தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

அஜித்தை ராஜா இயக்கவில்லை - ஜெயம் ரவி

அஜித்தை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கு, யார் இயக்குனர் என்பதில் இப்போதிலிருந்தே அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல்கள் வந்த வண்ணம், இருந்தன. ஜெயம் ரவியின் அண்ணனும், ரீமேக் படங்களுக்கும் பெயர் போன இயக்குனர் ராஜா, அல்லது இயக்குனர் ஷங்கர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், ஜெயம் ரவி தனது ட்விட்டரில் ராஜா அஜித் படத்தை இயக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் தரப்பிலும், ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கு தேதிகள் மட்டுமே கொடுத்திருப்பதாகவும், வேறு எதுவும் உறுதி செய்யப்படவில்லை எனவும், ஜனவரி மாதம் வரை பில்லா 2 படப்பிடிப்பு இருக்கும் அதுவரை எதுவும் உறுதி படுத்த நேரம் இருக்கப்போவதில்லை எனக் கூறப்படுகிறது.

தி.மு.க.விலிருந்து விலகிய நடிகர்

ஒவ்வொரு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பல கிராமம் நகரம் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வந்தும் கட்சியில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை, இதனால் மன வருத்தம் அடைந்து தி.மு.க. கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் தியாகு தெரிவித்துள்ளார்.

கட்சியில் இல்லாதவர்கள் கூட திமுக தலைவரை துதி பாடியே பல்வேறு பதவிகளையும், வசதி வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றுள்ளனர். ஆனால் 33 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும் எனக்கு எந்த அங்கீகாரமும் கட்சியில் கிடைக்கவில்லை.இதிலிருந்து நீங்கள் என்னை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள் என்பது புரிந்து விட்டது. இதுவரை கட்சியில் இருந்தது தவறு என்று புரிந்து கொண்டுள்ளேன். எனவே கடந்த 19ந் தேதி முதல் கட்சியிலிருந்து விலகி கொண்டுள்ளேன். எனது விலகல் கடிதத்தை கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்பேன், என்று அவர் கூறினார்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

கே.என்.நேருவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின்


நிலப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறிய புகாரில் மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். அக்.4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் கே.என்.நேருவை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், கே என் நேரு சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் நாளை தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் நாளை காலை திருச்சி வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வருகின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
சிறையில் இருந்தபடியே நேரு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு தேவையான ஆவணங்களை திமுக வக்கீல் அணியினர் தயாராக வைத்துள்ளனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது, இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதி திருச்சியில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ம.தி.மு.க

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிட இருக்கிறது. இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்தார். மாநகராட்சி மேயர்களுக்கான முதல் பட்டியலை இன்று வெளியிட்டார். அதன்படி சென்னை மேயர் பதவிக்கான வேட்பாளராக நா.மனோகரன், கோவைக்கு- அர்ஜூனராஜ், மதுரைக்கு- பாஸ்கர சேதுபதி, தூத்துக்குடிக்கு - பாத்திமா பாபு உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர்களும் மனிதர்கள்தான். கேவலப்படுத்த வேண்டாம் ரசிகர்களே

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திறமை உண்டு, அவர்களது தனித்திறமை எல்லோருக்கும் பிடித்து விடுவதில்லை, சில நடிகர்கள் ஈர்க்காமல் போனால் அதற்கு அவரிடம் திறமை இல்லை என்று அர்த்தம் கொள்வது தவறு. ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தால் அவருக்கு போட்டியாக மற்றொரு நடிகரை நினைத்துக் கொண்டு மற்ற நடிகரை இழிவு படுத்துவது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று, அன்று மக்களின் படிப்பறிவு பின் தங்கியே இருந்தது, அப்போது புரியாமல் செய்து விட்டனர் என்று கூறலாம். ஆனால் இன்று படித்தவர்களே இழிவுபடுத்தும் கேவலமான செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று பேஸ் புக், ஆர்குட், ட்விட்டர் போன்ற வலைப் பின்னல்களில் பெரிதாக வளர்ந்து வரும் கலாச்சாரம் இது, ஒரு நடிகரை பிடிக்காதவர் அவரை எதிர்ப்பது போன்ற பக்கங்களை உருவாக்கி அதில் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு, அந்த நடிகரை இழிவுபடுத்துவது. அதோடு நில்லாமல் அவர்களுடைய புகைப்படங்களை போட்டோஷாப் மூலம் கிண்டல் செய்தும் வருகின்றனர். 'ஐ ஹேட் விஜய், அஜித், சூர்யா, சிம்பு' எனும் பெயரில் இப்படிப்பட்ட அநாகாரீக செயல்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இது போன்ற செயல்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லாததால் தங்கள் இஷ்டத்திற்கு எல்லை கடந்து போவதுதான் வருத்ததிற்குறிய விஷயம்.

நடிகர்களும் மனிதர்கள் தான் என்னதான் கேலி, கிண்டல், பொழுதுபோக்கு என எதாவது ஒரு வகையில் எடுத்துக் கொண்டாலும், இவை எல்லாம் அந்த நடிகர்களுக்கு தெரிந்தால் அவர்களது மனதும் புண்படும் என்பது தெரியாதா? ஒருவரது படம் வந்தால் அது நன்றாக உள்ளதோ இல்லையோ, குறை இருக்கிறதோ இல்லையோ அதற்கு தகுந்த விமர்சனங்கள் போதாதா? இது வெறும் கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக சொல்லவில்லை, அதையும் தாண்டி கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், அசிங்கமாக சித்தரித்தல் போன்ற செயல்கள் அதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. கேலி என்பது ஒரு வகையான விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அசிங்கங்களை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது வெறும் சில நடிகர்களோடு நின்று விடவில்லை வளர்ந்துள்ள எல்லா நடிகற்களும் இதற்கு விதிவிலக்கே. ஏன் நடிகைகளும் தான்.

தற்போது சமூக வலைப்பின்னல்களை அதிகம் பயன்படுத்துவது படித்தவர்களே, படித்தும் அவர்கள் செய்யும் இழிவு செயல்களை பாருங்கள். பேஸ் புக்கில் இருந்து திறட்டப்பட்ட படங்களை பார்த்தால் தான் தெரியும். இந்தச் செயலால் கிடைக்கும் அற்ப சந்தோசத்திற்காக நேரத்தை இப்படிப் பட்ட வேலைகளில் வெட்டியாக செலவிட வேண்டுமா?






























வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content