யுவன் சங்கர் ராஜா தனது இசைப் பயணத்தை 1996ஆம் ஆண்டு ஆரம்பித்தார், அவரது முதல் படமாக சரத்குமார் நடித்த அரவிந்தன் அமைந்தது, முதல் படத்திலேயே நல்ல மெலடி மற்றும் துள்ளும் இசையை வழங்கினார். 15 வருடங்கள் கடந்தும் தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளார். சில ஒடாத மொக்கை படங்கள் கூட யுவனின் பாடல்களுக்காக எல்லோரின் மனதிலும் ஞாபகம் உள்ளது.
தற்போது அவர் தனது 100வது படத்தை இசை அமைக்கவிருக்கிறார், அதுவும் அவரது சகோதரரின் இயக்கத்தில், ஆம் வெங்கட்பிரபு கார்த்தி இணையும் பிரியாணி தான் யுவனின் 100 வது படம். சென்னை 600028 முதல் மங்காத்தா வரை யுவனின் இசை வெங்கட்பிரபுவிற்கு ஒரு பெரிய பலமாகவே இருந்து வந்துள்ளது, தற்போது 100 வது படமாக வேறு இது அமைவதால் யுவனின்...
லிங்குசாமி தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார், இன்னும் பெயர் முடிவாகாத அந்த படத்தில் சூர்யா நடிப்பார் எனத் தெரிகிறது. இப்படத்தை லிங்குசாமியே தனது சொந்த தயாரிப்பான திருப்பதி பிரதர்ஸ் மூலமாக எடுக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கிறார்.
படத்தின் கதாநாயகியாக சமந்தா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யா தற்போது 4 படங்களில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. இன்னும் திரைக்கதை முடிவாகாத நிலையில் லிங்குசாமி அதனை முடித்துவிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிகிறத...
தமிழ் சினிமாவில் புதிது புதிதாக சிந்தித்து பாடல்களும் எடுக்கின்றனர், அதன் உச்சகட்டத்தில் கிடைத்த யோசனையில் சீனுராமசாமி தான் இயக்கும் நீர்பறவை எனும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் 100 முத்தங்களை காட்சியைமக்க போகிறார்.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில், விஷ்னு மற்றும் சுனைனா நடிக்கின்றனர். கதைப்படி பிரிந்து இருக்கும் காதலர்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கின்றனர். அப்பொழுது இடம்பெறும் பாடல் காட்சியில் இரண்டு பேறும் முத்தமிட்டுக்கொள்வது போல பாடல் படமாக்கப்படுகிறது, அந்த ஐந்து நிமிடத்திற்குள் 100 முத்தங்கள் ஒருவருக்கொருவர் கொடுப்பார்கள், அது அருவருப்பாக இருக்காது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
எப்படியெல்லாம் யோசிக்கிற...
மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த அஜித்தின் அடுத்த படம் , 2007 இல் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வரும் படம் . உன்னைப்போல் ஒருவன் என்ற வெற்றித் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த சக்ரி டலோடியின் இரண்டாவது படம் . இவ்வாறு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டு வெளிவந்திருக்கும் பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா??? நிச்சயமாக ஆம் என்று கூறலாம்
படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும்...
பிரபுதேவா நயன்தாரா பிரிவிற்கு பிறகு ஒருவரை ஒருவர் பற்றி மாற்று கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருந்தனர். அதன் பிறகு பிரபுதேவா தொடர்ந்து பாலிவுட் பக்கமே தனது கவனத்தை செலுத்தி வந்தார். அவர் கடைசியாக இயக்கிய சிறுத்தை படத்தின் ரீமேக்கான ரௌடி ரத்தோர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
ஹிந்தி பட வாய்புகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் பிரபு தேவா தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார், நீண்ட நாட்களாக கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தவர் தற்போது ஷ்ருதிஹாசனை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஷ்ருதிஹாசன் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார், இந்த படம் காதல் நிறைந்த கமர்சியல் படமாக இருக்கும் என பிரபுதேவா தெரிவித்துள்ளார...
த்ரிஷாவிற்கும் நயன்தாராவிற்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நடந்து வந்ததாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. தற்போது அதை பொய்யாக்கியுள்ளனர் இருவரும். நயன்தாரா பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சிகாக சென்னை வசம் வந்து போனார். அவர் சிறந்த நடிகைக்கான தெலுங்கு விருதினை பெற்றார். பிலிம்பேர் விருது விழா முடிந்த பிறகு, கடந்த வாரம் சென்னையில் நடந்த பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற நயனும் த்ரிஷாவும் ஒருவரைஒருவர் கட்டியணைத்து பல நாட்கள் பழகியது போல் நட்பு பாராட்டியுள்ளனர்.
அவர்கள் இருவரும் கட்டியணைத்து முத்தங்களும் பரிமாரிக்கொண்டுள்ளனர் இது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. குருவி பட வாய்ப்பினை திரிஷா நயனிடமிருந்து தட்டிப்...
சென்னையை சேர்ந்த இசைகுழு ஒன்று 2012ஆம் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது, ஆம் 'ஸ்டக்காடோ' (Staccato) எனும் பெயர் கொண்ட அந்த இசைகுழு ஆசியாவின் சார்பாக பங்கேற்கிறது. ஆசியாவிலிருந்து 10,000திற்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் 2 குழுக்கள் மட்டுமே தேர்வாகியுள்ளது, ஒன்று சீனாவிலிருந்து மற்றொன்று நம் சென்னையிலிருந்து.
லண்டனில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விழாவில், ஜுலை 30 மற்றும் ஆகஸ்டு 2 ஆம் தேதிகளில் இவர்கள் பாட உள்ளனர். தற்போதுள்ள கர்நாடக சங்கீதப் பாடல்களில் நன்கு பெயர் பெற்ற இவர்கள் தற்போது லண்டன் செல்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இந்தியாவை பிரதிபலிக்க இவர்கள் மட்டுமே உள்ளனர், அதில் தமிழ் பாடல்களும் இடம் பெறப்போவது தனிச் சிறப்பு.அங்கு...
இன்று நம் சமுதாயம் செக்ஸ் எனும் மயக்க உலகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது, பல செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. கணவன்/மனைவி கள்ளத்தொடர்பு, பெற்ற பிள்ளைகளுடன் தகாத உறவு, ஆசிரியர் மாணவ முறைகேடு எனக் கூறிக் கொண்டே போகலாம். 15 வருடங்களுக்கு முன்பு கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட விசயங்கள் இப்போது அடிக்கடி நடக்கும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் முறையற்ற பாலின்பக் கல்வி இல்லாததே. இப்போது உள்ள பெற்றோரிடம் பாலின்பக் கல்வி வேண்டும் என்றால் கண்டிப்பாக அதை எதிர்ப்போரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஏன்? என்றால் சிறு வயதிலேயே செக்ஸ் பற்றி சொல்லிக் கொடுத்தால் கெட்டுப்போய் விடுவார்கள் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கும்.
SEX...