தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

மீசை கூட முளைக்கல, போலீஸ் வேஷமா? - ஜீவா கிண்டல்

மிஷ்கினின் பல நாள் கனவுதானாம் இந்த முகமூடி. எதையும் மூடி மறைக்காமல்பேசும் மிஷ்கின், துவக்க நாளான அன்றும் அப்படியேதான் ஆரம்பித்தார் தனது உரையை. இதுவரைக்கும் நான் பார்த்த ஹீரோக்களிலேயே இப்படி ஒரு டெடிக்கேஷனான ஹீரோவை பார்த்ததே இல்லை. ஜீவாவிடம் இந்த கதையை சொல்லணும்னு நினைச்சேன். என் ஆபிஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமான்னு கேட்டேன். அவ்வளவுதான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் ஆபிசில் இருந்தார் ஜீவா. 


மிஷ்கின் இடம் சுட்டி பொருள் விளக்கிய இந்த இடத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகள், ஆரம்பத்திலிருந்து இந்த முகமூடி பிரசவத்தை கவனித்தவர்களுக்கு மட்டும் சட்டென்று புரிந்திருக்கும். (புரியாதவர்களுக்கு சில டேக்ஸ். கமல், அஜீத், எக்ஸட்ரா…) போகட்டும். விஷயத்துக்கு வருவோம். 
முகமூடி பற்றி நிறைய பேசினார் மிஷ்கின். நான் சின்ன வயசிலே நிறைய காமிக்ஸ் படிச்சிருக்கேன். அந்த கதைகளை படமாக்கணும்னு அப்பவே எனக்கு கனவு இருந்திச்சு. தமிழில் வெளிவரப்போகும் முதல் பிரமாண்ட சூப்பர்மேன் கதையா இந்த முகமூடி இருக்கும். இந்த படத்தை இந்த ஒரு பகுதியோட முடிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை. முகமூடி பார்ட் ஒன், டூ, த்ரின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கும்னு நம்புறேன். 

இந்த படத்தில் ஜீவா கமிட் ஆனவுடன் குங்பூ கத்துக்கணும் என்றேன். எனக்குஏற்கனவே தெரியும். ரெண்டு வருஷம் அந்த சண்டையை நான் கத்து வச்சிருக்கேன் என்றார். என்னுடைய வேலை இன்னும் சுலபமாச்சு. ஜீவா 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிச்சு மே மாதம் திரைக்கு கொண்டு வந்துடலாம் என்றார். 

பின்னாலேயே பேச வந்த ஜீவா, 90 நாட்கள் என்ன, 120 நாட்கள் தருகிறேன் என்றார் மிஷ்கினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை போல. வழக்கமாக இருபெரும் நடிகர்கள் முட்டிக் கொள்ளும்போது இடம் கிடைத்தால் போதும். ஒரு வீச்சருவாவை செருகி பார்ப்பார்கள். இந்த முறையும் அதை மின்னல் வேகத்தில் செய்தார் ஜீவா. 

மிஷ்கின் சார் அஞ்சாதே படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைதான் அழைச்சார். சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது? அதுக்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்பதால் அப்படத்தில் நடிக்கல என்றார். 


இப்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெட்டே மிஸ் யுனிவர்சல் போட்டியில் மோதி முன்னேறி இறுதி வரைக்கும் வந்தவர்.

நன்றி: எழுதமிழா

மூளையின் திறனை பாதிக்கும் பத்து விஷயங்கள் !!




மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இருப்பினும், உடலில் மூளையின் பங்கு மிக முக்கிய இடத்தை  வகிக்கிறது. காரணம் சிந்திக்கும் திறன் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் இவை அனைத்தும் மனிதனின் மூளையை பொருத்தே அமைகின்றன. அத்தகைய மூளையை பாதிக்கும் மிக முக்கியமான பத்து விஷயங்களை பற்றி பார்ப்போம்.


1.  காலை உணவை தவிர்த்தல்
2.  அதிக உணவை உட்கொள்ளுதல்
3.  புகைபழக்கம்
4.  மாசுபட்ட காற்றை சுவாசித்தல்
5.  இரவில் உறங்காமல் இருத்தல்  
6.  உறங்கும் போது தலையை மூடிக்கொள்ளுதல்
7.  மன அழுத்தம்
8.  உணவில் அதிகம் இனிப்பு அ சர்க்கரை சேர்த்து கொள்ளுதல்
9.  உடல்நிலை சரியில்லாத நிலையில் அதிகம் சிந்தித்த்ல்
10. அதிகம் பேசாமல் இருத்த்ல்

மேலே குறிப்பிட்டுள்ள பழக்கங்கள் ஏதாவது உங்களுக்கு இருக்குமாயின், இப்போதே அதை சரிசெய்து, உங்களின் மூளையின் திறனை பாதுகாத்துகொள்ளுங்கள்.

நண்பன் படப் பாடல்கள் 3D யில்




ஷங்கரின் அடுத்த வெளிவரவிருக்கும் நண்பன் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளிவருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்காக 6 பாடல்கள் கொடுத்துள்ளார். இந்ட படத்தின் பாடல் வெளியீட்டு வேலைகள் அதிவேகமாக நடந்து வருகிறது. விஜய்க்கு இப்படம் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, அவரை அவரது மசாலா பாணியில் இருந்து இந்த படம் வெளியே எடுத்துச் செல்லும் என்பது உறுதி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு முதன் முதலாக முப்பரிமாணங்களில் (3D) வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ஆம், கோவையில் ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடக்கவிருக்கும் பாடல் வெளியீட்டு விழா 3D முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு முக்கிய காரணம் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர்தான். விழாவிற்கு வரும் அனைவருக்கும் 3D கண்ணாடி கொடுத்து முப்பரிமாணங்களில் நடத்தவிருக்கின்றனர். ஷங்கர் இந்த விழாவை புதுமையாக நடத்தவே இந்த ஏற்பாடை செய்கிறார், அவர் நினைத்தபடி எல்லாம் நன்றாக அமைந்தால் ரசிகர்கள் 3D யில் பாடல் வெளியீட்டை கொண்டாடுவார்கள்.

ALL IS WELL

மிக பிரம்மாண்டமான படம் விஸ்வரூபம் - கமல்ஹாசன்



கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் படத்திற்கு இதுவரை ரூ.52 கோடி செலவிடப்பட்டுள்ளதாம். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிப்பதுடன், டைரக்டர் பொறுப்பேற்று இயக்கி வரும் படம் விஸ்வரூபம். படத்தில் கமலுக்கு ஜோடிகளாக ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படத்துக்காக கமல்ஹாசன் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன், உதவி டைரக்டராக பணிபுரிகிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அதையடுத்து ஜோர்டான் நாட்டில், 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் முக்கிய காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டன. வருகிற 16ம்தேதி முதல் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக கமல்ஹாசன் உள்பட 75 பேர்களை கொண்ட படப்பிடிப்பு குழுவினர் அமெரிக்கா போகிறார்கள். அமெரிக்காவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து லண்டனில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறும். அத்துடன், `விஸ்வரூபம் படப்பிடிப்பு முடிவடைகிறது.

இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்துக்காக, இதுவரை ரூ.52 கோடி செலவாகி இருக்கிறது. இந்த படம் குறித்து கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், “நான் நடித்த தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் ஆகிய படங்களை விட பத்து மடங்கு பிரமாண்டமாக, மிகப்பெரிய படமாக இது இருக்கும் என்று கூறியுள்ளார்.

நன்றி: எழுதமிழா

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content