தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

நடிகர் விஜய்யை தாக்கிய பாரதிராஜா!

தமிழ்நாட்டின் தற்போதியா முக்கிய பிரச்சனை முல்லைப் பெரியாறு அணை, ஆனால் அதுபற்றி கோலிவுட் நடிகர்கள் எந்த கருத்தும் வெளியிடாமல் அமைதிகாத்து வருகின்றனர். காரணம் அந்த நடிகர்களின் படத்தின் வியாரத்தை அது பாதிக்கும் என்பதால், இது பற்றி இயக்குனர் பார்திராஜா நேற்று தினசரி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டிய்ளித்து பேசுகையில், தமிழின் முன்னணி நடிகரான‌ ஒருவர் , அன்னா ஹாசாரவின் போராட்டத்திற்கு இங்கிருந்து டெல்லி எக்ஸ்பிரஸ் முலம் டெல்லி சென்று கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்துவிட்டு வந்தார். ஆனால் தற்போது நிலவும் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தேனி மாவட்டத்தில் அவதிப்படும் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுக்க அவருக்கு தேனி எக்ஸ்பிரஸ் தெரியாமல்...

ரூ 300 கோடி கருப்பு பணம் பறிமுதல்!!

டெல்லி மேல் சபையில், மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் கேட்கப்பட்ட  கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கூறுகையில்: மாநில வாரியாக கறுப்பு பணம் கைப்பற்றப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை பராமரிப்பதில்லை. ஆனால் நாட்டில் நடப்பு நிதியாண்டான  (2011௧2), அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை 7 மாதங்களில் ரூ.299.63 கோடி கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் பணம் மற்றும் நகைகள் அடங்கும். ரூ.179.59 கோடியில் பணமும், ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2010-11-ம் ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும்,...

தாஜ்மகாலில் இசை வெளியிடும் ஏ.ஆர் ரகுமான்!!

தமிழில் வெளியாகி ஹிட் ஆன‌ விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை ஹிந்தியில் கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.  இந்த படத்திற்கு இசைபுயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏக் தேவனா தா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவினை ஆக்ராவில் உள்ள் தாஜ்மகாலில் நடத்த உள்ளனர். இந்த படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதால் தான் பாடல் வெளியிட்டு விழாவினை தாஜ்மாகலில் நிகழ்த்துகிறார்களாம். இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக ...

பில்லா 2 - ஜனவரி டு ஏப்ரல் 2012

மங்காத்தாவின் வெற்றிக்கு பிறகு தல ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பில்லா 2 படத்திற்காக. இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில் அடுத்தக் கட்ட பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. தல இந்த படத்திற்காக சண்டைக் காட்சிகளில் அதிக முயற்சி எடுத்துள்ளார். அதை பற்றி இந்த படத்தில் வில்லனாக வரும் வித்யத் ஜம்வால் கூறுகையில், "மிக ஆபத்து நிறைந்த சண்டை காட்சிகளில் அஜித் நடித்துள்ளார், சண்டை காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு திரைவிருந்தாக இருக்கும்." எனக் குறிப்பிட்டார். படத்தின் தயாரிப்பாளர் சுனிர், "பில்லா 2 பற்றி சில தகவல்கள் உள்ளன, 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டது, டைட்டில் பாடல் மட்டும் பாக்கி உள்ளது, இந்த படத்தின் போஸ்டர்கள் ஜனவரியிலும்,...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இருந்தாலும்,உலக நாயகன் கமல் படமாக இருந்தாலும் இருவருக்கும் தனித் தனி இடம் உண்டு, இருவரும் சேர்ந்து நடித்து பல வருடங்கள் ஆகி விட்ட நிலையில், மற்றொரு முறை இரு சிகரங்களையும் ஒன்றாக பார்க்க முடியாத என்ற எண்ணம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் உண்டு. இதனை கமல் ஒரு விழாவில் குறிப்பிட்டு இருந்தார், அது இப்போது இயங்குனர் ஷங்கரின் மூலமாக நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இருவரையும் இணைத்து ஒரு கதையை தயாரித்திருப்பதாக தெரிகிறது, அப்படி இவர்களது கூட்டணியில் இந்த படம் அமைந்தால் அதுவே இந்தியாவின் மிகப்பெரிய படமாக அமையும்.  ஷங்கர் இது பற்றி வரும் ஜனவரி 14 ஆம் தேதி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ரஜினி இப்போது கோச்சடையன்...

2011 ல் ரசிகர்களை கவர்ந்த 30 படங்கள்

2011ஆம் ஆண்டில் பல நல்ல படங்கள் வெளியாகின, முன்னணி நட்சத்திரங்களும், புதிய முகங்களும் வெற்றிப் படங்களை கொடுத்தனர். சில படங்கள் எல்லா ரசிகர்களையும் கவர்ந்து நன்றாக வசூலை குவித்தது. உதாரணங்களாக சிறுத்தை, கோ, தெய்வத்திருமகள், காஞ்சனா, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், 7ஆம் அறிவு, வேலாயுதம் படங்களை குறிப்பிடலாம். ஆனாலும் வசூல் அதிகம் செய்யாத சில படங்களும் ரசிகர்களை கவர்ந்தன, சில திரும்பிப் பார்க்கவும் வைத்தது. அதில் இந்த ஆண்டு எதிர்பார்ப்பு, பிடித்த படங்கள், நல்ல படங்கள் என எல்லா வகையிலும் 30 படங்களின் பெயர்களை குறிப்பிடுள்ளோம், தங்களுக்கு பிடித்த படத்திற்கு ஓட்டளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் புக் முகவரிக்கு செல்லவும், இல்லாதவர்கள் கமெண்டுகள்...

மாஸ் ஹீரோ விஜய் -- கெளதம் !!

கெளதம் மேனன் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க‌ இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கவிருக்கும் படம் யோகன்: அத்தியாயம் ஒன்று. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை தயாரிக்க இருப்பது பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான ஈராஸ் இன்டர்நேஷனல். மேலும் ரானா படத்தை தயாரிப்பதும் இதே நிறுவனம் தான். சரி விஷயத்துக்கு வருவோம், சமிபத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த கெளதம் பேசுகையில், விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ணுவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இந்த படம் விஜய்யின் மாஸ் மற்றும் ஸ்டையிலுக்கு ஏற்றவாறும், அதேசமயம் என்னோட ஸ்டையிலிலும் இருக்கும். விஜய்யை வித்தியாசமான பரிமாணத்தில் காண்பிக்க முடியும் என நம்புகிறேன். எனக்கு...

மூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை வாய்மொழித் தரவுகளாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மனித குலத்திற்கு கடத்தி இருக்கிறது.வேளாண்மை சார்ந்த நாட்டார் தொழில்நுட்பங்கள் பல நீண்ட நெடிய அனுபவத்தின் விளைவாக மனித குலத்திற்குக் கிடைத்தது. இந்து சமுதாய மக்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்குள் ஒருவித அறிவியல் சார்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதைத் தன் அனுபவத்தின் வாயிலாக கவியரசர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி விளக்கினார். நாட்டார் நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை வெறும் மூட நம்பிக்கைகள் என்று தோன்றும். ஆனால் அவை மனித குலம் வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் சாரம் என்ற சிந்தனையுடன் அணுகினால், அந்த நம்பிக்கைகளின் உள் அர்த்தம் நமக்குப் புரியும். நாட்டுப்புற நம்பிக்கைகளில் அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள் சிலவற்றை பற்றி மட்டும் இக்கட்டுரையில்...

மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை ஒதுக்காதிங்க

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள்...

அதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்

தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று...

சிம்புவின் போலீஸ் வேஷத்தை பற்றி பேசவில்லை - ஜீவா

சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படம் ஹிட்டானதில் இருந்து இருவருக்கும் தகராறு நடக்கிறது. அப்படத்தில் நடிக்க முதலில் சிம்புவைதான் இயக்குனர் கே.வி.ஆனந்த் அனுகினார். அவர் மறுத்ததால் ஜீவா வந்தார். படம் வெற்றி பெற்ற பிறகு இன்டர்நெட்டில் ஜீவா ரசிகர்கள் சிம்புவை தாக்கியும், சிம்பு ரசிகர்கள் ஜீவாவை தாக்கியும் கருத்துக்கள் வெளியிட்டனர்.அதன் பிறகு ஜீவா கூறும்போது, சிம்பு என் நண்பன் இல்லை என்றார். உடனே நடிகர் ஜெய் குறுக்கிட்டு ஜீவாவை கண்டித்தார். இவ்வாறு மறைமுக சண்டைகள் தொடரும் நிலையில் சமீபத்தில் சாந்தோமில் நடந்த “முகமூடி” படப்பிடிப்பு துவக்க விழாவில் சிம்புவை ஜீவா தாக்கிய பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதுகுறித்து ஜீவாவிடம்...

இந்தியாவில் புதிய வடிவ‌ டேப்லட் -சோனி அறிமுகம்!

புதிய வடிவ‌ டேப்லட்டை இந்தியாவில் அறிமுகம் செய்த ச்! எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக திகழும் சோனி, தனது புதிய வடிவ டேப்லட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டேப்லட் பி மற்றும் எஸ் என இரண்டு வகையான டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படங்களுடன் டேப்லட் பி - விலை ரூ.36990/- டேப்லட் எஸ் - விலை ரூ.29990/- ...

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா

மங்காத்தா வெற்றியை தொடர்ந்து சூர்யாவை கதாநாயகனாக்கி இயக்கவிருக்கிறார் வெங்கட்பிரபு. அவருடன் இணைந்து தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவும் நடிக்கிறார். வெங்கட்பிரபு படத்தை பற்றி கூறுகையில் திரைக்கதை படத்திற்கு பாதி முடிந்துவிட்டதாகவும், இந்த படம் தமிழுக்கு ஒரு புது பாணியை காண்பிக்கும் என்று தெரிவித்தார். படத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும் எனவும், சூர்யா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், அவர் வைத்திருந்த சில கதைகளில் இந்த கதையினை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் முழுவதுமாக திரைக்கதை அமைத்தவுடன் சூர்யாவிடம் கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார். கதையின் மற்ற நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்கள்,  இன்னும் தேர்வாகவில்லை எப்போதும் போல் யுவன் படத்திற்கு இசை அமைக்கிறார்...

இந்த வருட‌ டாப் 5 ஸ்மார்ட்போன்ஸ்!!

இந்த வருடத்தில் வெளியான ஸ்மார்ட்போன்களின் வச‌திகள் மற்றும் பிரபலம் அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை மற்றும் படங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (ரூ 20000 கிழ் உள்ள போன்கள் மட்டும்). BlackBerry Curve 9360 -- Rs 19,250 LG Optimus Black ---Rs 18,990 Sony Ericsson Xperia Neo V ---Rs 17,500 Nokia 701---Rs 18,450  Motorola Defy Plus MB526 ---Rs 16,900...

Pages (17)1234567 Next

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

354635

Feeds

rank

Indiblogger Score

tamiltidings.blogspot.com
29/100

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content