தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

வேலாயுதம் சாதனையை முறியடித்த ராஜாபாட்டை


விஜய்யின் வேலாயுதம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரூ.2 கோடி செலவு செய்து இருந்தார். இரண்டு கோடி செலவில் எடுக்கப்படும் காட்சிகள் மிகப் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இந்த சாதனையை முறியடித்துள்ளது விக்ரமின் ராஜபாட்டை.

தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை முடித்துள்ள ராஜபாட்டை படக்குழு, படத்தில் அப்பகுதிக்கு மட்டும் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாயை செலவழித்துள்ளது. காட்சிகள் நன்கு வரவேண்டும் என்பதற்காக செலவை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தியுள்ளார் சுசீந்திரன். கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என கூறப்படுகிறது. ஒரு கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் அதிக செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட வேலாயுதம் படத்தின் சாதனையை ராஜபாட்டை முறியடித்துள்ளது.

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1


கேசத்தின் அடிப்படை

கேசம் ஏன் உதிருகிறது என்பதை தெரிந்து கொள்ள கேசம் குறித்த சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். நமது கேசம் இறந்த திசுக்களால் ஆன மெல்லிய ஆனால் உறுதியான ஒரு பாகம். இவை கெராட்டின் என்ற ஒரு வகை புரதத்தால் உருவானவை.

உள்ளமைப்பு

கேசத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

1. தோலுக்கு வெளியே
2. தோலுக்கு உள்ளே

தோலுக்கு வெளியே இருக்கும் பகுதியின் பெயர் கேசத் தண்டு (Hair Shaft) ,  தோலுக்கு உள்ளே இருக்கும் பகுதியின் பெயர் கேச வேர் (Hair Root). கேசத் தண்டில் மெடுலா (Medula)எனும் உட்பகுதி, கார்டெக்ஸ் (Cortex) எனும் வெளிப்பகுதி உள்ளது. கேச வேர்களில் அடிப்பகுதி பெரிதா இருக்கும் அதை கேசக் குமிழ் (Hair Bulb) என்கிறோம், அது  பாலிக்கிள் (Hair Follicle) என்ற பகுதியோடு இணைந்திருக்கும். பாலிக்கிள் பகுதியில் உள்ள ரத்த குழாய்கள் வழியாக வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்கிறது.

கேசவேரோடு எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, (Sebaceous Glands) இந்த எண்னெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் திரவம் கேசத்திற்கு மினுமினுப்பை தருகிறது, சுரப்பிகள் சரியாக இயங்காவிடில் எண்ணெய் பசையின்றி வறண்டு போய் விடும். அதிகமாக இயங்கினால் எண்னெய் பிசுக்குடன் இருக்கும்.

கேசத்தின் நிறம் அதிலுள்ள மெலனின் என்ற வேதிப் பொருள் அளவை பொறுத்து மாறுபடும்.  வயதாகும் போது இது குறைவதால் நரை ஏற்படுகிறது. கேசத்தின் வளர்ச்சியில் மூன்று நிலைகள் உள்ளன அவை வளரும் பருவம், இடைப்பருவம், ஓய்வுப் பருவம் ஆகும். வளரும் பருவத்தில் புதிய கேசம் உருவாகி வளர்ந்து வரும், அடுத்த பருவத்தில் வளரும் வேகம் குறையும். மூன்றாம் பருவத்தில் வளர்ச்சி நின்று உதிர்ந்து விடும். சில மாதங்கள் கழித்து மீண்டும் புதிய கேசம் வளரும்.

அடுத்த பாகத்தில் முடி உதிர்வுக்கான காரணங்களை பார்க்கலாம்

ஏழாம் அறிவு சூர்யாவின் புதிய ஹேர்ஸ்டைல்

ஏழாம் அறிவு படத்தில் சூர்யா தோன்றும் புதிய சிகை வடிவங்கள் படங்களாக உங்கள் பார்வைக்கு.










வேலாயுதம் படத்தில் உதயநிதி!!

ரெட் ஜாயின்ட் மூவிஸின் ராஜெஷ் இயக்கி உதயநிதி நடித்த ஓகே ஓகே படம்  திரைக்கு விரைவில் வெளிவர வரவிருக்கிறது. இப்படத்தின் ட்ரைலர் விஜய் நடித்து திபாவளியன்று இருக்கும் வேலாயுதம் படத்தின் நடுவே திரையிடப்படவுள்ளனர். இதற்காக அவர் வேலாயுதம் படத்தின் தயாரிப்பாளரான ரவிசந்திரனக்கு நன்றி தெரிவித்துள்ளர். அதேசமயம் இப்படத்தின் ட்ரைலர் ஏழாம் அறிவு படத்தின் நடுவேவும் வருகிறது. உதயநிதி பிழைக்க தெரிந்த மனிதராயிற்றே... வெகு சாதாரனமாக பெரிய விளம்பரத்தை தேடிக்கொள்கிறார்.

ஜீன்ஸ் பேண்ட் ‍தயாராவது எப்படி!!!

இன்றைய மேற்கத்திய கலச்சார வாழ்க்கையில் ஜீன்ஸ் ஆடை நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண், பெண் என இருபாலரும் அணியும் நாகரீக‌ உடை என்றே கூறலாம். அதைவிட இத்தகைய உடை ஆண்களை விட பெண்களே அதிகமாக விரும்புகின்றனர், காரணம், ஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தால் போதும்,  டி-சர்ட்,  ஷார்ட் டாப்ஸ்,  சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அது மட்டும் இன்றி வெளியில் செல்லும்போது அது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக‌ பெண்கள் கருதுகின்றனர். அத்தகைய உடை வடிவமைப்பு மற்றும் தயாரிக்கும் முறை பற்றிய வீடியோ பதிவு உங்களுக்காக.


வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content