தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் - துப்பாக்கி


வேலாயுதம் பெரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் விஜய், தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார்.  பிரம்மாண்ட தயாரிப்பாளரான‌ கலைப்புலி தானுவின் தயாரிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படத்தினை தொடங்கவிருக்கிறார். முதற்கட்டமாக திருசெந்தூரில் படம் தொடங்கவிருக்கிறது.

விஜய்யின் அடுத்த படமான நண்பன் பொங்கலுக்கு வருகிறது, அடுத்த மாதம் படத்தின் பாடல்கள் வெளிவருகிறது. ஷங்கருடனான இந்த கூட்டணி அவரின் வெற்றியை உறுதிபடுத்தியுள்ளதால், மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் வரிசையில் விஜய் இருப்பது அவரின் வெற்றி வாய்பினை அதிகப்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படம் ஆக்ஷன் மிகுந்த காதல் படமாக உருவாக உள்ளது, இந்த கூட்டணி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கதாநாயகியாக  காஜல் அகர்வால் நடிக்கலாம்  எனக் கிசுகிசுக்கபடுகிறது. இசை ஹாரிஸ் ஜெயராஜும், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவனும் செய்வார்கள் என்று தெரிகிறது. படத்திற்கான புகைப்பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

சென்னையில் ஒரே பி.பி.ஓ (BPO) நிறுவனத்தின் 4 நிர்வாகிகள் கைது


செவ்வாய்கிழமை அன்று சென்னை போலீசார் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 4 மூத்த நிர்வாகிகளை கைது செய்தனர். அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் செய்த புகாரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஈக்காடு தாங்கல் பகுதியை சேர்ந்த NxtGIPO Technologies எனும் நிறுவனம், கடந்த இரு மாதங்களாக அங்கு வேலை செய்யும் 600க்கும் அதிகமானவர்களுக்கு சம்பளம் கொடுக்காததால் புகார் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் தலைமை அலுவலகத்தினை கொண்டுள்ள நிறுவனம், ரூ 23000 சம்பளம் தருவதாக கூறியுள்ளது, பி.டெக் படித்த ஒருவர் கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் செலவு செய்து வேலைக்கு சேர்ந்துள்ளார், இரண்டு மாதங்களாக நிறுவனம் சம்பளம் கொடுக்க தவறியதால் புகார் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வேறு எந்த புகார்களும் வரவில்லை என்றும், ஒருவர் கொடுத்த புகாரின் பெயரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசனை அழைத்தார் அப்துல்கலாம்


கடந்த 7 ஆம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடினார், அன்று தனது ரசிகர்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று கோரினார். அன்று அப்துல் கலாம் அவர்கள் கமல்ஹாசனுக்கு தொலைபேசி மூலம் வாழ்துக்களை தெரிவித்துள்ளார். அவரது மேலும் இனி வரும் காலங்களில் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.

கலாமின் வாழ்த்து கமலை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒருவர் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தால் மகிழ்ச்சிதானே.

ஒன்றாக நடிக்கும் ரஜினிகாந்தும் ஆமிர்கானும்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  அதிகமாக பாலிவுட்டோடு நெருக்கமாகி வருகிறார், ரோபோ (எந்திரன்) திரைப்படம் வெளியானது முதல், ரஜினியின் பாலிவுட் பிரவேசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ரா ஒன் படத்திலும் ஷாருக்கானுடன் சிறு காட்சியில் நடித்தார். அடுத்து ஆமிர்கானுடன் ஒன்றாக நடிக்க விருக்கிறார்.

ரஜினி ஆமிர்கான் இணைந்து நடிப்பது திரைப்படத்தில் அல்ல விளம்பரத்திற்காக,  குழந்தைகளின் நலத்திற்காக எடுக்கப்படும் ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தில் இருவரும் இணைகின்றனர். ஊட்டச்சத்துக்குறைவு காரணமாக வரும் விளைவுகளை அதில் கூறுகின்றனர்.

சச்சின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர், அதிக டெஸ்ட் சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 99வது சதத்தை அடித்த சச்சின் அடுத்து வரும் பேதட்டிகளில் 100வது சதமடிப்பார் என்று ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் அதன்பின் சச்சின் கலந்து கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை.

மொத்தம் கலந்து கொண்ட 12 போட்டிகளில் 431 ரன்களை மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற போது அந்த சாதனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தொடர் தோல்விகளோடு நாடு திரும்பியது தான் மிச்சம்.

இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காயம் காரணமாக சச்சின் எந்த போட்டிகளில் கலந்து கெதள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியா அணியின் சகவீரர்கள் கூட சோர்ந்து போய்விட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவு அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள சச்சின் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வழக்கமான முகபாவனையில் அணியின் சகவீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். எந்த மன அழுத்தமுமின்றி காணப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
(டிஎன்எஸ்)


சச்சின் சதம் அடிக்க வாழ்த்துக்கள்

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content