தமிழ் டைடிங்ஸ்
செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை
பெண்களுக்கு உண்மையாக பிடித்தது என்ன ?
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.
5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.
7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது
9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்
11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.
3. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
7. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
9. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.
25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக்கிறது, “டிவி’ யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
நன்றி - ஆர் சௌந்தர ராஜன் - பெங்களுரு
பில்லா 2 வில் குத்தாட்டம் போடும் அஜித்
அஜித் தனது அடுத்த படமான பில்லா 2வில் நடித்துக் கொண்டிருக்கிறார், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து முடிந்துள்ளது. படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் ஒரு குத்து பாடல் அமைந்துள்ளது, அதற்கு இசை அமைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.
அந்த குத்து பாடலுக்கு மீனாக்ஷி தீக்ஷித்தை அணுகியுள்ளனர், சூப்பர் ஹிட்டான தெலுங்கு டூக்குடு படத்தில் மஹேஷ் பாபுவுடன் மீனாக்ஷி ஆடியுள்ளார். அதனால் அவருக்கு இந்த படத்திலும் ஆடும் வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பில்லா படத்தில் நயன்தாராவும், நமீதாவும் கவர்ச்சியில் கலக்கியிருந்தனர், பில்லா 2 வில் பார்வதி ஓமனக்குட்டன் மற்றும் மீனாக்ஷி கவர்ச்சியில் கலக்க உள்ளனர்.
கமல்ஹாசனுடன் நடனமாடிய விஜய்
பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாதவர் விஜய், நெருக்கமானவர்களின் நிகழ்சிகளில் மட்டுமே கலந்து கொள்வார். அப்படியே கலந்து கொண்டாலும் அதிகம் பேசாமல் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதவர். ஆனால் உலகநாயகன் அழைத்தால் மறுக்க முடியுமா? அதோடு நில்லாமல் அவருடன் நடனமும் ஆடியுள்ளார் விஜய்.
கமல்ஹாசன் 80களிலும் 90களிலும் தனது ஆட்டத்திற்கு பெயர் போனவர், அந்த நேரத்தில் அவரது ஆட்டம் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. இன்று ஆடல் என்றால் அதற்கு தனிப் பெயர் இளைய தளபதி விஜய்க்கு உண்டு.
கமலும் விஜய்யும் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர், ஆனால் கமலுக்கோ விஜய்யின் ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அதனால் கமல் தனது பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார், அவருக்கு நெருங்கியவர்களையும் நண்பர்களையும் மட்டுமே அழைத்திருந்தார். அதில் விஜய்யை ஆட அழைத்தார் உலக நாயகன். ஆச்சரியத்துடன் மறுப்பு தெரிவிக்க முடியாத விஜய் அவருடன் ஆடினார். உலக நாயகனின் பிறந்த நாள்களில் மறக்க முடியாததாக இதுவும் அமைந்துவிட்டது.
Total Pageviews
Indiblogger Score
பிரபலமான பதிவுகள்
-
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...
-
தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது. தோள்பட்டை வலிக்கும், இதய நோய...
-
தலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...












