
கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் படம், தெலுங்கில் டூப்ளிகேட் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.
கல்பாத்தி அகோரம் தனது ஏஜிஎஸ் பேனரில் தயாரிக்கும் படம் மாற்றான். சூர்யா ஐந்து வித்தியாசமான ரோல்களை இந்தப் படத்தில் செய்கிறார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.
பால்கன் நாடுகள் எனப்படும் ரஷ்யா, செர்பியா, குரேஷியா, மாசிடோனியா மற்றும் அல்பேனியாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.
சூர்யா படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்தப் படத்தை நேரடி தெலுங்குப் படம் என்ற அளவுக்கு பக்காவாக டப் பண்ணப் போகிறாராம் இயக்குநர் கே வி ஆனந்த். தெலுங்கு பதிப்புக்கு டூப்ளிகேட்...