சென்னையை சேர்ந்த இசைகுழு ஒன்று 2012ஆம் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது, ஆம் 'ஸ்டக்காடோ' (Staccato) எனும் பெயர் கொண்ட அந்த இசைகுழு ஆசியாவின் சார்பாக பங்கேற்கிறது. ஆசியாவிலிருந்து 10,000திற்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் 2 குழுக்கள் மட்டுமே தேர்வாகியுள்ளது, ஒன்று சீனாவிலிருந்து மற்றொன்று நம் சென்னையிலிருந்து.
லண்டனில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விழாவில், ஜுலை 30 மற்றும் ஆகஸ்டு 2 ஆம் தேதிகளில் இவர்கள் பாட உள்ளனர். தற்போதுள்ள கர்நாடக சங்கீதப் பாடல்களில் நன்கு பெயர் பெற்ற இவர்கள் தற்போது லண்டன் செல்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இந்தியாவை பிரதிபலிக்க இவர்கள் மட்டுமே உள்ளனர், அதில் தமிழ் பாடல்களும் இடம் பெறப்போவது தனிச் சிறப்பு.அங்கு பலவிதமான பாடல்களை அவர்கள் வழங்க உள்ளனர்.
அதிலும் இவர்கள் சென்னை (டப்பாங்குத்து) பாடலையும் பாடி மகிழ்விக்க இருக்கின்றனர், இதனால் தமிழ் பாடல்களும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கப்போவது உறுதி. என்னதான் மற்ற ரகப் பாடல்களை பாடினாலும், இந்த பாடல் வெளிநாட்டவர்க்கு புது விருந்தாக அமையும்.
அவர்கள் ஒலிம்பிக்கில் தேர்வாவது அவர்களுக்கே தெரியாமல் நடந்திருக்கிறது, அவர்களது குழுவில் உள்ள ரஃபிக் என்பவர் ஒலிம்பிக் தேர்விற்கு அவர்கள் இசையமைத்த பாடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இது தெரியாமல் இருந்த அந்த குழு தேர்வான மின்னஞ்சல் கிடைத்தபொழுது அதை பொய் என்று நினைத்துள்ளனர். பின்புதான் அவர்களுக்கு விஷயமே தெரியவந்துள்ளது.
ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் இயக்குனரான டேனி போயல் தான் ஒலிம்பிக்கின் தேர்வுக்குழுவில் இருந்து இந்த இசைகுழுவை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து லண்டன் செல்லும் ஸ்டக்காடோவிற்கு வாழ்த்துக்கள், நீங்களும் வாழ்துக்களையும் விருப்பங்களையும் தெரிவிக்க அவர்களது பேஸ்புக் மற்றும் இணையதள முகவரியை கீழே சொடுக்கவும்.
0 comments:
Post a Comment