தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

பேஸ்ஃபுக் பக்கம் ‍-- 1,000,000,000,000

அமெரிக்கவின் டைம் எனும் பத்திரிக்கை வெளியிட்ட புள்ளிவிவரப்படி கடந்த ஜூன் மாதம் பேஸ்ஃபுக்கின் பக்கங்கள் 1,000,000,000,000 (1 ட்ரில்லியன் page views) முறை பார்க்கப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையின்படி 870 மில்லியன் பேஸ்ஃபுக்கின் பதிவாளர்களையும் தாண்டி 120 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ள்து. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது யு ட்யுபு (youtube) ஆகும், ஆனால் இவை அதனுடன் ஒப்பிடுகையில் 10 ல் ஒரு மடங்கு தான் பார்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த பக்கத்தினை பேஸ்ஃபுக்கின் பதிவாளர்களே பார்த்திருக்கூடும் என்றும் அல்லது புதிய பயனாளர்கள் வந்திருக்க‌கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை

ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கு வந்துள்ள ஆணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த ஆணை உள்துறை செயலாளர் மூலம் சிறைத்துறைக்கு அனுப்பப்படும், சிறை அதிகாரிக்கு ஆணை கிடைத்த 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இதனால் வேலூர் சிறை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் பலியானார். வழக்கின் விசாரணைக்குப் பிறகு 1998 -ம் ஆண்டு  பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். மற்றவர்களின் தண்டனை குறைக்கப்பட்டது.

அதன்பின் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி தனக்கு மகள் இருப்பதால் கருணை மனு கொடுத்தார்,  மனு ஏற்கப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருந்தனர். அந்த கருணை மனுக்கள் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. சமீபத்தில் அந்த கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்து விட்டார்.

வேலூர் சிறை ஜெயில் சூப்பிரண்டு அறிவுடை நம்பிக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்ற ஆணை போய் சேர்ந்துவிடும் என கூறப்படுகிறது. ஆணை வந்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று சிறைதுறை ஏடி.ஜி.பி. டோக்ரா கூறியுள்ளார். அதன்படி இன்று முதல் 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜெயிலில் ஏற்பாடுகள் நடக்கிறது.

196 புதிய பஸ்கள் ‍‍‍-‍- ஜெயலலிதா துவக்கம்

 இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஜெயலலிதா 196 புதிய பஸ்களை வழங்கினார்.

196 புதிய பேருந்துகளில், 106 புதிய பேருந்துகள், 106 புதிய வழித்தடங்களிலும், மீதமுள்ள 90 புதிய பேருந்துகள் ஏற்கனவே உள்ள வழித் தடங்களிலும் இயக்கப்படுகின்றன.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 36 பேருந்துகளும், சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 23 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 56 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 13 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 63 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் 7 புதிய பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு பேருந்தின் சாவிகளை வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தினார்.  அப்போது அவர் பேசுகையில்,
தமிழக அரசின் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 196 பேருந்துகளை துவக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக தங்கள் பணியினை செய்ய வேண்டும். தங்களுக்கும் அவர்களை நம்பி பயணம் செய்யும் பயணிகளுக்கும் எந்தவிதமான ஆபத்து இன்றி நல்ல முறையில் பணியாற்ற வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா போக்குவரத்து கழகத்தினர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கம்! - மகிந்த ராஜபக்ஷே

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த அவசரகாலச் சட்டத்தை இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என ராஜபக்ஷே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். முதன்முதலில் 1983 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டம் அமல் செய்யப்பட்டது, போர் முடிந்து இரண்டு ஆண்டுகளான நிலையில் இனிமேல் இச்சட்டம் அவசியமில்லை என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார், இச்சட்டத்தின் சில கடுமையான பிரிவுகள் ஓராண்டுக்கு முன்னர் தளர்த்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே, இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்தார்.

இலங்கையில் புலியினரின் செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டதினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு வலியுறுத்தி வந்தன. மனித உரிமை அமைப்பும் மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபையும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.

இதனை ஒரு ஆரம்பமாகக் எடுத்துக் கொண்டு, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று ரணில் விக்கிரம சிங்கே வலியுறுத்தியுள்ளார்.

ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி


தேவையானப் பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்
டால்டா - 150 கிராம்
பட்டை - 2 துண்டு (இரண்டு அங்குலம்)
கிராம்பு - ஐந்து
ஏலக்காய் - முன்று
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி - 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு - 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொ. மல்லி - ஒரு கட்டு
புதினா - 1/2 கட்டுப. மிள்காய் - 8
தயிர் - 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1 பின்ச்
ரெட்கலர் பொடி - 1 பின்ச்
எலுமிச்சை பழம் - 1நெய் - ஒரு டீஸ்பூன்


செய்முறை:
முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணையும் டால்டாவையும் ஊற்றி நல்ல கய்ந்ததும் ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.
நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.

ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொத்தமல்லி புதினா வை போட்டு கிளறவும்

அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். எண்ணையில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.

மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக முன்று நிமிடம் கிளறவும். பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும்.
கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்

ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரண்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து தூவி விடவும். அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும்

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content