தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 2

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1 முதல் பாகம்


முதல் பாகத்தில் முடியை பற்றி அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்த்தோம், இப்போது முடி உதிர்வின் காரணங்களை பார்ப்போம்.

ஒரு கேசத்தின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அது உதிர்ந்து விடும், அடுத்து பிற வேர்களிலிருந்து புதிய கேசம் வளரும். இவ்வாறு பழைய கேசம் உதிர்வதும் வளர்வதும் அன்றாடம் நடக்கும். உதிரும் அளவும் வளரும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக உதிர்வது அதிகாமாக இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இயல்பாகவே 70 முதல் 100 கேசங்கள் வரை உதிர்ந்து விடும். பெண்கள் தலை வாரும் போது 10-20 கேசங்கள் வருவது இயல்பான ஒன்று. கொத்துக் கொத்தாக உதிர்வது இயல்பை மீறிய ஒன்று, அதன் காரணங்களை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.



காரணங்கள்


கேசம் அதிகமாக உதிர சில முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,

  1. சரியான பராமரிப்பின்மை
  2. மருந்துகள்
  3. போதைப் பொருட்கள்
  4. இயக்கநீர் மாற்றங்கள்
  5. ஊட்டச்சத்து குறைபாடுகள்
  6. உடலை தாக்கும் நோய்கள்
  7. தலையின் தோலை தாக்கும் நோய்கள்
  8. மரபு வழிக் காரணம்
  9. மன அழுத்தம்
  10. வயது
  11. கதிர்வீச்சுகள்
  12. வேதியியல் பொருட்கள்


ஒருவருக்கு அதிகமாக முடி உதிர்வது மேற்கண்ட ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணமாக கூட இருக்கலாம், சரியான காரணத்தை தெரிந்து கொள்ளுதல் சரி செய்ய உதவும்.

1 சரியான பராமரிப்பின்மை

மிக முக்கியமான காரணம் இதுவே ஆகும்.
தலையில் எண்ணெய் பிசுக்குடன், தூசி ஆகியவற்றை சுத்தம் செய்யாதிருத்தல்.
குளித்தபின் ஈரத்தலையை வாருதல்.
தலையை சுத்தம் செய்ய வீரியம் மிகுந்த தரக் குறைவான ஷாம்பூகளை உபயோகித்தல்.
ப்ளீச்சிங்க்,  பெர்மிங்க், கர்லிங் ஆகியவற்றை அடிக்கடி செய்தல்.
அடிக்கடி கேசச் சாயம் பூசுதல், தரமில்லாத சாயம் உபயோகித்தல்.
தரமற்ற சீப்புகளை பயன்படுத்துதல், அவற்றை சுத்தமில்லமல் உபயோகித்தல்.
ஹேர் டிரையரை சரியான முறையில் உபயோகிக்காமல் இருப்பது.
கேசத்தை இருக்கமாக கட்டுதல்.

2. மருந்துகள்

வீரியம் மிகுந்த மாத்திரை மருந்துஅள் தொடர்ந்து உண்பது.
புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகள்.
இரத்த உறைவை தடுக்கும் மருந்துகள்.
ஸ்டெராய்ட் வகை மருந்துகள்.
சில நோய்க் கொல்லி மருந்துகள்.

 3. போதைப் பொருட்கள்


புகையிலை அதிகாமாக உபயோகப்படுத்துதல், புகையிலையில் உள்ள நிகோட்டின் முடியின் வேரை சுற்றியுள்ள இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்துவிடும், இதனால் இரத்த ஓட்டம் குறையும். தேவையான ஊட்டச்சத்துக்கள் முடிக்கு கிடைகாமல் போய்விடும்.

4. இயக்க நீர் மாற்றங்கள்

உடலில் ஏற்படும் பலவகை மாற்றங்கள் முடி வள்ர்ச்சியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும், இரண்டிற்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே இந்த மாற்றங்கள் அதிகமாக இருக்கிறது.

பருவம் அடையும் வயதில்
மாதவிடாய் காலத்தில்
கருவுறும் போது
பிரசவத்திற்கு பின்
மாதவிடாய் நின்றபின்

ஒவ்வொரு நிலையிலும் பலவித இயக்கநீர் மாற்றங்கள் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படுவதால், கேச வளர்ச்சி பாதிப்பு , உதிர்தல் ஏற்படுகிறது. பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற இயக்க நீர் கேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 15 - 30 வயதில் இந்த இயக்க நீர் அதிகமாக இருக்கும், அப்பருவத்தில் கேசம் அதிகமாக வளரும். மாதவிடாய் நின்ற பின்னர் இந்த ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கேச உதிர்வு அதிகமாக இருக்கும்.

5. ஊட்டச்சத்துக் குறைபாடுகள்


கேசம் நன்கு வளரவும், வேர்கள் உறுதியாக இருக்கவும் உடலில் தேவையான அளவில் கீழ்காணும் சத்துகள் இருப்பது அவசியம்
புரதம்
பி. காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்
இரும்புச் சத்து
தாமிரம்
துத்தநாகம்
அயோடின்
வைட்டமின் சி

இதில் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தாலும் கேசம் அதிகமாக உதிரும்.

6.  உடலை தாக்கும் நோய்கள்


டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை, புற்றுநோய், காசநோய் போன்ற நாள்பட்ட நோய்களால் உடல் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் கேசம் அதிகமாக உதிரும்.

நோயின் கடுமையால் சரியான் உணவு உண்ணமுடியாத நிலையில் முடி வலுவிழந்து விடுகின்றன.
தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதாலும் கேசம் உதிரும்.
அதிக நாட்கள் காய்ச்சலினாலும் உடல் சூட்டினால் கேசம் அதிகமாக உதிரும்.

தொடரும்...


அடுத்த பாகத்தில் மற்ற காரணங்களை பார்க்கலாம்.

தனுஷ் நம்ம பிரதர்தான் - சிம்பு பேட்டி


சிம்பு தனது ரசிகர்களுக்காக கொடுத்த சிறு பேட்டி

'தபாங்' சல்மான் கேரியரில் அல்டிமேட் ஹிட். 'ஒஸ்தி' உங்களுக்கு அப்படி அமையுமா? 'தபாங்' செமத்தியான ஒரு போலீஸ் படம். ஆனா, முரட்டுத்தனமா பெரிய மீசை வெச்சுக்கிட்டு, நரம்பு தெறிக்கிற மாதிரி பேசிக்கிட்டு இருக்கிற போலீஸ் இல்லை இது. விஜய் கேரியரில் 'கில்லி' அடிச்ச தரணி துணைக்கு வந்தார். அந்த மாஸ் இந்தப் படத்தில் அப்படியே இருக்கு. தொண்ணூறே நாள்ல படத்தை முடிச்சுக் கொடுத்தார். சல்மான் மாதிரியும் பண்ணக் கூடாது. சல்மான் செஞ்ச சில விஷயங்களைப் பண்ணாமலும் இருக்க முடியாது. முதல் நாள், முதல் ஷாட் எடுக்கிறவரை யோசனையா இருந்தது. ஆனா, அப்புறம் அடி பின்னிட்டோம். இதுவரை இப்படி ஒரு மாஸ் ஃபிலிம் நான் செய்தது இல்லை. படத்தில் எனக்குப் பேரு 'ஒஸ்தி' வேலன். சந்தானம் 'சிவாஜி தி பாஸ், ஒஸ்தி தி மாஸ்'னு சொல்லிட்டே இருப்பார். போலீஸ்ல ராபின்ஹுட் மாதிரி ஒரு ஆள்.    ஆனா அண்ணே... இந்த சிக்ஸ் பேக், எய்ட் பேக்லாம் எவண்ணே கண்டுபிடிச்சான்! மூணு மாசமா நான் கொலைப் பட்டினி. தண்ணிகூட இங்க் ஃபில்லர்ல அளந்து குடிக்க வேண்டி இருக்கு. என்னால பிரியாணி இல்லாம உயிர் வாழவே முடியாது. ஆனா, இப்போ ஒண்ணுகூடத் தொட முடியலை. ஆனா, உடம்பு சும்மா கிண்கிண்ணுனு ஆயிருச்சு!

ரொம்ப ஆசைப்பட்டு மல்லிகா ஷெராவத்தைக் கூட்டிட்டு வந்துட்டீங்கபோல?

நானா ஆசைப்பட்டுக் கேட்கலை. ஆனா, அந்தப் பாட்டுக்கு அப்படி ஒரு வெயிட் பார்ட்டி தேவை. 'தபாங்'கில் 'முன்னி' பாட்டு ப்ளாக்பஸ்டர் ஹிட். அங்கே மலாய்க்கா அரோரா பின்னியிருப்பாங்க. 'முன்னி'யைவிடப் பட்டையைக் கிளப்பணும்னு மல்லிகாவை இறக்கிட்டோம். இங்கே வந்து இறங்குறவரைக்கும் என்னை அவங்களுக்குத் தெரியாது. ட்விட்டரில் 'சென்னைக்கு சிம்புவோட டான்ஸ் ஆடப்போறேன்'னு எழுதி இருக்காங்க. 'ஐயோ, டான்ஸ்ல அவன் பட்டையக் கிளப்புவான். பீ கேர்ஃபுல்'னு நிறைய கமென்ட்ஸ் குவிஞ்சுதாம். ஷாட்டுக்கு வந்து லோக்கலா இறங்கி அடிச்சாங்க. மல்லிகா... மல்லிகாதான். 'கலாசலா... கலாசலா'னு வாலி சார் எழுதின பாட்டை எல்.ஆர்.ஈஸ்வரியும் அப்பா டி.ஆரும் பாடி இருக்காங்க. செம ரவுசா வந்திருக்கு ஸாங்!

ஜீவா உங்களை 'நண்பன் இல்லை'னு சொல்லி இருக்காரே?


நான் யார்கிட்டயும் அவ்ளோ ஈஸியாப் பழகிட மாட்டேன். சிம்புவை நெருங்கறது கொஞ்சம் கஷ்டம். புரிஞ்சுக்கிறது அதைவிட கஷ்டம். 10 பேருக்கு நம்மளைப் பிடிக்கும். 10 பேருக்கு நம்மளைப் பிடிக்காது. என்ன செய்ய?

அதையும் தாண்டி எனக்கு நிறைய வேலை இருக்கே. நம்மளைப்பத்தி யார் என்ன பேசுறாங்கனு கேட்டுக்கிட்டே இருந்தா, அதுவே நமக்கு வேலையாப் போயிரும். எனக்கும் அவருக்கும் பிரச்சினை இல்லை. நான் நடிக்கலாம்னு நினைச்ச ஒரு படத்தில் அவர் நடிச்சார்... அவ்வளவுதான்!


ஆனா, அந்தப் படத்தில் நடிச்ச பிறகுதானே ஜீவா ஒரு இடத்துக்கு வந்துட்டார்?


எல்லாப் படமும் நானே பண்ண முடியாது. நான் ஓடும்னு நினைச்சு ஓ.கே. சொன்ன படம்தானே அது? அப்ப என் ஜட்ஜ்மென்ட் சரிதானே? சிலர் 10 ஹிட்கூடக் கொடுக்கலாம். ஆனா, ஆக்டர்... ஸ்டார்... ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. படம் நல்லா இருந்தா ஆக்டர் நடிச்சதைப் பார்ப்பாங்க. புரிஞ்சுக்காமல் ஆட்டம் போட்டா, யாரையும் கீழே இறக்கிடுவாங்க. முதல் நாள் தியேட்டருக்கு யாருக்கு ஓப்பனிங் வருதோ... அவங்கதான் ஸ்டார்!

ஒரு படம் ஜெயிச்சா, நான் காலரைத் தூக்கி விட்டுக்கிறதும் கிடையாது. தோல்வி அடைஞ்சா, தலையைக் குனிஞ்சுக்கிட்டுப் போறதும் கிடையாது. இந்த உலகத்தில் ஒரே ஒரு சிலம்பரசன்தான் இருக்கான்!

தனுஷ் நேஷனல் அவார்டு வாங்கிட்டார். உங்களுக்கு ஆசை இல்லையா?

தனுஷ் 'ஆடுகள'த்தில் உழைச்சதும் நடிச்சதும் அவ்வளவு சூப்பர். அதுக்கு நிச்சயம் கிடைக்கணும். நமக்கு அந்த ஆசையே இல்லை. எனக்கு 'கிரேட் என்டர்டெயினர்'னு பேர் வாங்கணும். அவ்வளவுதான். தனுஷ் நம்ம பிரதர்தான். அவருக்கு இந்த அவார்டு செல்லும்!

'நண்பன்' படம் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகப்போகுதே... நடிச்சிருக்கலாம்னு இப்ப தோணுதா?

இப்பவும் அப்படித் தோணலை. 'த்ரீ இடியட்ஸ்' சூப்பர் படம். ஷங்கர் கிளாஸ் ப்ளஸ் மாஸ் டைரக்டர். விஜய்க்கு வித்தியாசமான கேரக்டர். வெற்றிக்கு நல்ல கியாரன்ட்டி இருக்கும்!

தம்பி குறளரசனும் நடிக்க வர்றார்போல?


ஆமா! அடுத்த வருஷம். சென்டிமென்டா அப்பா டைரக்ஷன். ஜிம்லயே கெடக்கான். நல்லா டான்ஸ் ஆடுறான். அழகா வசனம் பேசுவான். ஆட்டமும் பாட்டமும் நடிப்பும் ஜீன்லயே இருக்கு. 'பதற்றமே வேண்டாம். அழகா நடி. எல்லோரையும் மதி!'னு மட்டும் சொல்லி இருக்கேன். ரொம்ப ஸ்வீட் பாய். பொண்ணுகளுக்கு ரொம்பப் பிடிக்கும்!


எப்போ கல்யாணம்?

வீட்ல கேட்டுட்டே இருக்காங்க. இதைப்பத்திப் பேசணும்னு அப்பா அம்மா பக்கத்தில் வந்தாலே... ஓட்டம் பிடிச்சிடுவேன். கண்டிப்பா லவ் மேரேஜ்தான். ஆனா, பொண்ணு நம்மளைத் தேடி வரணும். காதலிக்கிறதும் கல்யாணம்பண்ணிக்கிறதும் என் உரிமை.

நான் எது பண்ணாலும் ஒரு குரூப் இருந்துக்கிட்டு கெடுக்குதுண்ணே. புரொடியூசர், டைரக்டர்கிட்ட போய் 'சிம்புவை வெச்சுப் படம் பண்ணாதீங்க'னு சொல்றாங்க. ஹீரோயின்கிட்டே போய் 'ஐயோ... சிம்புவா ஜாக்கிரதை'னு போட்டுக் கொடுக்குறாங்க. மனசார யாரையாச்சும் காதலிச்சாக்கூட இடைஞ்சல் பண்ணுவாங்க போல. ஆனா, கடவுள் இருக்காரு. இதுவரைக்கும் கடவுள் என் கையைப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டு வந்திருக்கார். நிச்சயமா, அந்த குரூப்கிட்ட இருந்து தப்பிச்சு, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்போ அந்தப் பொண்ணு தோள் மேல கை போட்டுக்கிட்டு பேட்டி கொடுப்பேன்.

விஜய், சிம்புவை இணைத்த ஒஸ்தி !!

இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமெக் படமான ஓஸ்தி, தரணியின் இயக்கத்தில் சிம்பு மற்றும் புதுமுகம் ரிச்சா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சற்றும் எதிர்பாராமல் நடிகர் விஜய் கலந்து கொண்டு பாடல் கேசட்டை வெளியிட்டார்.

விஜயைப் பார்த்து விழாவில் கலந்து கொண்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர், காரணம் சிம்பு, "தல" அஜித்தின் தீவிர ரசிகன் ஆயிற்றே. இவ்விழாவில் இயக்குனர் தரணி, பாடாலாசிரியர் வாலி, சிம்புவின் தந்தை டி.ஆர் ராஜேந்திரன் மற்றும் நடிகர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினை பற்றி சிம்பு தனது பேஸ்புக்கில், பாடல் வெளியீட்டு விழா ரசிகர்களின் பேராதரவால் வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்தது. நான் தீவர அஜித் ரசிகன் என்று தெரிந்தும், எனக்காக இறங்கி வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக்கிய விஜய்  அண்ணாவிற்கு நன்றி! இதன் மூலம் நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துகாட்டியுள்ளார், என்று குறிப்பிட்டுள்ளார் .

இப்படத்தின் ப்ரோமோ ட்ரைலர் !!








ஜேம்ஸ்பாண்ட் இயக்குனர் படத்தில் தமிழ் நாயகன்


டுமாரோ நெவர் டைய்ஸ்  எனும் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த பெரும் வெற்றிப் படம். அப்படத்தை இயக்கிய ரோஜர் ஸ்போட்டிஸ்வுட் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் நடிகர் ஒருவர் நடிக்கிறார். அவர் தான் நம்ம சித்தார்த்.


ரங் தே பசந்தி படத்தில் ரோஜரை மிகவும் கவர்ந்த சித்தார்த், இப்படத்தில் கணித மேதை ஸ்ரீநிவாச இராமானுஜமாக நடிக்கிறார். சித்தார்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மக்களைத் தொடர்ந்து உலக மக்களிடையே பிரபலமாகப் போகிறார். தற்போது சித்தார்த் தீபா மேத்தா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிம்பு ஜீவா மோதல்


சிலம்பரசன் ஜீவா இடையே சிறிது காலமாக புகைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது. கோ திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது, பின்பு அதில் ஜீவா நடித்தார். சிம்புவின் இடத்தில் ஜீவாவா? என்று பலதரப்பட்ட கேள்விகள் எழும்பின. ஆனால் படத்தின் வெற்றி ஜீவாவும் சளைத்தவர் அல்ல என நிரூபித்தது. அது முதல் ஜீவாவும் சிம்புவும் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒருவரை ஒருவர் பற்றி பேசிவந்தனர்.

இப்போது சிம்பு தனது ஓஸ்தி பட வெளியீட்டு வேலைகளில் உள்ளார், அடுத்ததாக போடா போடி படத்தில் இறங்குவார். தற்போது கௌதம் மேனன் இயக்கும் நீதானே எந்தன் பொன்வசந்தம் படத்தில் ஜீவா நடிக்கிறார். போடா போடியும், நீதானே எந்தன் பொன்வசந்தம்  படமும் காதலர் தின படமாக வெளிவர உள்ளது. மீண்டும் இவர்களிடையே படங்களின் வழியாக மோதல் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content