தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

பில்லா 2 படப்பிடிப்பில் அஜித் காயம் !!

மங்காத்தாவின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அடுத்த படமான பில்லா 2 வில் அஜித் பிசியாகயுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹதராபாத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது, சண்டைக்காட்சியின் போது அஜித், சிறிய‌ தடுமாற்றத்தால் கிழேவிழ நேரிட்டது. ஆதலால் உள்ளங்கையில் மட்டும் கொஞ்சம் அடிப்பட்டுள்ளது. பிறகு ஒரு மணி நேர ஒய்வுக்கு பின்னர் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

இதுவரை பில்லா 2 வில் அஜித்தை இளமையான அழகான டேவிட் பில்லாவாக காட்டிருக்கிறோம் என்றார் படத்தின் ஒளிப்பதிவாளர்.

நடிகர் விஜய்யின் மனக்கசப்பு!!...


இந்த திபாவளியன்று விஜய்யின் வேலாயுதம் மற்றும் சூர்யாவின் ஏழாம் அறிவு என இரண்டு படங்கள் திரைக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வ‌ரவிருக்கின்றன. இதனுடன் ரஜினி நடித்து இந்தி மற்றும் தமிழில் வெளியாகும் ரா ஒன் படமும் திரைக்கு வருவிருக்கிறது.

இதில் விஜய்யின் மனக்கசப்பு என்னவெனில், தனது படம் 38 ஸ்க்ரினில் மட்டும் சென்னையில் வெளியாகிறது . சென்னையில் 38 ஸ்க்ரினில் வெளியாகிறது என்பது விஜய் படத்திற்கு இது சாதனைதான். ஆனால் சூர்யாவின் ஏழாம் அறிவு படம் 48 ஸ்க்ரினில் வெளியாகிறது என்பதுதான். வேலாயுதம் படம் ஹிட் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த வேதனை அவர் முகத்தில் தெரிகிறதாம் .


அது மட்டும் இன்றி ஒரு நாள் முன் படம் வெளியிட்டால் நல்ல‌ கலக்க்ஷன் கிடைக்கும் என்று திட்டமிட்டிருந்தனர்.  அதுவும் இப்பொது இல்லை என்றாகிவிட்டது, காரணம் தெரியவில்லை..ஆனால் படம் இம்மாதம் 26 ஆம் தேதி திபாவளியன்று வெளியாகிறது என்று அங்கரன் இன்டர்நெஷனல் தெரிவித்துள்ளது....


இருக்காதா பின்ன...?  ஒரு மனுஷன் எவ்வளவு நேரம்தான்  வலிக்காத மாதிரியே நடிப்பான் .....


சென்னையில் ஏழாம் அறிவு 19ஆம் தேதி முதல்!!!

முன்பு எப்போதும் இல்லாத அளவில் சூர்யாவின் படம் ஏழாம் அறிவு பிரம்மாண்டமாக சென்னையில் மட்டும் 47 ஸ்கிரினில் வெளியாகயுள்ளது. கடைசியாக வெளியான மங்காத்தா திரைப்படம் 40 ஸ்கிரினில் சென்னையில் வெளியாகி மிகப்பெரிய கலக்க்ஷன் கண்டது.

அப்படி பார்த்தால் இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் 80% ரசிகர்கள் வந்தாலே மங்காத்தாவின் முதல் நாள் வசுலை இது முறியடித்துவிடும். அது மட்டும் இன்றி, சென்னையின் பிரகாசமான அனைத்து திரையரங்குகளிலும் ஏழாம் அறிவு வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது.

சரி தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறிர்களா?, இப்படத்தின் முன்பதிவு சென்னையில் வருகிற 19 ஆம் தேதி முதல் அனைத்து திரயரங்குகளிலும் தொடங்குகிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி தனது ட்விட்டரில் குற்ப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பாலாவின் "எரியும் தனல்" !!

சில வாரங்களுக்கு முன்பு, இயக்குனர் பாலா சற்றும் எதிர்பாராத விதமாக அதர்வாவை சந்தித்து அடுத்த படம் எதுவும் கமிட் ஆகாதே, எனது அடுத்த படத்தில் நீ தான் ஹீரோ என்றார். இதனை சற்றும் எதிர்பாராத அதர்வா, தனது அதிர்ஷடத்தை எண்ணி உடனே சரி என்று சொல்லிவிட்டார். காரணம் பாலா படத்தில் நடித்த அனைவரும் இன்றைய கோலிவுட்டின் முன்னனி நாயகர்கள்.

மலையாலத்தில் வெளிவந்த ஒரு நாவலை பாலா படமாக்க திட்டமிட்டுள்ளார். அதன் பெயர் தமிழில் "எரியும் தனல்". அதாவது நடுத்தர குடும்பத்தின் ஒரு அப்பாவும் அம்மாவும் தங்கள் பிள்ளைகளை முன்னேற்ற எவ்வளவு சிரமப் படுகிறார்கள் என்பதுதான் கதை.

ஒரு முக்கியமான கதையாசிரியர் ஸ்கிரிப்ட் தயார் செய்கிறார். இதன் நடுவில் கதாநாயகி தேர்வும் நடந்து வ‌ருகிறது. வழக்கமாக இளையராஜா மற்றும் யுவனிடம் செல்லும் பாலா இம்முறை ஜி.வி பிரகாஷிடம் சென்றுள்ளார். மற்ற படக்குழுவினர் பற்றி தகவல் விரைவில் வெளியாக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடை அடைப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல்  6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று முழுமையான கடை அடைப்பு நாளை முதல் தொடங்குகிறது. இன்று மாலை 5 மணி வரை கடைகள் இயங்கும். இன்று 5  மணி முதல் விடுமுறை தொடங்கும். உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முழுவதும் 6,691 மதுக்கடைகள் உள்ளன, அதில் சென்னையில் மட்டும் 482. நேற்று முதல் விற்பனை அதிகரித்துள்ளது. இன்றும் விற்பனை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் இருப்பு வைத்துள்ளனர். கட்சிகளும் தங்களுக்கு தேவையானதை வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர்.

குடிமகன்களுக்கு 6 நாட்கள் திண்டாட்டம்தான்!

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content