ஆங்கிலம் (மென்பொருள்) சாப்ட்வேர்...

செல்போனில் ஆபத்து!!!

செல்போனில் பண பரிவர்த்னை - இன்று தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் நமது வாழ்க்கைமுறையும், வேலையும் மிக எளிமையகியுள்ளது என்றால் அது மிகை ஆகாது. அதே நேரம் அவையால் விளையும் ஆபத்துகள் கற்பனைக்கு எட்டாதவை. இன்று வங்கியின் பண பரிவர்த்தினை மற்றும் பண பரி மாற்றத்தினை வீட்டில் இருந்தோ (அ) நாம் இருக்கும் இடத்தில் இருந்தோ கைப்பேசியின் (செல்போன்) மூலம் செய்யும் அளவிற்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது. அதே சமயம் இதனால் விளையும் அபாயங்களை நாம் அறியாதது நம் அறியமையே. இந்த பரிவர்த்தினை ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் நவீன ரக கைப்பேசியின் மூலம் செய்யப்படுகிறது. இவ்வகையான கைப்பேசிகள் இயங்கு தளங்களின் (Operatin System) அடிப்படையில் இயங்குகின்றன....

நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா???

தண்ணீர் நமக்கு எவ்வளவு தேவை, அதன் முக்கியத்துவம், அனைத்தும் தெரியும். இருந்தும் நிறைய கேள்விகள் நமக்கு தோன்றின. தண்ணீர் எப்போது ஆபத்தானவை? நாம் தினமும் பருகும் தண்ணீர் சுத்தமாக சுகாதாரமாக உள்ளதா? இதில் நாம் எந்த அளவு அக்கறை கொண்டுள்ளோம்?  குழாய் தண்ணீரை விட போத்தல்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் சுத்தமானதா? வீட்டில் தண்ணீரை எப்படி பாதுகாப்பானதாக மாற்றுவோம்? இதற்கெல்லாம் பதில் நம்மிடம் உள்ளதா??? நமக்கு கிடைக்கின்ற தண்ணீர் ஆழ்துளைக் கிணறு (Borewell), மாநகாரட்சி வழியாக வழங்கப்படுவது, அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water), கனிம நீர் (Mineral Water), கிணறு, குளம், மழை ஆகிய வழிகளில் இருந்தே வருகிறது.இந்த வகைகளில் வரும் தண்ணீரை மக்கள் தங்கள்...

கூகுள் பிலஸில் -- 20 நாளில் 20 மில்லியன் பயனர்கள் !!

இருபதே நாளில் 20 மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளது கூகுள் ப்ளஸ். குறிப்பாக இந்தியாவில் மட்டும் 20 லட்சம் பேர் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்துள்ளனர். பேஸ்புக்குக்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது கூகுள் ப்ளஸ். சோதனை ஓட்டமாக அறிமுகமானபோதே பல லட்சம் பேர் இதனைப் பயன்படுத்த முனைந்ததால், சர்வர் திணறும் அளவுக்கு நிலைமை போனது. இப்போது முழு வீச்சில் பயனர்களுக்கு கிடைக்கிறது கூகுள் ப்ளஸ். தினமும் பல லட்சக்கணக்கானோர் இந்த தளத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் வரையிலான 20 நாட்களில் உலகம் முழுக்க 20 மில்லியன் பயனர்கள் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்துள்ளனர். இவர்களில் 50.31 லட்சம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்....

பேரழிவை ஏற்படுத்த இருக்கும் மஞ்சள் காமாலை!!

 ஆசியாவின் தென்பகுதி மற்றும் தென்கிழக்கு நாடுகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மஞ்சள் காமாலை (அ) கல்லீரல் அழற்சி நோயினால் கொல்லப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (ஜெனீவா, சுவிட்சர்லாந்து) தெரிவித்துள்ளது. இவை மனிதனின் உடம்பில் உள்ள கல்லீரல் பாதிக்கப்படும் போது இந்த நோய் உருவாகிறது. நீர் மற்றும் தொற்று இந்த நோய் மூலமாக பருவுகிறது. இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தை இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு நாடும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக கருத வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில், மலேரியா, டெங்கு அல்லது எயிட்ஸ் நோயினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இந்த மஞ்சள்...

சீனாவில் பறக்கும் புல்லட் ரயில்கள் மோதல், 30 பேர் பலி, 180 பேர் காயம்.

சீனாவின் கிழக்கு மாகணமான ஸேஜியாங் நகரத்தில், நேற்று இரவு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. முதலில் சென்று கொண்டிருந்த ரயில் மின்னல் தாக்குதல் காரணமாக மின்சார இணைப்பை இழந்து நின்று கொண்டிருக்கையில் பின் தொடர்ந்து வந்த அதிவேக புல்லட் ரயில் நின்ற ரயிலின் மீது மோதியது. இந்த விபத்து 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் நடந்ததால் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு கீழே விழுந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்தோர் எண்ணிக்கை 200 ஆகவும், 35க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருக்க கூடும் என அந்நாட்டின் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த விபத்து அந்த நாட்டின் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து நிகழ்ந்த ரயில்கள் டி பிரிவினை சேர்ந்தவை ஆகும்....

எங்கே தேடுவேன்? தமிழை எங்கே தேடுவேன்??

தமிழை எங்கே தேடுவேன்...

மலையாள நட்சத்திரங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை

மோகன் லால் மற்றும் மம்மூட்டி வீடுகளில் இன்று காலை 6.30 மணியிலிருந்து சோதனையிட ஆரம்பித்தனர்.அதிகாரிகளிடம் பல ஆவனங்கள் சிக்கியாதக தெரியவந்துள்ளது. அதில் அதிகார பூர்வமாக தெரிந்த ஒரு தகவல், மோகன் லால் தனது கொச்சி வீட்டில் யானை தந்தம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மற்ற தகவல்கள் வெளியே வரவில்லை. இருவருக்கும் சேர்த்து மொத்தம் 18 இடங்களில் வருமானா வரி சோதனை நடக்கிறது. இதில் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், ஓட்டல்களும் அடங்கும்....

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினச் சிறப்பு கட்டுரை "உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன்." "நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்." "ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் பார்த்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர்." "உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் அனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது." "பனைமரம்: தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன். தென்னைமரம்: தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால்...

இன்ப துன்பம் காரணத்தோடு வருகிறது - புத்தர்

தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும்.அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள்.‘நான்’ என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும்பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத்தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும்.அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்துகொள்ளும் வரை ‘நான்’ என்ற மயக்கம் இருக்கும்.வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள்அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது.காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒருகாரணத்தோடுதான் வருகிறது.கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய்உருவெடுக்கிறது....

குளு குளு குடகு

ஊட்டி, கொடைக்கானல் அல்லது மூணாறு ஆகிய இடங்களுக்கு போய் அலுத்து போனவர்களுக்கு ஒரு மாற்று  விடுமுறை கொண்டாட்டமாக இருப்பது குடகு மாவட்டம். அதாங்க கூர்க் (Coorg). கர்நாடகாவில் உள்ள ஒரு சிறந்த சுற்றுலா தளம் தான் கூர்க். மைசூரில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள கூர்கில், காபி, ஏலக்காய், மிளகு இவை அனைத்தும் தாண்டி அனுபவிக்க நிறைய உள்ளது. மடிக்கேரி இதன் தலைநகரம், நல்ல கடை தெருக்களும் மற்றும் சிவப்பு-கூரைகள் கொண்ட இந்திய மலை வீடுகளும் கொண்டதாகும். மடிக்கேரி அருகில் சுமார் 30 கிமீ தொலைவில் புத்த துறவிகள் மடம் உள்ளது. 1963 ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது, அவ்விடத்தை தங்க கோவில் அதாவது கோல்டன் டெம்பிள் என்று அழைக்கின்றனர்.  புத்த மதத்தினை பற்றி...

சென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம்!!!!!

சென்னை: அடிப்படை வசதிகளில் பின் தங்கும் நகரம். இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் சென்னையும் ஒன்று. அது மட்டுமின்றி தமிழ் நாட்டின் தலைநகரும் இது தான். இன்று அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கிளை தொடங்க ஆர்வம் காட்டப்படும் நகரும் இது தான். வான் போக்குவரத்து மற்றும் விமான போக்குவராத்தும் தன்னகத்தேகொண்ட நகரமும் இது தான். நகருக்காண மிக சாதாரண அடிப்படை வசதி கொண்டில்லாத நகருமும் இது தான் என்பது வேதனைக்கு உரியதுதான். சென்னையில் சில பகுதிகள் செழிப்பகவும், சில பிகுதிகள் வறண்டும் காணப்படுகிறது. இன்னும் ஒரு கழிப்பிட வசதியம் இல்லாத பேருந்து நிலையன்களும் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன, கழிப்பிட வசதி இருக்கும் இடங்களில் அவைகள் பராமரிப்பற்று அவல நிலையிலே...

மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்

மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; அதிகாரிகளிடம் விசாரணைமதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள கோடிக்கணக்கான ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தி, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மதுரை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த தேன்மொழியும், துணை மேயராக பி.எம்.மன்னனும் உள்ளனர். மண்டலத் தலைவர்களாகவும் திமுகவை சேர்ந்தவர்களே இருந்து வருகின்றனர். திமுக ஆட்சியில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் கட்டமாக மதுரை திடீர் நகரில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு அவற்றை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார். ஆனால்,...

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது புகார்!!!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்: Add caption திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்பட 11 பேர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஹோட்டல் அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கே. கதிர்வேல். இவர் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2005-ம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றை அதன் உரிமையாளர்கள் ஆர். குரு சங்கர நாராயணன், ஆர். சங்கரிதேவி, ஆர். சுப்புலட்சுமி, வளமங்கை நாச்சியார் ஆகியோரிடம் இருந்து முறைப்படி வாங்கினேன். இது...

மதுரை பெயரைக் கெடுக்கும் தமிழ்ப் படங்களால் பின்வாங்கும் ஐடி நிறுவனங்கள்!

மதுரை: மதுரை என்றாலே வன்முறை நிறைந்த நகரம் என்று நினைக்கும் அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் கோவில் நகரம் கொலை நகரமாகக் காட்டப்படுகிறது. இதனால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மதுரைக்கு வர அஞ்சுவதாக தெரிய வந்துள்ளது. மதுரை என்றாலே மல்லிகைப்பூவும், மீனாட்சி அம்மனும் தான் நினைவுக்கு வரும். விருந்தோம்பலில் மிரள வைப்பவர்கள் மதுரைக்காரர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் கேட்காமலேயே உதவிக்கு வருபவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று மதுரையைப் பற்றி நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு மட்டும் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. நல்ல...

தமிழ் காய்கறி சொற்பொருள்

AMARANTH - முளைக்கீரை ARTICHOKE - கூனைப்பூ ASPARAGUS - தண்ணீர்விட்டான் கிழங்கு BEANS - அவரை BEET ROOT - செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு BITTER GOURD - பாகல், பாகற்காய் BLACK-EYED PEAS - தட்டைப்பயறு BOTTLE GOURD - சுரைக்காய் BROCCOLI - பச்சைப் பூக்கோசு BRUSSELS SPROUTS - களைக்கோசு CABBAGE - முட்டைக்கோசு, முட்டைக்கோவா CARROT - மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு CAULIFLOWER - பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா CELERY - சிவரிக்கீரை CILANTRO - கொத்தமல்லி CLUSTER BEANS - கொத்தவரை COLLARD GREENS - சீமை பரட்டைக்கீரை COLOCASIA - சேப்பங்கிழங்கு CORIANDER - கொத்தமல்லி DRUM STICK - முருங்கைக்காய் ELEPHANT YAM - கருணைக்கிழங்கு FRENCH BEANS - நாரில்லா அவரை GOOSEBERRY - நெல்லிக்காய் GREEN BEANS - பச்சை அவரை KALE - பரட்டைக்கீரை KING YAM - ராசவள்ளிக்கிழங்கு LADY'S FINGER - வெண்டைக்காய் LEAFY ONION - வெங்காயக் கீரை LEEK...

பெண்கள் உணவில் சேர்க்க வேண்டிய ஊட்டச் சத்துக்கள் ஐந்து

இலை காய்கறிகள்: உங்கள் உணவில் காய்கறிகள் இல்லாமல் உங்கள் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. கீரை, பருப்பு வகைகள், காளான்கள், கீரை, வெந்தய இலைகள், பூக்கோசுகளிள் ஊட்டச்சத்து, நார்சத்து, உயிர்ச்சத்து அதிகமாக உள்ளது. காய்கறிகள் பார்வை பாதுகாவலன் என கூறலாம், தேவையான 4 கனிமங்கள் தருகிறது, அவை சுண்ணாம்புச்சத்து (கால்சியம்), வெளிமம் (மெக்னீசியம்), இரும்பு மற்றும் வெடியம் (பொட்டாசியம்). இவைகளை உங்கள் உணவில் தினமும் சேர்க்க முயற்சிக்கவும். தானியங்கள்: 96 சதவீதம் ஊட்டச்சத்து மற்றும் தேவையான உயிர்ச்சத்து உள்ளது. கோதுமை ரொட்டி, கோதுமை மாச்சேவை, பழுப்பு அரிசிகளிள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது, இது உடல் இடை அதிகபடுத்தாது.   பருப்பு,...

"சமச்சீர் கல்வித்திட்டம் செல்லுபடியாகும்"

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக திமுக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தச் சட்டத்துக்கு தற்போதைய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள் செல்லுபடியாகாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். கிராமப்புற பள்ளியில் சில மாணவர்கள் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டு தொடர வேண்டும் எனவும், எதிர்வரும் 22 ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க...

உயரும் மின்சார கட்டணம்!!! பணக்கஷ்டத்தில் தமிழ்நாடு மின்வாரியம்!!!

மின்சார கட்டணத்தை உயர்த்தும் நோக்கில் தமிழ் நாடு அரசு மின்சார வாரியத்திடம் தெளிவான கட்டண வீதப் பட்டியலை கோரியுள்ளது. மின்சார வாரியம் ஆண்டிற்கு ரூபாய் 40,300 கோடி இழப்பயும், ரூபாய் 10,000 கோடி அளவு பற்றாக்குறையையும் சந்தித்துள்ளது. அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ் நாடுதான் கடந்த சில ஆண்டுகளாக மிக குறைந்த கட்டண வீதம் வசூலித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு தான் ஒரு சில பிரிவிற்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டது. பண பற்றாக்குறையின் காரணமாக கட்டண வீதப் பட்டியலை சீர் செய்வது ஒன்றே வாரியத்தை மீட்க வழி என்று அரசு முடிவெடுத்துள்ளது. பட்டியலை சீர் செய்து அரசிடம் வாரியம் ஒப்படைத்த பின்பு கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது. வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவில்...

தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு -ஒரு சவரன் ரூ 18,850

தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அடித்தட்டு மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. இதற்கு online வர்த்தகம் போன்ற மறைமுக பதுககல் தான் காரணம் என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள். இது போன்ற பதுக்கல் இருந்து தங்கதிருக்கு விளக்கு அளிக்கும் பொருட்டு தங்கத்தின் விலை ஏற்றததினை குறைக்க இயலு...

தெய்வ திருமகள் -- திரைப்பட விமர்சனம்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்... -நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும். ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 'ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில்...

100 -வது சதமடிக்க தயாராகும் சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச அரங்கில் மொத்தம் 99 சதங்கள் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டி 48 சதம்) அடித்துள்ளார். அவர் 100 -வது சதத்தை எப்போது அடிப்பார் என்று கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்சில் வரும் 21 -ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் இந்த சாதனையை டெண்டுல்கர் படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். வெஸட் இண்டீஸ் தொடரில் விளையாடாமல் குடும்பத்துடன் லண்டனுக்கு சென்ற டெண்டுல்கர் அங்கு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் வகிக்கும் அவர்,  அங்கிருந்தபடியே இந்திய அணியுடன் இணைந்து...

மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு; 21 பேர் பலி; காயம் 141

மும்பையில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 141 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று 7.10 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுஸ் ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பை தொடர்ந்து மும்பை முழுவதும் மக்களிடையே பதட்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே குண்டுவெடிப்பு குறித்த தகவலறிந்து, மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங், மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை டிஜிபி-யை தொடர்புகொண்டு பேசினார். முதல் குண்டுவெடிப்பு ஜவேரி பஜாரில் இரவு...

எல்ஜி : ஆன்ட்ராய்டுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தங்களது தயாரிப்புகளை முன்னிலைப்படுத்த பல்வேறு மார்க்கெட்டிங் யுக்திகளை முன்னணி நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. அந்த வகையில், பேட்டரி சார்ஜை 50 சதவீதம் அளவுக்கு சேமிக்கும் திறன் படைத்த தொடுதிரையுடன் கூடிய ஆப்டிமஸ் பிளாக் என்ற ஸ்மார்ட்போனை எல்ஜி களமிறக்கியுள்ளது. 4.0 இஞ்ச் தொடுதிரை கொண்ட ஆப்டிமஸ் பிளாக், நோவா டிஸ்பிளேயுடன் வந்துள்ளது. ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன்கள் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு இன்பில்ட் ஸ்பீக்கருடன் வந்துள்ளது. வடிமைப்பிலும் ஆப்டிமஸ் நெஞ்சை தொடுகிறது. தவிர, அனைத்து டாப்என்ட் வசதிகளை கொண்டுள்ளது. ஆப்டிமஸ் பிளாக் சிறப்பம்சங்கள்: ஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் 2.0 மெகாபிக்செல்...

Pages (17)1234567 Next

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

354629

Feeds

rank

Indiblogger Score

tamiltidings.blogspot.com
29/100

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content