தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

மட்டன் சுக்கா வறுவல்



தேவையான பொருட்கள்

மட்டன் - 350 கிராம்

பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 2 அல்லது சின்ன வெங்காயம் – 30

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

மசாலாதூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி

பூண்டு(பொடியாக நறுக்கியது) – 5 பல

அரைக்க

தேங்காய் துருவியது – 2 மேசைக்கரண்டி

கசகசா – 1 தேக்கரண்டி அல்லது முந்திரிபருப்பு - 5

சோம்பு – 1 தேக்கரண்ட

தாளிக்க

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 2

பிரியாணி இலை - 1

கருவேப்பிலை – சிறிது

சோம்பு – 1 தேக்கரண்ட

செய்முறை
மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய், 1 மேசைக்கரண்டி வெங்காயம், சிறிது பூண்டு சேர்த்து வதக்கவும்.

 மட்டன் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். மல்லித்தூள், 1 தேக்கரண்டி மசாலாதூள், பாதி உப்பு , ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 மட்டன் சரியாக இல்லையென்றால் 1 /2 கப் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி வேக விடவும்.

 குக்கரில் இருந்து ஆவி வரும்போது, குறைந்த சூட்டில் அடுப்பை வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

 அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவொன்றாகச் சேர்க்கவும்.

 பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

 பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். குக்கரை திறந்து மட்டன் துண்டுகளை தனியாக வடித்து எடுத்து வைக்கவும்.

 மட்டனில் இருந்து வடித்து வைத்த தண்ணீரை வதங்கிக் கொண்டிருக்கும் மசாலாவில் ஊற்றி குழம்பு திக்ககும் வரை வதக்க வேண்டும்.

 கடைசியாக வேக வைத்த மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

கோலிவுட்டின் நட்சத்திர நாயகனாக மாறிய 'பில்லா 2' அஜித்


மங்காத்தா எனும் மாபெறும் வெற்றி அஜித்தின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் கூட்டியுள்ளது. மங்காத்தா வெளிவந்து இரண்டு வாரங்களில் படம் எடுக்கச் செலவான தொகையை விட அதிகமாக தொகையை வசூலித்துவிட்டது. சமீபத்தில் வெளிவந்த படங்களில் மிக சீக்கிரமாக எல்லோருக்கும் லாபத்தை கொடுத்துள்ள படம் மங்காத்தா.

இது அஜித்தின் அடுத்த படமான 'பில்லா 2'வின்  எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது, பில்லா 2 வின் கதை முதல் பாகத்தில் இருந்து முன்நோக்கி பின்னப்பட்ட கதையாக எடுத்து வருகின்றனர். கதையின் நாயகனான டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்று சொல்லப்படுகிறது.

வைடு ஆங்கிள் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவிலும், அடுத்ததாக டிசம்பர் மாதம் ரஷ்யாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். படம் 2012ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டிற்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


மங்காத்தாவிற்கு பிறகு அஜித்தின் நிலை மேலும் உயர்ந்துள்ளதால், 32 கோடிக்கு  பேசப்பட்டு வந்த பில்லா2 வின் பட உரிமைக்கு இப்போது கடும் போட்டி நிலவி உள்ளது. மும்பையை சேர்ந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம் 40 கோடிக்கும், மலேசியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 45 கோடிக்கும், இன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத் தலைவர் சுனிர் கேட்டர்பால் 50 கோடிக்கும் வாங்க பேச்சுவார்த்தை நடக்கிறது.


அஜித்தின் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஏ.எம்.ரத்னம் அஜித்தை வைத்துத்  தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 17 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப் போவதாக தெரிகிறது. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் மாறியுள்ளார்.


கிறுக்கல்கள் - வெறும் மொக்கை


எப் 'figar'ஐ யார் யார் நோக்கினும் , அப் 'figar'ai Pickup பண்ணுவது அறிவு
 Sight அடித்து வாழ்வரே வாழ்வார் , Love செய்வோர் Feel பண்ணியே சாவர் .
 நம்மை நோகும் பெண் நம்மை நோகவிடல் , Nokia வாங்கி என்ன பயன் .
பெடியள் சுட்ட புண் உள்ளாறும் , ஆறாதே Lady'al சுட்ட மனம்.
******
காதலி:என்கிட்ட உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?
என்னோட அழகான முகமா?
அன்பான மனமா?
பணிவான குணமா?
காதலன்:உன்னோட இந்த காமெடி தான்!!!
******
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன்
எழுதிய கவிதை
"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது
வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது"
******
அனகோண்ட 'க்கும் அலுமினியம் குண்ட 'க்கும் என்ன வித்தியாசம் ????
தண்ணிக்குள்ள இருந்த , அது அனகோண்ட .
உள்ள தண்ணி இருந்த , அது அலுமினியம் குண்டா .
******
பேருந்தில் இரு பெண்கள் ஒரு ஆசனத்தில் யார் இருப்பது என்பது பற்றி சண்டையிட்டுக் கொண்டனர். உங்களில் யார் முதியவரோ அவர் இருக்கலாம் என்றார் நடத்துனர். ஆசனம் வெறுமையாக இருந்தது
******
GIRL FRIEND' என்பவள் ஒரு இன்டர்நெட் வைரஸ் மாதிரி...
உங்கள் வாழ்க்கையில் ENTER ஆகி,
உங்கள் பாக்கெட்டை SCAN செய்து,
உங்கள் பணத்தை TRANSFER செய்து,
உங்கள் மூளையை EDIT செய்து,
............அவளுடைய பிரச்சனைகளை DOWNLOAD செய்து,
உங்கள் மகிழ்ச்சியை DELETE செய்து,
முடிவில் உங்கள் வாழ்க்கையை HANG செய்து விடுவாள்!!
அதனால் உங்கள் GIRL FRIEND'ஐ தவிருங்கள்! அவள் செல் நம்பரை
எனக்கு கொடுங்கள்! ஏனெனில் நான் ஒரு
PROFESSIONAL ANTIVIRUS
******
ஒரு பொண்ணோட life ''ball'' மாதிரி
16-18 வயசு rugger ball மாதிரி 30 பேர் துரத்துவாங்க
18-22 வயசு football மாதிரி 22 பேர் பின்னாலையே போவாங்க
22-25 வயசு basketball மாதிரி 10 பேர் பின்னாலையே போவாங்க
25-28 வயசு snowball மாதிரி 5 பேர் பின்னாலையே போவாங்க
...28-31 வயசு golf ball மாதிரி ஒருத்தன் பின்னாலையே போவான்
31 வயசுக்கு மேல் volley ball மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிட்ட தள்ளிவிட பாப்பான்......
******
Facebook, Yahoo chatல pickup ஆகுற பொண்ணும்.... Tea கடைல விக்குற bann'ணும்... நிச்சயமா பல பேரு கை மாறி தான் வந்திருக்கும் ... ஜாக்கிரதை மச்சி..
******
ஒரு பிச்சைக்காரன் : ஐயா..... டீ குடிக்க எட்டு ரூவா தாங்க ஐயா
நம்மாள்: ஏன்யா, ஒரு டீ நாலு ரூபா தானே, நீ எட்டு ரூபா கேட்கிற?
பிச்சைக்காரன்: என் கேர்ள் பிரண்டுக்கும்(girl friend) சேர்த்துதான்யா
நம்மாள்: அட்பபாவி. நீயே பிச்சக்காரன். உனக்கு கேர்ள் பிரண்டா(girl friend)
பிச்சைக்காரன்: காதலிச்சப்புறம்தான்யா இந்த நிலமைக்கு வந்துட்டேன்
******
ஓவரா( over) பேசுற வாயும்... நைட்ல(night) கத்திற நாயும்.... அடி வாங்காம இருந்ததா சரித்திரமே இல்லை.......
******
ஷோபா - குரைக்கிற நாய் கடிக்காது. ஏன் தெரியுமா?
தீபா - தெரியாதே!
ஷோபா - ரெண்டு வேலையையும் ஒரே சமயத்திலே அதாலே செய்ய முடியாது.
தீபா - ??????
******
காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறதே ! ஆச்சரியக் குறி!!!
******
facebook: உன்ன மதிச்சு Tag பண்ணினா, நீ என்ன பண்ணனும்?? சொல்லு செல்லம் நீ என்ன பண்ணனும்?? ஒன்னு comment பண்ணனும், இல்ல like பண்ணனும்!! அத விட்டுட்டு ஏன் tag அ remove பண்ற!! இல்ல தெரியாமதான் கேட்குறேன், நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டாகறா??? வருசத்துக்கு ஒருதடவை Log in பண்ற உனக்கே, அவ்ள அதுப்புன்னா, Daily Log in பண்ற எங்களுக்கு எவ்வளவு அதுப்பு இருக்கும்... ஒழுங்கா Comment பண்ணு ..........!!
******
ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள் ...
1.நோ ஐடியா (no idea)
2.நண்பர்களாக இருக்கலாம்
3.செருப்பு பிஞ்சிடும்
4.நான் காதலை வெறுக்கிறேன்
5.நான் உன்னை வெறுக்கிறேன்
6.பெற்றோர் திட்டுவாங்க
7.காதலில் நம்பிக்கை இல்லை
8.யோசிக்க நேரம் வேண்டும்
9.உங்களோட மாத வருமானம் என்ன?
10.மன்னிக்கவும் அண்ணா
11.நான் என்னுடைய பெற்றோர மட்டும் தான் காதலிக்கிறேன்
12.நீங்க எனக்கு அப்பா மாதிரி
******
FORMULA இல்லாத MATHS ஐ கேட்டேன் EQUATION இல்லாத ACCOUNTS கேட்டேன் PROBLEM இல்லாத MANEGEMENT கேட்டேன் PROGRAME இல்லாத COMPUTER கேட்டேன் ASSIGNMENT இல்லாத SUBJECT கேட்டேன் PLANTS இல்லாத BOTNEY கேட்டேன் ANIMALS இல்லாத ZOOLOGY கேட்டேன் WARS இல்லாத HISTORY கேட்டேன் TEST இல்லாத MARKS ஐ கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை அதனால் நானும் படிக்கவில்லை EXAM EXAM வேண்டாம் என்று DEGREE DEGREE DEGREE கேட்டேன்.
******
காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்......
******
பையன்; மம்மி,எனக்கு தம்பி பாப்பா வேனும்
அம்மா;உங்க டாடி துபாய் போயிருக்கார்..வந்த உடனே யோசிப்போம்..
பையன்;நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் கொடுப்போம்.
அம்மா;டாடிக்கு நீயே சர்ப்ரைஸ்தான்டா......
******
2 பூச்சி night walking போச்சு .
ஒரு பூசிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு
பூசிக்கு குளிர்ல ,Why?
அது "கம்பளி பூச்சி "
******
பத்து ரோஜா பூவா பறிச்ச ஒரு முள்ளு குத்த தன் செய்யும் .
அதபோல 10 figare'kku route போட்ட , ஒரு செருப்படி வாங்கி தன ஆகணும் .
காதல் 'ல இதல்லம் சகஜமப்பா!
******
திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
******
அன்பே நீ ஒரு "இட்லி", உனக்கு
நாண்டான் "சட்ணி"...
நீ ஒரு "பொங்கல்", உன் அப்பா
எனக்கு "அங்கிள்"...
நீ ஒரு "தயிர்", ஆனாலும் நீ
...என்னோட "உயிர்"...
நீ ஒரு "ரசம்", என்ன லவ்
பண்ணலன வைப்பப் "விசம்"....
நீ ஒரு "புராட்டா", இப்பவே உன்னை
பாக்க வராட்டா....:P
******
3 G A P A 6 = ? யோஷிங்க
எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!
இது கூட தெரியாதா?
விடை: முஞ்சிய பாரு…
******
லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!
******
வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)
நல்லா ஓடுது… கூ....சிக்கு..புக்கு..சிக்கு..புக்கு..சிக்கு..புக்கு..
******
வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள்.
வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.
இதுதான் உலகம்.
******
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….
******
“லாரி”ல கரும்பு ஏத்துனா “காசு”!
“கரும்பு”ல லாரிய ஏத்துனா “ஜூசு”!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்‘ன்னு படிக்குற நீங்க ஒரு “——-” ஆமாங்க.. அதான்… அதேதான்…லூசு
******
 அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
 ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
 பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
 என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?…..

சூர்யா க்ரிஷ் இணையும் புதிய திரைப்படம் 'க்ரிஷ்ணம் வந்தே'


7ஆம் அறிவு, மாற்றான் படங்களுக்கு பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படம் 'க்ரிஷ்ணம் வந்தே', இப்படத்தை இயக்கப் போவது வானம் திரைப்படத்தை இயக்கிய க்ரிஷ். இது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கிறது. சூர்யாவின் படங்கள்  இப்போது தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், தெலுங்கிலும் எடுக்க முடிவெடுத்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கதாநாயகி, மற்றும் இசையமைப்பாளர் இன்னும் முடிவாகவில்லை கூடிய விரைவில் முழுமையான அறிவிப்பு வெளிவரவிருக்கிறது.

பாடல்களை 'காப்பி' அடிக்கும் இசை அமைப்பாளர்


தான் இசை அமைக்கும் திரைப்படங்களில் பாடல்களை காப்பி அடிப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதனால் அவர் இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தெய்வத் திருமகள் படத்தில் அவர் ஒரு பாடலை ஆங்கில கார்ட்டூன் படங்களில் இருந்து எடுத்துள்ளார்.  அவரது ஆடுகளாம் பாடல் கூட ஹாலிவுட் படத்தில் இருந்து திருடப்பட்டது என்று கூறப்படுகிறது. அதனால், படத்தயாரிப்பாளர்கள் அதிருப்தியினை சம்பாதித்துள்ளார்.

இதனால் இயக்குனர்கள் விஜய் மற்றும் செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜை அணுகியுள்ளதாக தெரிந்துள்ளது. ஆனால் அவரும் அதே பாணியை பின்பற்றுவதாகவும் பேசிக் கொள்கின்றனர்.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content