தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

செட்டிநாடு வறுத்த கோழி

செட்டிநாடு வறுத்த கோழி செய்ய தேவையான பொருட்கள்

    சிக்கன் – 1/2 கிலோ
    பூண்டு – 1 முழு பூண்டு
    இஞ்சி – 50 கிராம்
    காய்ந்த மிளகாய் – 4 – 5
    சோம்பு – 2 தேக்கரண்டி
    மிளகு – 2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் – 2
    வெங்காயம் – 150 கிராம்
    தக்காளி – 100 கிராம்
    கறிவேப்பிலை – 2 கொத்து
    கடலை மாவு – 1 /2 கப்
    தேங்காய் – 1/4 மூடி
    எண்ணெய்
    உப்பு – தேவையான அளவு

செய்முறை

    சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி தனியாக பாத்திரத்தில் வைக்கவும்.
    மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆற வைத்து மைப்போல் அரைத்து சிக்கனுடன் கலந்து நன்கு பிசறி வைக்கவும்.
    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் 1 மேசைக்கரண்டி, தேவையான உப்பு சேர்த்து மீண்டும் பிசறி விட வேண்டும். 20 நிமிடம் ஊற வைக்கவும்.
    கடலை மாவுடன், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து திக்காக பஜ்ஜி மாவு போல் செய்து கொள்ளவும்.
    தேவையெனில் அரிசி மாவும், ஆப்ப சோடாவும் சேர்க்கலாம்.
    கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை கடலை மாவில் தோய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்நிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.(பொரிக்கும்போது கடலை மாவு வாசனையில்லாமல் இருக்க வேண்டும்)
    மற்றுமொரு கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கவும்.
    இதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக வதக்கி விடவும்.
    இத்துடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கிளறி, மல்லிதழை தூவி இறக்கவும்.

தலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ!!

தலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும் பல உபாதைகளை சந்திக்கின்றோம்.

தலை முடி எவ்வாறு உதிர்கிறது!!

புரோட்டின், வைட்டமீன், தாதுப்பொருள் குறைப்பட்டால், முடியின் அடிப்படை வளர்ச்சிகுன்றுவதாலும் முடியின் தண்டு மற்றும் வேர் பகுதிகள் வலுவற்றதாக மாறுவதாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதை தவிர்க்க வைட்டமீன் ஏ மற்றும் இ தேவைப்படுகிறது.
ஹார்மோன் மாற்றங்களும், மன அழுத்தக் காரணங்களை காட்டிலும், சத்து குறைப்பட்டால் ஏற்படுகிற முடி உதிர்வே அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.

இதனை தவிர்க்க சில எளிய வழிகள்.

1. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் .தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.

2. விளக்கெண்ணெய். தேங்காய் எண்ணெய். ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கலந்து சற்று சூடுபடுத்தி தலையில் எல்லா இடத்திலும் பரவும்படி மசாஜ் செய்யவும்.பிறகு சூடுதண்ணீரில் நனைத்து சூடான ஒரு டவலால் இறுக்கமாக கட்டி குறைந்தது பத்து நிமிடமாவது வைத்திருந்து ஷாம்பு போட்டு குளியுங்கள். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தாலும் முடி கொட்டுவது நிற்கும்.
இந்த சிகிச்சைகளை செய்யும் பொழுது தலைவலி வந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நிறுத்திவிடுங்கள்.

முடியின் வளர்ச்சியை தூண்ட வழிகள்!

1. வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,மஸாஜ் செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.

2. தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து, அதனை தலைக்கு தடவி பின் 30 நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.

3. ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி மஸாஜ் செய்து கொள்ளவும்.

(கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும்.பலன் கிடைக்கும்!)

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 2 

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 3

வேற்று கிரகங்களில் மனித உயிர்கள்: நாசா கண்டுபிடிப்பு!!


வேற்று கிரகங்களில் மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு!!
பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அண்டத்தின் அமைப்பு பற்றிய விஞ்ஞான பத்திரிகையில் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது.

வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களைச் சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.

பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

மங்காத்தா வெற்றியை நோக்கி


'மங்காத்தா' தல அஜித்தின் 50வது படம், இந்த வருடத்தில் அதிக எதிர்பார்பினை ஏற்படுத்திய படங்களில் முக்கியமான ஒன்று. அவருடன் அர்ஜுன், த்ரிஷா,  பிரேம்ஜி, வைபவ், அஞ்சலி, லட்சுமி ராய், ஆன்ட்ரியா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இதனை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரியின் கிளவுட் நயன் மூவீஸ் நிறுவனமாகும். யுவன் ஷங்கர் ராஜா இதற்கு இசை அமைத்துள்ளார்.
 

 ஐ.பி.எல் நடைபெறும்பொழுது நடக்கும் சூதாட்டத்தினை மையமாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. முதலில் அர்ஜுனிற்கு பதிலாக நாகர்ஜுனா நடிப்பதாக அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளிவந்தன, நாகர்ஜுனாவும் தெலுங்கில் ரீமேக் செய்து அஜித்தின் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால் தேதிகள் மற்றும் வேறு காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார். சமந்தா, அனுஷ்கா, நீது சந்திரா ஆகிய நடிகைகளும் கதாநாயகிகளுக்காக ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டனர். கடைசியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அஜித்துடன் இவருக்கு இது மூன்றாவது படமாகும்.

ஆகஸ்து 2, 2010 ஆம் ஆண்டு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் படம் தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது, சில காரணங்களால் தடைபெற்று அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. பின்பு அறிமுக பாடலான 'விளையாடு மங்காத்தா'  பேங்காக், தாய்லாந்து நாடுகளில் படமாக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு , சென்னையில் நடைபெற்றது, பெரம்பூரில் உள்ள பின்னி மில்லிலும், மும்பை தாராவியின் அமைப்பு கொண்ட செட்கள் ஸ்டுடியோவில் அமைத்து தொடர்ந்து நடந்தது. அடுத்ததாக 'வாடா பின் லேடா' பாடல் 5 நாட்கள் படமாக்கப்பட்டது. 'மச்சி ஓபன் தி பாட்டில்' பாடலுக்காக மும்பை நடிகையான கைனத் அரோரா வரவழைக்கப்பட்டார், இப்பாடலில் அஜித், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் நடனமாடினர். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் மும்பையில் நடைபெற்றது, தொடர்ந்து சென்னையிலும், படத்தின் இறுதிக் காட்சிகள் மதுரையிலும், சில காட்சிகள் ஹைதராபத்திலும் நடைபெற்றது. ஜூன் மாதத்தில் அஜித் தனது பகுதிகளை நடித்து முடித்தார், பின்பு பேங்காக்கில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. ஜுன் மாதமே படப்ப்டிப்பு முடிந்ததாக அறிவித்தனர். பின்பு கடந்த ஜூலை மாதம், அஜித் படத்தின் சில காட்சிகளில் புதிய தோற்றத்தில் வருவது போன்ற படப்பிடிப்பு ஒரு நாள் நடைபெற்றது.


படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக 30 கிலோ எடையுள்ள கேமராவை உடலில் பொருத்திக்கொண்டு நடித்துள்ளார். மேலும் ஒப்பனை (make up) இல்லாமல் வெள்ளை முடியுடன் (salt & pepper style) அசல் தோற்றத்துடன் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், இது இவருக்கு அஜித்துடன் இணையும் நான்காவது படமாகும். முதலில் மே 20 ஆம் தேதி ஒரு பாடலினை (விளையாடு மங்காத்தா) வெளியிட்டனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை இது பெற்றது. அடுத்து ஆகஸ்து 10 ஆம் தேதி அனைத்து பாடல்களும் வெளிவந்தது. மொத்தமாக 8 பாடல்கள் படத்தில் இடம்பெறுகின்றன.

பாடல்கள்:


1. விளையாடு மங்காத்தா - யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், ரஞ்சித், சுசாரிதா, அனிதா - 6:02

2. நீ நான் -எஸ்.பி.பி.சரண், பவதாரணி - 4:07

3. வாடா பின் லேடா - கிரிஷ், சுசித்ரா  - 4:29

4. மச்சி ஓபன் தி பாட்டில் -மனோ, ஹரிசரண், பிரேம்ஜி அமரன், நவீன், திப்பு - 4:46

5. நண்பனே -மதுஸ்ரீ, யுவன் ஷங்கர் ராஜா - 5:02

6. பல்லேலக்கா -கார்த்திக், விஜய் யேசுதாஸ், அனுஷா தயாநிதி  - 5:15

7. விளையாடு மங்காத்தா மிக்ஸ் - யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், ரஞ்சித், சுசாரிதா, அனிதா  - 6:05

8. தீம் - இண்ஸ்ட்ருமென்டல் - 3:04

சோனி நிறுவனம் பாடல் உரிமையை ரூ. 1 கோடிக்கு வாங்கியுள்ளது. பாடல் வெளியீடு ரேடியோ மிர்ச்சியில் மிக எளிமையாக நடந்தது.



படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாது அனைவருக்கும் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் வெற்றி பெற்றுள்ளன. ஆகஸ்து 30 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவை தொடர்ந்து விஜய்யை துரத்தும் பாலிவுட்


சூர்யா வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென்று தனி பாணியை வைத்துள்ளார், அவரது படங்கள் நல்ல வசூல் கொடுத்ததாலும், பெரும் வெற்றியை பெற்றதாலும், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. கஜினி, சிங்கம் படங்களை தொடர்ந்து காக்க காக்க படமும் ரீமேக் ஆகிறது. அதில் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பாலிவுட்டிலும் இந்த ரீமேக் படங்கள் நல்ல வசூல் கொடுத்ததால், அவர்களின் பார்வை இங்கு திரும்பியுள்ளது, விஜய்யின் படங்களும் இப்போது ரீமேக் பண்ணப்படுகிறது,  விஜய்யின் வசூல் சாதனை புரிந்த போக்கிரியை வாண்டட் என்று ஹிந்தியில்  சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது, அதை தொடர்ந்து காவலன் படமும் ரீமேக் ஆகிறது. இதிலும் சல்மான் கான் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வெற்றிப் படங்களான கோ, சிறுத்தை ஆகிய படங்களும் ரீமேக் ஆகின்றன.

சூர்யாவின் ஏழாம் அறிவு  படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதால் பாலிவுட்டிலும் இதற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, சூர்யாவின் படங்களை ரீமேக் செய்ய ஆர்வம் காட்டும் பாலிவுட், இப்போது விஜய்யின் படங்களுக்கும் ஆர்வம் காட்டுகிறது.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content