தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

கார் நிறுவனங்கள் இனி சென்னையில் இல்லை

சென்னையைச் சுற்றி ஏராளமான கார் நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் கார்களின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இப்போது பல நிறுவனங்கள் சென்னையை விட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளன.

அந்நிறுவனங்கள் தமது புதிய ஆலையை அமைக்க குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளன, இது தமிழக தொழில்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக சென்னைக்கு அருகே ஆலை வைத்து கார் தயாரிக்கும் ஃபோர்ட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் இராண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான போஜோ குஜராத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ஆலையை திறக்க முடிவெடுத்துள்ளது.

முதலில் டாடா நானோ தொழிற்சாலை குஜராத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து பல நிறுவனங்கள் இம்முடிவை எடுத்துள்ளது.

இதற்குமுக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்ட மின் தட்டுப்பாடுதான் என தமிழகத்தின் தொழில் வர்த்தக தலைவர் ரஃபீக் அகமது கூறியுள்ளார். ஹூண்டாய் தொழிற்சாலையில் பல மாதங்களாக நடந்து வரும் தொழிலாளர் பிரச்சனை மற்றும் மின் தட்டுப்பாடு, ஆகியவை அந்நிறுவனத்தையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதாகவும், தமிழகத்தில் கார் உற்பத்திக்குத் தேவையான அம்சங்கள் சாதகமாக இருப்பதாகவும், மின் வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினால் முதலீடுகள் தொடர்ந்து வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

சொத்து மதிப்பை வெளியிட்ட மன்மோகன் சிங்

அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன, பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தில் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங்
, அவருக்கு நிலம் ஏதும் இல்லை என்றும், அவரது சொத்து மதிப்பு சுமார் 5 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
அதில், வங்கி டெபாசிட், இரண்டு வீடுகள் ஒன்று 90 மற்றும் 88 லட்சம் மதிப்புடையது , மற்றும் மாருதி கார் ஆகியவை அடங்கும். சண்கரில் ஒரு வீடு, டெல்லியில் ஒரு வீடு உள்ளது. வங்களில் சுமார் 3 லட்சம் டெபாசிட் வைத்திருக்கிறார். பிரதமரின் மனைவி குருஷரன் கவுர், வங்கியில் 11 லட்சம் டெபாசிட் வைத்துள்ளார்.

அமைச்சர் கமல்நாத்தின் சொத்து மதிப்பு 263 கோடி, இவருக்குதான் அதிக அளவு சொத்து இருக்கிறது. ஏண்டனியின் சொத்து மதிப்பு 39 லட்சம், பிரணாப் முகர்ஜியின் சொத்து மதிப்பு 1.25 கோடி. வீரப்ப மொய்லியின் சொத்து மதிப்பு 13 லட்சம்.

பா.சிதம்பரம் குடும்ப சொத்து 23 கோடி, அதில் சிதம்பரத்தின் பங்கு மட்டும் 11 கோடி. அதில் வங்கி டெபாசிட் 1.29 கோடியும் அடங்கும். சரத்பவாரின் சொத்து மதிப்பு 12 கோடி. அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிலங்கள், தங்கம் 7 லட்சம், வங்கி டெபாசிட் 18 லட்சம், அவரது மனைவிக்கு 32 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளன.

மு.க. அழகிரி
யின் சொத்து மதிப்பு 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள நிலம், 7 கோடிக்கு மேற்பட்ட பணம், இரண்டு கார்கள், 1 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தங்கம். அவரது மனைவிக்கு, 5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்கள், வங்கி டெபாசிட், பணம் உள்ட 3.5 கோடி உள்ளன. 75 லட்சத்தில் ஒரு கார், 11 லட்சத்தில், தங்கம், 1.8 கோடிக்கு வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் ஆகும்.

அமைச்சரவையில் உள்ள 77 அமைச்சர்களில், ஜெயந்தி நடராஜன், திமுகவைச் சேர்ந்த ஜகத்ரட்சகன் உள்பட ஐந்து அமைச்சர்களின்
சொத்து விவரங்கள் வெளியாகவில்லை.

பலவகை முட்டை சமையல்

அவித்த முட்டை (Boiled Egg):
முட்டையைத் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் அவித்து எடுக்கவும். தண்ணீரில் உப்பு சேர்த்தால் ஓடு உடையாது.

 ஆஃப்பாயில்(ட்) (Half Boiled egg)
முட்டையை தோசைக்கல்லில் மஞ்சள் கரு உடையாமல் ஊற்றி உப்பும், மிளகுத்தூளும் சேர்த்தபின் அடிப்பாகம் வெந்தபின் திருப்பிப் போடாமல் மஞ்சள் கரு உடையாமல் அப்படியே அரைவேக்காட்டில் சாப்பிடவேண்டும். அதை மஞ்சள் கரு உடையாமல் சாப்பிடுவதுதான் திறமையே !

ஃபுல்பாயில்(ட்) (Fully boiled)
மேலே சொன்ன ஆஃப்பாயிலை திருப்பிப் போட்டு வெந்தபின் எடுத்து சாப்பிடுவது.

ஆம்லெட் (Omlette)
1. முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும்.
3. பின் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து ஊற்றி வெந்தபின் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்

பிளைன் ஆம்லெட் (Plain Omlette)
மேலே சொன்ன ஆம்லெட்டில் வெங்காயம், மிளகாய் போடாமல் செய்யவேண்டும்.

ஒன் சைட் ஆம்லெட் (One side Omlette)
ஆம்லெட்டை திருப்பிப் போடாமல் அடிப்பாகம் மட்டும் வேகவிட்டு எடுத்து சாப்பிட வேண்டும்.

ஒயிட் ஆம்லெட் (White Omlette)
ஆம்லெட்டின் செய்முறையில் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு செய்ய வேண்டும்.

ஒயிட் பிளைன் ஆம்லெட் (White Plain Omlette)
பிளைன் ஆம்லெட்டின் செய்முறையில் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு (கொஞ்சம் கடினம் தான்) செய்ய வேண்டும்.

கலக்கி (Kalakki)
1. முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும்.
3. சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
3. பின் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து ஊற்றி அரைவேக்காட்டில் கொழ கொழவென புரட்டி புரட்டி பந்து போல செய்து சாப்பிடலாம். இதன் சுவையே தனி.

முட்டை பொரியல்/பொடிமாஸ் (Egg Podimas)
இதற்கும் ஆம்லெட்டின் செய்முறைதான் நன்றாகக் கிளறி விட்டால் முட்டை சுருங்கிவிடும். நல்ல சுவையாக இருக்கும்

முட்டைமாஸ் (Egg mass)
1. அவித்த முட்டையை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. தோசைக்கல்லில் சிறிது சிக்கன் அல்லது மட்டன் குழம்பை முட்டையுடன் சேர்த்து சிறிது நேரம் சமைத்தால் சுவையான முட்டைமாஸ் தயார்.

இறால் மீன் வறுவல்

தேவையான பொருட்கள்:

இறால் -அரை கிலோ
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லித் தூள் -அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
அரைக்க வேண்டிய பொருட்கள்
தேங்காய் -தேவையான அளவு
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
பட்டை -2
கிராம்பு -3

செய்முறை:
முதலில் இறால் மீனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தேங்காயை அரைத்து வைத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித் தூளை போட்டு வதக்கியவுடன் இறால்லை போட்டு வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும். தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும். இறால் வறுவல் ரெடி.

இசைப் பயணம் -- ஹாரீஸ் ஜெயராஜ்


இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உலக நாடுகளில் இசைப்பயணம் மேற்கொண்டு மேடை இசை கச்சேரிகள் நடத்தவிருக்கிறார். இது குறித்து ஹாரீஸ் ஜெயராஜ் கூறியதாவது:-

நான் இசைய‌மைப்பாளராகி சுமார் 10 வருடங்கள் ஆகி விட்டது. முதன் முதலில் கவுதம்மேனன் தான் என்னை அறிமுகப்படுத்தினார். மேடை இசை நிகழ்ச்சிகளை நடத்தும்படி ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தன. அதை ஏற்று நான் உலக இசைப்பயணம் செல்கிறேன்.

முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அடுத்த மாதம் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஐதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும்.

3டி தொழில் நுட்பத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இடம் பெறும். பிரபல பாடகர்களான‌ ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஸ் ராக வேந்திரா உள்பட 17 பேர் மேடையில் தோன்றி பாடுவார்கள்.

இயக்குனர் விஜய் மேற்பார் வையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடக்கின்றன.

டெக்பிரண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உலக தரத்தில் புது அனுபவமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.


வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content