தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

நடிகர் விஜய்யை தாக்கிய பாரதிராஜா!

தமிழ்நாட்டின் தற்போதியா முக்கிய பிரச்சனை முல்லைப் பெரியாறு அணை, ஆனால் அதுபற்றி கோலிவுட் நடிகர்கள் எந்த கருத்தும் வெளியிடாமல் அமைதிகாத்து வருகின்றனர். காரணம் அந்த நடிகர்களின் படத்தின் வியாரத்தை அது பாதிக்கும் என்பதால், இது பற்றி இயக்குனர் பார்திராஜா நேற்று தினசரி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டிய்ளித்து பேசுகையில்,

தமிழின் முன்னணி நடிகரான‌ ஒருவர் , அன்னா ஹாசாரவின் போராட்டத்திற்கு இங்கிருந்து டெல்லி எக்ஸ்பிரஸ் முலம் டெல்லி சென்று கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்துவிட்டு வந்தார்.

ஆனால் தற்போது நிலவும் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தேனி மாவட்டத்தில் அவதிப்படும் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுக்க அவருக்கு தேனி எக்ஸ்பிரஸ் தெரியாமல் போனதன் காரணம் என்ன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் முன்னணி நடிகர் என்று குறிப்பிட்டிருப்பவர் வேறு யாரும் இல்லை நடிகர் விஜய் தான்.



ரூ 300 கோடி கருப்பு பணம் பறிமுதல்!!

டெல்லி மேல் சபையில், மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் கேட்கப்பட்ட  கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கூறுகையில்:

மாநில வாரியாக கறுப்பு பணம் கைப்பற்றப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை பராமரிப்பதில்லை. ஆனால் நாட்டில் நடப்பு நிதியாண்டான  (2011௧2), அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை 7 மாதங்களில் ரூ.299.63 கோடி கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் பணம் மற்றும் நகைகள் அடங்கும். ரூ.179.59 கோடியில் பணமும், ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 2010-11-ம் ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடியில் நகைகளும் அடங்கும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2 - போபால் பேரழிவு: நீதி?

1984 டிசம்பர் 2 நள்ளிரவு 12.00 மணி
. மத்திய பிரதேச மாநிலம். போபால் நகரம். எல்லாப் பொழுதுகளையும் போலவே அன்றைய பொழுதும் கழியும் என்று வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தனர் மக்கள். அன்றைய பொழுதின் வேலைகளை முடித்த திருப்தியோடு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். விளையாடி முடித்த களைப்பில் பெற்றோரின் அரவணைப்பில் இனிமையான கனவுகளோடு குழந்தைகள் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். தொலைக்காட்சி பரவியிருக்காத நேரம், ஊரே நிசப்தமாக தூங்கிக் கொண்டிருந்தது. சில இடங்களில் மட்டும், டிரான்சிஸ்டரில் கிஷோர் குமாரும், லதா மங்கேஷ்கரும் காலங்களைக் கடந்த தங்கள் இனிய குரல்களில் இரவின் அமைதியை தாலாட்டிக் கொண்டிருந்தனர்.

போபால் மாநகரின் ஜெயபிரகாஷ் நகரில் ஹசீரா பீவி தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாரோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அந்த அமைதியை சட்டென்று குலைத்துப் போடும் வகையில், திடீரென்று அவரது கணவர் கடுமையாக இருமத் தொடங்கினார். "யாரோ மிளகாயை எரிக்கிறாங்க போல இருக்கு" என்றார். ஹசீரா பீவிக்கும் இருமல் கடுமையாக வந்தது. மிளகாயை எரிப்பதால் இப்படி மூச்சை முட்டும் புகை வராது. வெளியே பரபரவென்று ஏதோ பெரும் இரைச்சல் கேட்டது. மக்கள் ஓலமிட்டுக் கொண்டு ஓடியது போலிருந்தது. அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஹசீராவுக்கு தனது 11 மாத பச்சிளங் குழந்தையின் மீதே எல்லா கவனமும் சென்றது. ஏதோ பெரிய ஆபத்து என்று உணர்ந்து கொண்ட அவர், ஒரு போர்வையில் குழந்தையைச் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்தார் ஹசீரா.

தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு பல்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தனர். எங்கும் ஒரே குழப்பம். அலறல். கூச்சல். கூட்டத்தோடு ஓடிய ஹசீரா மக்களோடு மக்களாக அருகில் இருந்த ஒரு கல்லூரிக்குள் அடைக்கலம் புகுந்தார். அங்கு சென்ற பிறகுதான் அவசரத்தில் தனது 4 வயது மகனை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. தலைதெறிக்க மீண்டும் வீட்டுக்கு ஒடினார். இறந்து விட்டான் என்று நினைத்து தனது மகனை பிணங்களோடு வண்டியில் கிடத்தி வைத்திருந்ததை கண்டார்.

இது ஹசீராவின் கதை மட்டுமல்ல...போபால் நகரில் அன்று இரவு வாழ்ந்த அனைவருக்கும் இப்படித்தான் நேர்ந்தது. என்ன நடந்தது என்று உணர்வதற்குள்ளாக அன்று இரவே 4000 மக்கள் ஈக்களைப் போல் செத்து விழுந்தனர். யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த ஜெயப்பிரகாஷ் நகர், காஜி கேம்ப், சோளா கஞ்ச் மற்றும் ரயில்வே காலனி பகுதியில் வசித்த அனைவரும் கடும் பாதிப்புக்குள்ளாயினர். மூன்று நாட்களுக்குள் 8000 பேர் செத்து மடிந்தனர். அடுத்த சில ஆண்டுகளுக்குள் 15000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மொத்தத்தில் இந்த விஷ வாயு பேரழிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.
இவ்வளவுக்கும் காரணமாக இருந்த பூச்சி மருந்து தயாரிக்கும் யூனியன் கார்பைட் ஆலை 1969ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் போபால் மாநகரத்தில் உருவாக்கப்பட்டது. மோசமான பூச்சிக்கொல்லியாக உருவெடுத்திருந்த, சர்ச்சைக்குரிய டி.டி.ட்டி எனப்படும் டைக்ளோரோபினைல் ட்ரைக்ளோரோ ஈதேன் என்ற வேதிப்பொருளுக்கு மாற்றாக "செவின்" என்ற பூச்சிக்கொல்லியை தயாரிப்பதற்காக அது நிறுவப்பட்டிருந்தது. அந்தப் பூச்சிக் கொல்லி தயாரிக்க தேவையான முக்கிய வேதிப்பொருள் "மீதைல் ஐசோ சயனேட்" என்ற கொடிய விஷம்.

தொழிற்சாலையின் மூன்று தொட்டிகளில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் அப்போது இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஒரு தொட்டியில் மட்டும், பாதுகாப்பு அளவைவிட மிக அதிகமாக 40 டன் வாயு சேமிக்கப்பட்டிருந்தது. மீதைல் ஐசோ சயனேட்டின் கொதி நிலை 31.1 டிகிரி. அறை வெப்பநிலையிலேயே காற்றில் பரவும் தன்மை கொண்டது. இந்த வேதிப்பொருள் மணம் இல்லாத தன்மை கொண்டதால், காற்றில் பரவினாலும் உடனடியாக தெரிய வாய்ப்பில்லை. கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலால் மட்டுமே அறிய முடியும்.

அந்த வேதிப்பொருள் குளிர் நிலை தொட்டியில் வைக்கப்பட வேண்டும். 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப்பட வேண்டும். ஆனால் சம்பவம் நடந்தபோது தொட்டி வெப்பநிலை 20 டிகிரியாக வைக்கப்பட்டிருந்தது. 1984 டிசம்பர் 2 அன்று இரவு தொழிலாளர்கள் குழாய்களை சுத்தம் செய்து முடிக்கும் தருவாயில் 610 எண் கொண்ட தொட்டியில் ஏராளமாக தண்ணீர் புகுந்தது. மீதைல் ஐசோ சயனேட் உடன் தண்ணீர் கலந்தவுடன், அது சேமிக்கப்பட்டிருந்த இரும்புத் தொட்டி கிரியாஊக்கியாக செயல்பட, வேதி மாற்றம் நடைபெற்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய விஷவாயுவாக மாறி அது காற்றில் பரவ ஆரம்பித்தது.

காற்றும் வீச, அருகிலிருந்த மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் இவ்விஷ வாயு புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை மீளாத் துயிலில் ஆழ்த்தியது. இக்காற்று பரவத் தொடங்கியதும் சுவாசித்த மக்கள் கண் எரிச்சலும், நுரையீரல் எரிச்சலும் அடைந்து சுருண்டு விழுந்தனர். இதில் இருந்து தப்பிக்க வேகமாக ஒடியவர்கள், இவ்விஷக் காற்றை வேகமாக சுவாசித்து, அதிவேகமாக மாண்டனர்.

1985ல் மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விஷ வாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக கருச்சிதைவு ஏற்பட்டது, 21 குழந்தைகள் குறையுடன் பிறந்தன, 27 குழந்தைகள் இறந்து பிறந்தன என்று தெரிவித்தார். இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு பெண்களிடம் ஆய்வு நடத்தியதில் 90 சதவிகித பெண்கள் கருப்பை சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகியுள்ளதும், 79 சதவிகித பெண்களுக்கு இடுப்பு எலும்பு வீக்கமடைந்த நோயும், 75 சதவிகித பெண்களுக்கு கழுத்து எலும்பு தொடர்பான நோய்களும், 35 சதவிகித பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கும், 59 சதவிகித பெண்களுக்கு பல்வேறு நோய்களும் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய அனைவரையுமே மூச்சுத் திணறல், சுவாச நோய்கள் பாதித்திருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போபால் விஷ வாயு பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் கழித்து, அந்தச் சம்பவம் சுற்றுச்சூழலுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம் (சி.எஸ்.இ.) ஓர் ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக, யூனியன் கார்பைட் தொழிற்சாலை, அங்கிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீர், மண் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட 561 மடங்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நச்சு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொழிற்சாலை, அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசுப்பட்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கொடிய நச்சுகள், உடலில் நரம்பு பிரச்சினைகள், புற்றுநோய், ஈரல், எலும்பு, ரத்த அணுக்கள் உட்பட அம்சங்களை பாதித்து நோய்களை உருவாக்கும் தன்மை படைத்தவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் இந்திய அரசு சார்பில் எந்த ஆய்வும் தொடர்ச்சியாக நடக்கவில்லை. 1994ல் இந்திய மருத்துவ ஆராய்சிக் கழகம் ஓர் ஆய்வை அரைகுறையாக கைவிட்டுள்ளது. இந்தப் பேரழிவுக்கு பெரிய பின்னணி இருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

செவின் பூச்சிக் கொல்லிக்கு சந்தையில் வரவேற்பு குறையத் தொடங்கியதால் 1984 டிசம்பர் முதல் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை மூடி விடலாம் என்று அந்நிறுவனம் ஆலோசித்து வந்தது. இந்த அம்சம் மிக முக்கியமானது. மூடப்பட உத்தேசித்திருந்த ஓர் ஆலையில் இருந்து விஷவாயு கசிவு நடந்திருக்கிறது. எப்படியோ இந்த ஆலையை மூடப் போகிறோம். இந்த விஷவாயு மக்களிடையே என்ன பாதிப்புகளை நிகழ்த்தும் என்று பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று அமெரிக்க முதலாளிகளுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் என்ன எதிர்மருந்து கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள விஷவாயுவின் பெயரை ஆலை நிர்வாகத்திடம் மருத்துவர்கள் கேட்டபோது, உடனடியாகச் சொல்ல மறுத்திருக்கிறார்கள். யூனியன் கார்பைடின் இந்தியத் தலைவர் ஆண்டர்சன் இன்று வரை கைது செய்யப்படாமல், சௌகரியமாக வாழ்ந்து வருகிறார். யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் நிறுவனம்தான் இப்பொழுதும் எவரெடி பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது.

இப்படி அன்று ஒரு நாள் நடந்த விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட பாதிப்பு, போபால் நகர மக்களை 25 ஆண்டுகளைக் கடந்தும் வதைத்துக் கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரையும், சுற்றுச் சூழலையும் சீரமைக்க முடியாத அளவுக்கு கடுமையாக மாசுபடுத்தியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் இன்றுவரை முழுமையாக கிடைக்கவில்லை. கால் நூற்றாண்டு கழிந்த பின்னரும், நிவாரணத் தொகைக்காக போராடும் மக்களை, அரசு அமைப்புகள் வழக்கம் போல இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிக் கொண்டுள்ளன. மக்களுக்கு முழுமையான நஷ்டஈடும் பெற்றுத் தரவில்லை, நீதியும் பெற்றுத் தரவில்லை, ஆய்வும் நடத்தவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் உயிரிழந்த மக்களுக்கு ரூ. 100 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்போவதாக மத்திய அரசு சொல்கிறது.

இந்தப் பேரழிவில் இருந்து அரசு எந்த பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்று வரை இதுபோன்ற விபத்துகளை எதிர்கொள்வது குறித்து எந்த திட்டமிடலும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் கடலூரில் உள்ள சிப்காட், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகள், ராணிப்பேட்டையில் உள்ள தோல் பதனிடும் ஆலைகள், சேலம் மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகள் மீதைல் ஐசோ சயனேட் போன்ற பல நச்சுப்பொருட்களை இன்றும் பயன்படுத்தி வருகின்றன. இங்கு அவ்வப்போது நடைபெறும் சிறுவிபத்துகளும் உரிய முறையில் கவனம் செலுத்தப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன. எத்தனை போபால்கள் நடந்தாலும், அரசு திருந்தப்போவதில்லை. பரிசோதனைக்கூட எலிகளாக நம்மை பயன்படுத்தும் இந்தப் போக்கை எப்படி தடுத்து நிறுத்துவது?

போபால் பேரழிவு - முக்கிய தகவல்கள்
நிறுவனம் - யூனியன் கார்பைடு (தற்போது டவ்) எவரெடி பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் தயாரித்த பொருள் - நாம் அன்றாடம் சாப்பிடும் தானியப் பயிர்களின் மீது தெளிக்கப்படும் செவின் பூச்சிக்கொல்லி. இதுதான் உடனடியாக 5,000 பேரைக் கொன்றது வெளியான வாயு - மீதைல் ஐசோ சயனேட். கண் எரிச்சல், நுரையீரல் அடைப்பு ஏற்படுத்தி பார்வையை பறிக்கும், இறப்பை ஏற்படுத்தும் மணமற்ற வாயு.

பேரழிவு நடந்த நாள் - டிசம்பர் 2 நள்ளிரவுக்கு மேல், 1984
இறந்தவர்கள் எண்ணிக்கை - உடனடியாக 5,000 பேர் இறந்தனர். சில மாதங்களில் 15,000 பேர் இறந்தனர். 5,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கு தண்டிக்கப்பட்டவர்கள் - யாருமில்லை. கைதுகூட செய்யப்படவில்லை. இந்தியப் பிரிவுத் தலைவர் வாரன் ஆண்டர்சன், அமெரிக்க தீவில் உல்லாசமாக இருக்கிறார்.
நஷ்ட ஈடு கேட்கப்பட்டது - ரூ. 1500 கோடி
நஷ்ட ஈடு தரப்பட்டது - ரூ. 250 கோடி
(உச்ச நீதிமன்றம் மூலம்)

நன்றி : அ.சங்கர்,  வலை: கீற்று.


யாரும் மறந்துவிடக்கூடாது இந்த பேரழிவை...

நம் சமுதாயம்: சமுதாய அக்கறை உள்ளவரா நீங்கள்! உங்கள் குரல் ஒலிக்க!



நம் சமுதாயம் - இந்த பகுதி சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தவே, எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த வாயிலின் வழியாக தெரியப்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய எண்ணங்கள், கேள்விகள் மற்றும் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது வெறும் வெளிப்படுத்தும் இடம் மட்டும் அல்ல, அதற்கான தீர்வு, சரி செய்யும் வழிமுறைகள், சரியான இடத்திற்கு பிரச்சனையை எடுத்துச் செல்லும் வழிகள் என எதுவாக இருந்தாலும் விவாதிக்கலாம். இது ஒரு தொடக்கமே, சிறு துளியாக நாங்கள் தொடங்குகிறோம் அதை வெள்ளமாக மாற்ற வேண்டியது நீங்கள்தான்.

2 ஜி ஊழல், மின் வெட்டு, விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான‌ சாலை எனச் சமுதாயப் பிரச்சனை எதுவாயினும், கிராம‌மோ (அ) நகரமோ உங்கள் பிரச்சனையோ, பொதுப்பிரச்சனையோ (அ) அரசாங்கத்தில் சந்திக்க நேரிடும் இடர்பாடுகளோ எதுவாயினும், அதனை ஒரு கட்டுரையாக (அ) ஒரு தொகுப்பாக,  ஆங்கிலத்திலோ அ தமிழிலோ, புகைப்படத்துடனோ தட்டச்சு செய்து நம் சமுதாயம் என்ற தலைப்பில் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

சமுதாய பிரச்சனைகளுக்காக ஒன்று பட்டு குரல் கொடுப்போம் 


தமிழ் டைடிங்ஸின் ஆசிரியரின் அனுமதிக்கு பிறகு உடனே இந்த வலைப்பூவில் உங்கள் பெயருடன் பிரசுரிக்க (அ) வெளியிடப்படும் . (பிரச்சனைகளை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பினால் அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.)

மின்னஞ்சல் முகவரி:  tamiltidings@gmail.com

சென்னையில் ஒரே பி.பி.ஓ (BPO) நிறுவனத்தின் 4 நிர்வாகிகள் கைது


செவ்வாய்கிழமை அன்று சென்னை போலீசார் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 4 மூத்த நிர்வாகிகளை கைது செய்தனர். அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் செய்த புகாரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஈக்காடு தாங்கல் பகுதியை சேர்ந்த NxtGIPO Technologies எனும் நிறுவனம், கடந்த இரு மாதங்களாக அங்கு வேலை செய்யும் 600க்கும் அதிகமானவர்களுக்கு சம்பளம் கொடுக்காததால் புகார் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் தலைமை அலுவலகத்தினை கொண்டுள்ள நிறுவனம், ரூ 23000 சம்பளம் தருவதாக கூறியுள்ளது, பி.டெக் படித்த ஒருவர் கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் செலவு செய்து வேலைக்கு சேர்ந்துள்ளார், இரண்டு மாதங்களாக நிறுவனம் சம்பளம் கொடுக்க தவறியதால் புகார் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வேறு எந்த புகார்களும் வரவில்லை என்றும், ஒருவர் கொடுத்த புகாரின் பெயரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாக நடிக்கும் ரஜினிகாந்தும் ஆமிர்கானும்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  அதிகமாக பாலிவுட்டோடு நெருக்கமாகி வருகிறார், ரோபோ (எந்திரன்) திரைப்படம் வெளியானது முதல், ரஜினியின் பாலிவுட் பிரவேசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ரா ஒன் படத்திலும் ஷாருக்கானுடன் சிறு காட்சியில் நடித்தார். அடுத்து ஆமிர்கானுடன் ஒன்றாக நடிக்க விருக்கிறார்.

ரஜினி ஆமிர்கான் இணைந்து நடிப்பது திரைப்படத்தில் அல்ல விளம்பரத்திற்காக,  குழந்தைகளின் நலத்திற்காக எடுக்கப்படும் ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தில் இருவரும் இணைகின்றனர். ஊட்டச்சத்துக்குறைவு காரணமாக வரும் விளைவுகளை அதில் கூறுகின்றனர்.

டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிரடி மாற்றம்!!!

இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மற்றும் 5 ஒரு நாள்  பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வருகிற நவ.,6 ஆம் தேதி தலைநகர் டில்லியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான தேர்வு நேற்று மாலை கொல்கத்தாவில், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலமையில் நடைபெற்றது. அதன்படி இந்திய அணியில் அதிரடி மாற்றங்களாக‌ 15 பேர்  கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளது.

காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடமல் போன சீனியர்கள் சச்சின், சேவாக் அணியில் மீண்டும்  இடம்பிடித்துள்ளனர்.

கடந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல் படாத ஹர்பஜன் நீக்கப்பட்டு தமிழக வீரர் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் புதுமுக வீரர்கள் உமேஷ் யாதவ், வருண் ஆரோன், ரகானே, ராகுல் ஆகியோர் அணியில் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி:
தோனி(கேப்டன்), காம்பிர், சேவக், டிராவிட், சச்சின், லட்சுமண், யுவராஜ், அஷ்வின், பிரக்யான் ஓஜா, இஷாந்த், உமேஷ் யாதவ், விராத் கோஹ்லி, வருண் ஆரோன், ரகானே, ராகுல் சர்மா.

ஆஸ்த்ரேலியாவின் சாதனையை முறியடித்த இந்தியா!!

இந்திய அணி கிரிக்கெட்டில் பங்குபெற்று, முதன் முதலாக 300 ரன்களை சேர்க்க சுமார் 22 ஆண்டுகள் எடுத்துகொண்டது, சின்ன அணி என்று குறிப்பிடப்படும் ஜிம்பாப்வே கூட இந்த 300 ரன்களை வெகு குறுகிய காலகட்டத்தில் எட்டிவிட்டது. 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை இந்தியா தனது 300 ரன்களை சேர்த்து, தன்னையும் சாதனை படைத்த அணிகளுடன் தடம் பதித்துகொண்டது.

அதன் பிறகு இந்தியா அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்கியது. நேற்று முன் தினம் மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 300 ரன்களை குவித்தது. இத‌ன் மூலம் 65 வது முறையாக் 300 ரன்களை கடந்து இந்தியா ஆஸ்த்ரேலியாவின் சாதனை முறியடித்துள்ளது. 

இந்த 65 முறைகளில், 16 முறை இரண்டாவது பேட்டிங் தேர்வு செய்து 11 தடவை வென்றுள்ளது. இதில் மூன்று முறை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றுள்ளது.

இதுவரை ஒருநாள் போட்டியில் ஆஸ்த்ரேலியா அணி 64 முறை 300 எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ரூ. 1,200.க்கு உலகின் விலை மலிவான கையடக்க கணினி இந்தியாவில்!!

உலகின் விலை மலிவான கையடக்க கணினி (tablet PC), இந்தியாவில் தற்போது தகவல் தொழில்நுட்பம் மூலம் கல்வியை விரிவாக்க, மத்திய அரசு மாணவர்களுக்கு ரூ. 1,200.க்கு அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் வழங்கவிருக்கிறது.
இந்த கணினிக்கு ஆகாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனை அறிமுகப் படுத்தி பேசிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், இதற்கான விலை வரி மற்றும் போக்குவரத்து செலவையும் சேர்த்து மொத்தம் ரூ. 2276 ஆகும். ஆனால் மத்திய அரசு இதனை மாணிய விலையில் மாணவர்களுக்கு ரூ. 1200க்கு வழங்கவிருக்கிறது.

இந்த கையடக்க கணினி சிம் கார்டு வசதியுடன் இயங்கவல்லது. இதன் பேட்டரி சுமார் 3 1/2 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டது.

டேட்டவைன்டு என்கிற நிறுவனம் இதனை தயாரித்து வழங்கயுள்ளது. முதலில் 1 லட்சம் கணினி ஆர்டர் தரப்பட்டுள்ளது என்றும் பின்னர் மாணவர்களின் வரவேர்ப்பை பொருத்து 10 லட்சம் வரை ஆர்டர் தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதில் வேடிக்கை என்னவெனில் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாகவே வழங்கப்படுகிறது.

ஆரக்கிள் ஆன்லைன் டெஸ்ட் எழுதிய 13 வயது சிறுவன்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான "ஆரக்கிள்' நிறுவனம் ஆன்லைன் மூலம் நடத்திய தொழில்நுட்ப போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் திருநெல்வேலியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் விக்னேஷ்வரன்.  

திருநெல்வேலி வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - ரேவதி தம்பதியின் மகனான இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 8-வது வகுப்பு படித்து வருகிறார். தனது இந்தச் சாதனை குறித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  பாளையங்கோட்டையிலுள்ள தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் "சி' லாங்வேஜ் படித்து வந்தபோது கம்ப்யூட்டரில் எனக்குள்ள ஆர்வத்தைப் பார்த்த பயிற்சியாளர் எஸ்.சுந்தரபாண்டியன், ஆரக்கிள் நிறுவன தேர்வுக்கு உரிய பயிற்சியை அளித்தார். பி.இ., பிடெக் போன்ற உயர் படிப்புகளை முடித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மேலும் பயிற்சிக்காக மைக்ரோசாப்ட், சிஸ்கோ மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் நடத்தும் தொழில்நுட்பத் தேர்வை எழுதி அவர்களது திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.  இதற்காக அந்த நிறுவனங்கள் சான்றிதழ் அளிப்பதுடன் அவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியிலும் அமர்த்திக்கொள்ள வாய்ப்புள்ளது.  இந்த வகையில் ஆரக்கிள் நிறுவனம் நடத்திய ஓசிஏ-11ஜி தேர்வை எழுத என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். இத்தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி எழுதினேன். நானே எதிர்பாராத வகையில் இத்தேர்வில் 83 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். இவ்வளவு சிறிய வயதில் இத்தேர்தவை எழுதி வெற்றி பெற்றது நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என எனது பயிற்சியாளர் தெரிவித்தார்.  

 இதற்கு முன் மிகக் குறைந்த வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 14 வயதான ராகில் என்பவர் ஆவார். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் பொறியாளர் ஆவதே எனது லட்சியம். இத்தேர்வில் வெற்றி பெற்றதால் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக பி.இ., பி.டெக் வகுப்பில் சேரலாம் என்றார் அவர்.  பேட்டியின்போது உடனிருந்த பயிற்சியாளர் சுந்தரபாண்டியன் கூறுகையில், சாதாரணமாக இத்தேர்வில் வெற்றி பெற முடியாது. விக்னேஷ்வரனின் தீவிர முயற்சியாலும், அவரது பெற்றோர் கொடுத்த ஊக்கத்தாலும் இந்த வெற்றியை அடைந்துள்ளார் என்றார்.

பூமி நாளிதழ்

700 கோடி ஆகும் உலக மக்கள் தொகை

இந்த மாதத்தில், உலகின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை, 700 கோடியாகி விடும். 2100ம் ஆண்டிற்குள், இத்தொகை, ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்' என, ஐ.நா.,வின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 1804ம் ஆண்டு வரை, உலகின் மொத்த மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. 1960களில், 300 கோடியாக அதிகரித்தது. இன்னும் ஒரு நூற்றாண்டில், ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும்.மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் நாடுகளில் தான் காணப்படுகிறது. உலகில், மக்கள் தொகை அதிகரிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய, மூன்று வளர்ந்த நாடுகள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளன.

இந்த அதிகரிப்புக்கு பொருளாதார வளர்ச்சி, பிறப்பு விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு ஆகிய காரணங்களை, நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேநேரம், கருத்தடை வசதிகளை அதிகளவில் மக்கள் உபயோகப்படுத்தும் போது தான், பிறப்பு விகிதம் குறைய வாய்ப்பு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

டிஎன்எஸ்

பைக் ரேசில் கலக்கும் ரஜினி


மனிதன் எப்போதெல்லாம் அதிகமாக துன்பமான சூழ்நிலைகளை எதிர் கொள்கிறானோ, அப்போதெல்லாம் உறுதியான சவாலை மேற்கொண்டு விடாமுயற்சியின் இறுதியில் வெல்லும் வாய்ப்பை பெறுகிறான்.  சிறு வயதிலேயே தனது அப்பா இறந்தவுடன், பள்ளிப் படிப்பை இழந்து 16 வயதில் குடும்ப பாரம் முழுவதையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவர் தான் கே ரஜினி.

ரஜினி ஒரு ஆட்டோ மெக்கானிக், இரண்டு சக்கரங்களுக்கான பந்தயத்தில் கலந்து கொள்கிறார். சொந்தமாக மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி அதில் குடும்பத்தை தாங்கியவர் ரஜினி. பந்தயங்களில் அடிக்கடி பொழுதுபோக்கிற்காக கலந்து கொள்வார். தனது நண்பர்களுடன் சென்னை அருகில் உள்ள இருங்காட்டுக் கோட்டை பந்தய தளத்திற்கு ஒரு முறை வந்த பிறகு தான் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.


"பைக் எஞ்சின் சத்ததில் எனது மனதை பறிகொடுத்துவிட்டேன்,  எனக்கு நானே பந்தயப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். எனது ஒர்க் ஷாப்பில் வரும் வருவாயை வைத்து பந்தயத்திற்கு தேவையானதை வாங்கிக் கொண்டேன். ஒர்க் ஷாப்பில் இன்னும் என்னால் அதிக வருவாயை ஈட்டி இருக்க முடியும் இருந்தும் இது எனக்கு புது முகவரியை கொடுத்துள்ளது" என்று ரஜினி தெரிவித்தார்.

இப்போது அவர் தேசிய அளவிலான போட்டியாளர்கள் 10 பேருடன் போட்டியிடத் தயாராக உள்ளார். அவரின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவரை முன்னேற்றியுள்ளது. 2003ல் அவரின் திறமையை பார்த்து 2 வருடங்கள் டி.வி.எஸ் ரேஸ் ஒப்பந்தம் செய்தது. அன்று முதல் அவர் அனைவராலும் அதிகம் அறியப்பட்டார். தனது திறமையினால், ஆசிய ரோட் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டார். அதில் பங்குபெற்ற ஒரே இந்தியரும் இவரே.

பின்பு 2006ல் மலேசியன் சூப்பர் சீரீஸில் கலந்து கொண்டு கவாசாக்கி கோப்பையை வென்றார். அடுத்து ஐஒன் சீரீஸ் நடத்தும் சூப்பர் பைக் எனும் லீக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். "இது ஐ.பி.எல் போன்று நடந்தப்படும் போட்டியாகும், இதனால் இந்தியாவில் இரண்டு சக்கர வாகனப் பந்தயம் மக்களிடையே பிரபலம் ஆகும். எனது கனவு மோட்டோ ஜி.பி யில் பங்கு பெற்று வெல்வதே, முழுவதும் அதில் பங்குபெற மொத்தம் 5.5கோடி செலவாகும்." எனத் தெரிவித்துள்ளார் ரஜினி. ரஜினி வெற்றி அடைய வாழ்த்துக்கள்!!!

உண்ணாவிரதம் இருக்கும் நரேந்திர மோடி

அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை  சனிக்கிழமை (17/9/2011) முதல் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி துவக்கியுள்ளார். மூன்று நாள் உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிகிறது. கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, அந்தக் கரையை நீக்கும் முயற்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இஷான் ஜாஃப்ரி கொலை வழக்கில், விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது. மோடிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது, மோடிக்கும் பாஜகவினருக்கும் ஊக்கத்தை கொடுத்துள்ளது, அது மட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் குழு, மோடியின் ஆட்சி நிர்வாகத்தை பாராட்டியதால் அவருக்கு மேலும் சக்தியூட்டி உள்ளது. அடுத்ததாக பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று விவாதம் கிளம்பியயுள்ள நிலையில், திடீரென உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக தன் மீது பல்வேறு  அவதூறு நடந்ததாகவும், ஆனால், குஜராத் மாநிலம் எப்போதும் மனித நேயப் பாதையிலிருந்து மாறிவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாகவும், இந்த உண்ணாவிரதப் போராட்டம், யாருக்கு எதிரானதும் இல்லை, நல்லிணக்கம் தான் தமது சக்தி என்றும், தனது உண்ணாவிரதப் போராட்டம், வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவுகட்டும் வகையில் அமையும் என்றும் மோடி தெரிவித்தார்.

நரேந்திர மோடிக்கு, பாஜக தலைவர்கள் மட்டுமன்றி, கூட்டணிக் கட்சியான அகாலி தளமும் ஆதரவு தெரிவித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேரில் வந்து, மோடியை வாழ்த்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். நேற்று (17 செப்டம்பர்) அவரது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரபிக் கடலில் பாலம் அமைக்கும் மும்பை !!


இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் அரபிக்கடலின் மீது மும்பை மாந‌கரம் அமைக்க உள்ளது.

மும்பை தீவையும், ராய்காட் மாவட்ட தரை பகுதியையும் இணைக்கும் பாலமாகவும், 8 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மகாராஷ்டிரா முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் வழங்கியுள்ளார். மும்பை பெருநகர மண்டல வளர்ச்சி ஆணையம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டில் கடலையும், தரைப் பகுதியையும் இணைக்கும் இரண்டாவது மிகப்பெரிய பாலமாக இது இருக்கும்.

மும்பை டிரான்ஸ் ஹார்பர்ஸ் லிங்க் (எம்.டி.எச்.எல்.) என பெயரிப்பட்ட‌ இந்த பாலம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படவுள்ளது. ஏற்கனவே மிகப் பெரிய பாலம் மும்பையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சிறிய கார்களுக்கு போட்டியாக வரும் ஹுண்டாய் இயான்

இந்தியாவில் சிறிய ரக கார்கள், குறிப்பாக ஹாட்ச்பேக் (hatchback) ரக கார்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனை அறிந்துள்ள முன்னனி கார் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

இந்தியாவின் கார் தயாரிப்புகளில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய படைப்பாக வரும் H800 ரக காருக்கு இயான் எனப் பெயரிட்டுள்ளது. சாண்ட்ரோ ரக கார்களுக்கு இது மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்பார்க், ஆல்டோவிற்கு இது கடும் போட்டியாக அமையும் என கருதப்படுகிறது.

விவரக்குறிப்பீடு:

3 சிலிண்டர் கொண்ட எண்ஜின் (உந்துபொறி)
800 சிசி டிஸ்ப்லேஸ்மெண்ட்
50 பி.எச்.பி திறன்
சிறந்த மைலேஜ்
அழகான உட்புற அமைப்பு

இயான் கார் தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிமுகப்படுத்தப்படும் என்றும், இதன் விலை 3 லட்சங்களை ஒட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹுண்டாய் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குஷ்புவின் புடவையில் அன்னா ஹசாரே

அன்னா ஹசாரே இப்போது எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்துக் கொண்டே போகிறார், இளைய சமூதாயத்தை வெகுவாக கவர்ந்து விட்டார். இப்போது அவரின் படம் எம்பிராய்டரி  செய்யப்பட்ட சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

குஷ்பு படேல் எனும் 23 வயது பெண் அன்னா ஹசாரே படம் எம்பிராய்டரி  செய்யப்பட்ட சேலையை வாங்கியுள்ளார், படித்துக்கொண்டிருக்கும் அவர் கூறியதாவது, "அரசு அலுவலகத்தில் எப்போதெல்லாம் ஒரு வேலையை செய்ய கஷ்டமாகிறதோ, அப்போதெல்லாம் நான் இந்த புடவையை அணிந்து கொள்வேன், அதனால் எனது வேலையை செய்ய நான் லஞ்சம் கொடுக்கப்போவதில்லை என்று மக்களுக்கு தெரியும்" என்று அவரின் ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இந்த புடவையை அரசு வேலையில் இருக்கும் பெண்களுக்கு வழங்கி, சீருடையாக மாற்ற வேண்டும் என்றும், அதனால்  லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் மாட்டோம் என்ற எண்ணம் உருவாகும், அதோடு இல்லாமல்  இதன் மூலம் ஹசாரேவிற்கு முழு ஆதரவு தெரியப்படுத்த முடியும் என்றும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புடவைகளுக்கு பெயர் போன சூரத் நகரத்தில், அவரின் படம் எம்பிராய்டரி செய்யப்பட்ட சேலைகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர். ஒருவர் 50,000 சேலைகள் மொத்தவிலை விற்பனைக்கு கேட்டிருப்பதாகவும், இந்த புடவைகள் 500 முதல் 700 ரூபாய் வரை விலையில் கிடைக்கும் என்றும், இதை வியாபார நோக்கத்தோடு செய்யவில்லை என்றும் சேலை தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் காணொளியை காண கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்
Click the link below to see the video



கார் நிறுவனங்கள் இனி சென்னையில் இல்லை

சென்னையைச் சுற்றி ஏராளமான கார் நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் கார்களின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்ருக்கின்றன. இப்போது பல நிறுவனங்கள் சென்னையை விட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளன.

அந்நிறுவனங்கள் தமது புதிய ஆலையை அமைக்க குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளன, இது தமிழக தொழில்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக சென்னைக்கு அருகே ஆலை வைத்து கார் தயாரிக்கும் ஃபோர்ட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் இராண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான போஜோ குஜராத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ஆலையை திறக்க முடிவெடுத்துள்ளது.

முதலில் டாடா நானோ தொழிற்சாலை குஜராத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து பல நிறுவனங்கள் இம்முடிவை எடுத்துள்ளது.

தற்குமுக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்ட மின் தட்டுப்பாடுதான் என தமிழகத்தின தொழில் வர்த்தக தலைவர் ரஃபீக் அகமது கூறியுள்ளார். ஹூண்டாய் தொழிற்சாலையில் பல மாதங்களாக நடந்து வரும் தொழிலாளர் பிரச்சனை மற்றும் மின் தட்டுப்பாடு, ஆகியவை அந்நிறுவனத்தையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதாகவும், தமிழகத்தில் கார் உற்பத்திக்குத் தேவையான அம்சங்கள் சாதகமாக இருப்பதாகவும், மின் வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினால் முதலீடுகள் தொடர்ந்து வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

சொத்து மதிப்பை வெளியிட்ட மன்மோகன் சிங்

அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன, பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தில்னைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங்
, அவருக்கு நிலம் ஏதும் இல்லை என்றும், அவரது சொத்து மதிப்பு சுமார் 5 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
அதில், வங்கி டெபாசிட், இரண்டு வீடுகள் ஒன்று 90 மற்றும் 88 லட்சம் மதிப்புடையது , மற்றும் மாருதி கார் ஆகியவை அடங்கும். சண்கரில் ரு வீடு, டெல்லியில் ஒரு வீடு உள்ளது. வங்களில் சுமார் 3 லட்சம் டெபாசிட் வைத்திருக்கிறார். பிரதமரின் மனைவி குருஷரன் கவுர், வங்கியில் 11 லட்சம் டெபாசிட் வைத்துள்ளார்.

அமைச்சர் கமல்நாத்தின் சொத்து மதிப்பு 263 கோடி, இவருக்குதான் அதிக அளவு சொத்து இருக்கிறது. ஏண்டனியின் சொத்து மதிப்பு 39 லட்சம், பிரணாப் முகர்ஜியின் சொத்து மதிப்பு 1.25 கோடி. வீரப்ப மொய்லியின் சொத்து மதிப்பு 13 லட்சம்.

பா.சிதம்பரம் குடும்ப சொத்து 23 கோடி, அதில் சிதம்பரத்தின் பங்கு மட்டும் 11 கோடி. அதில் வங்கி டெபாசிட் 1.29 கோடியும் அடங்கும். சரத்பவாரின் சொத்து மதிப்பு 12 கோடி. அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிலங்கள், தங்கம் 7 லட்சம், வங்கி டெபாசிட் 18 லட்சம், அவரது மனைவிக்கு 32 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளன.

மு.. அழகிரி
யின் சொத்து மதிப்பு 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள நிலம், 7 கோடிக்கு மேற்பட்ட பணம், இரண்டு கார்கள், 1 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தங்கம். அவரது மனைவிக்கு, 5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்கள், வங்கி டெபாசிட், பணம் உள்ட 3.5 கோடி உள்ளன. 75 லட்சத்தில் ஒரு கார், 11 லட்சத்தில், தங்கம், 1.8 கோடிக்கு வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் ஆகும்.

அமைச்சரவையில் உள்ள 77 அமைச்சர்களில், ஜெயந்தி நடராஜன், திமுகவைச் சேர்ந்த ஜகத்ரட்சகன் உள்பட ஐந்து அமைச்சர்களின்
சொத்து விவரங்கள் வெளியாகவில்லை.

ஆய்வில் கடைசியாக வந்த சென்னை

இந்தியாவில் 6 நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சென்னைக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் புனே, ராஜ்கோட், புவனேஸ்வரம், இந்தூர், சூரத் மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் பாதசாரிகளுக்கான நடைபாதை வசதிகள் எங்கு நன்றாக உள்ளன என்று சிஏஐ - ஆசியா எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் சென்னை கடைசியாக வந்திருக்கிறது.

பாதசாரிகளின் நேரடிக் கருத்துக்கள், அரசு போக்குவரத்து மற்றும் நகர்வுக் கொள்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 54 மதிப்பெண்கள் பெற்று, புனே நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 40 மதிப்பெண்களை மட்டும் பெற்று சென்னை நகரம் கடைசி இடத்தை பிடித்தது. மற்ற நகரங்களை விட பாதசாரிகளுக்கு இங்குதான் வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மொத்தமாக 6 நகரங்களிலுமே  பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பாதசாரிகளுக்கான வசதிகள் மோசமான நிலைதான் இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்திய நகரங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம், நகரமைப்புத் திட்டங்களில் போதிய கவனம் வேண்டும் என்று சிஏஐ – ஆசியா இந்திய அமைப்பின் பிரதிநிதி பார்தா பாஸு தெரிவித்துள்ளார்.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content