தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

ஆய்வில் கடைசியாக வந்த சென்னை

இந்தியாவில் 6 நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சென்னைக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் புனே, ராஜ்கோட், புவனேஸ்வரம், இந்தூர், சூரத் மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் பாதசாரிகளுக்கான நடைபாதை வசதிகள் எங்கு நன்றாக உள்ளன என்று சிஏஐ - ஆசியா எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் சென்னை கடைசியாக வந்திருக்கிறது.

பாதசாரிகளின் நேரடிக் கருத்துக்கள், அரசு போக்குவரத்து மற்றும் நகர்வுக் கொள்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 54 மதிப்பெண்கள் பெற்று, புனே நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 40 மதிப்பெண்களை மட்டும் பெற்று சென்னை நகரம் கடைசி இடத்தை பிடித்தது. மற்ற நகரங்களை விட பாதசாரிகளுக்கு இங்குதான் வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மொத்தமாக 6 நகரங்களிலுமே  பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பாதசாரிகளுக்கான வசதிகள் மோசமான நிலைதான் இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்திய நகரங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம், நகரமைப்புத் திட்டங்களில் போதிய கவனம் வேண்டும் என்று சிஏஐ – ஆசியா இந்திய அமைப்பின் பிரதிநிதி பார்தா பாஸு தெரிவித்துள்ளார்.

விஷமம் நிறைந்தவர் அமைச்சர் பா.சிதம்பரம்

விஷமம் நிறைந்தவர் அமைச்சர் பா.சிதம்பரம் - அன்னா ஹசாரே சாடல்

இந்தியாவில் புதியதொரு சக்தியாக மாறியுள்ள அன்னா ஹசாரே, அவர் உண்ணாவிரதத்தின் போது கைதானதை பற்றி  பேசுகையில், "இப்போதுள்ள இந்திய அரசு சூழ்ச்சி நிறைந்தவர்களையே கொண்டுள்ளது,  என்னை டெல்லியில் உண்ணாவிரதத்தை தொடர   விடவில்லை. ஜெ.பி.பூங்காவில் அனுமதி கொடுத்தபோதிலும் நிறைய கட்டளைகளை விதித்தது." என்றும் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தை விஷமம் நிறைந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் மராத்தியில் 'கோட்சல்' என்று குறிப்பிட்டுள்ளார். மராத்தியில் கோட்சல் என்றால் விஷமம், நேர்மையற்ற என்று பொருள். பத்திரிக்கையாளர்கள் அவரை சந்திக்கையில் அதை விளக்குமாறு கேட்டபோது,  "அவரை  'கோட்சல்' என்று ஏன் சொல்கிறேன் என்றால்,  பல தருணங்களில் அவர் பொய் கூறியுள்ளார்." என்று அன்னா ஹசாரே கூறினார்.

டெல்லி போலீசார் அவரை வீட்டில் இருந்த நேரத்தில் கைது செய்ததன் காரணத்தை கேட்டபோது, மக்களின் அமைதியை கெடுப்பதாகவும், மேலிடத்தில் இருந்து தங்களுக்கு உத்தரவு வந்ததது என்று போலீசார் கூறியதாகவும்,  பின்பு இரண்டு மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார், "வீட்டில் இருக்கும் நான் எப்படி மக்கள் அமைதியை கெடுக்க முடியும்?" என்று கேள்வியும் எழுப்பினார்.

இந்தியன் பார்ட் 2 -- இயக்குனர் சங்கர்!!!

 நாட்டில் அண்ணா ஹசாரேவிற்கு கிடைத்த ஆதரவையும் வெற்றியையும் பார்த்து சில இனைய தளங்கள் மற்றும் வார இதழ்கள் அண்ணா ஹசாரேவை, "இந்தியன் தாத்தா" என வர்ணித்திருந்தனர். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பிரமாண்ட சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் இந்தியன் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர் சங்கர் தற்போது விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் சத்தியராஜ் ஆகியோர் நடிக்கும் நண்பன் படத்தின் இறுதி கட்ட படபிடிப்பில் உள்ளார். ஆகையால் நண்பன் படம் முடிந்தவுடன் இவர் இந்தியன் பார்ட் 2 இயக்க போவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இது பற்றி ஆனந்த விகடனில் பேட்டியளித்த இயக்குனர் சங்கர் கூறியதாவது,

''ஆமாங்க... அண்ணா ஹசாரேவை 'இந்தியன் தாத்தா’னு எழுதி இருந்தாங்க. சந்தோஷமா இருந்தது. அண்ணா ஹசாரே அலைக்குப் பின்னாடி 'இந்தியன் பார்ட் 2’ எடுக்கலாமேனு கேட்கிறாங்க. நானே அப்படி நினைச்சேன். இப்போ இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. ரத்னம் சார் 'ஆரம்பிங்க’னு சொல்லிட்டே இருக்கார். 'நண்பன்’ ரிலீஸ் ஆகட்டும். சான்ஸ் எப்படின்னு பார்க்கலாம்!

இந்தியா எப்படி இருக்கணும்னு ஒவ்வொரு குடிமகனும் கண்ட கனவை அண்ணா நனவாக்கப் போராடுறார். அது அவரோட லட்சியமாக மட்டும் இருக்கக் கூடாது. நம்ம எல்லோருடையதாகவும் மாறணும். பக்கத்தில் இருக்கிற சிங்கப்பூர் சுபிட்சமா இருக்கும்போது... நாம ஏன் முயற்சிக்கக் கூடாது?''

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளதால், இந்தியன் பார்ட் 2 வர வாய்ப்புள்ளதாக‌ தெரிகிறது.

வேலாயுதம் ஆடியோ ‍-- சாதனை !!


ஆஸ்கர் ரவி சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் 28 ம் தேதி நடைபெற்றது.

தற்போது வேலாயுதம் படத்தின் ஆடியோ கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்துள்ளது என்று அப்படத்தின் ஆடியோ உரிமை பெற்ற சோனி பிஎம்ஜி அறிவித்துள்ளது. கேச‌ட்டுகள் வெளியான ஒரு மணி நேரத்தில் 3 லட்சம் சிடி கேச‌ட்டுகள் விற்பனையாகியுள்ளது, என்றும் கடைசியாக‌ வெளியான மங்காத்தவின் ஆடியோ விற்பனையை இப்படம் முறியடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 


மங்காத்தா‍‍‍ -- ஹாட் விமர்சன‌ம் !!


நடிப்பு: அஜீத், அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, ஆன்ட்ரியா லட்சுமி ராய், பிரேம்ஜி
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: க்ளவுட் நைன் மூவீஸ்

மிகுந்த‌ எதிர்ப்பார்ப்புக்கிடையே வந்துள்ள அஜீத்தின் பொன்விழாப் படம் மங்காத்தா. மேலும் ஆட்சி மாற்றதிற்கு பிறகு சன் பிக்ஸர்ஸ் வெளியிடும் படமாகும்.

மணிரத்தினத்தின் திருடா திருடா படத்தின் 1000 கோடியை கொள்ளையடிக்கும் 3 கேங்க் என்ற‌ ஒரு வரி கதை தான், இதில் சற்று வித்தியாசமாக 2 கேங்க் 500 கோடி பணம், ஆனால் இதில் கொள்ளையடிக்கும் வில்லன் வேலையை செய்பவர் போலிஸ் அதிகாரி. ஐபிஎல் கிரிக்கெட்டில் பெட்டிங் பணமாக கட்டப்படும் ரூ 500 கோடியை அப்படியே தனக்கு சொந்தமாக்க திட்டமிடுகிறார் ஆறுமுக செட்டியார் (ஜெயப்பிரகாஷ்). இவர்தான் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப் புள்ளி. இந்தப்பணத்தை அவரிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகின்றனர், அவரிடமே வேலைப் பார்க்கும் வைபவ் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட ஒரு கேங்க்.

இந்த சூதாட்டம் பற்றி அறியும் போலீஸ், அர்ஜுன் தலைமையில் ஒரு போலீஸ் படையை மும்பைக்கு அனுப்புகிறது. அதே சமயம் தற்செயலாக சந்திக்கும் பிரேம்ஜியின் மூலம் வைபவ் கேங்கை பிடித்து, அவர்கள் மூலமே விஷயத்தைக் கறந்துவிடுகிறார் ச‌ஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான அஜீத்.

அதனால் அஜீத்தும் அவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு அந்த ரூ 500 கோடியை கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்த பணத்தை ஒரு இடத்தில் 5 பேரும் மறைத்து வைக்கின்ற‌னர்.  மற்ற நான்கு பேரையும் கொன்று, கொள்ளையடித்த பணத்தை ஒரே பங்காக, தனக்கே சொந்தமாக்க நினைக்கிறார் அஜித். ஆனால் திடிரென்று  பணம் அங்கிருந்து இருவரால் கொள்ளையடிக்கபடுகிறது, அந்த பணத்தை கொள்ளையடித்தது யார்?‌ அந்தப் பணம் யாரிடம் சென்றடைகிறது? அர்ஜூன் அந்த கூட்டத்தினை பிடித்தாரா?  இந்த மங்காத்தா ஆட்டத்தில் வென்றது யார் என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.


நிறைகள்:

சண்டை, நடனம், ரொமான்ஸ் என்று நடிப்பில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தே படைத்துயிருக்கிறார் அஜீத். அஜித்தும் அர்ஜுனும் செல்பொனில் பேசும் வசனங்கள் நச்.

அஜீத்துக்கு இணையான வேடத்தில் ஜொலிப்பவர் அர்ஜூன். அர்ஜுன் நடத்தும் சண்டைக் காட்சிகள், சேஸிங்குகளால் படம் மெருகெறுகிறது.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் பிண்ண‌னி இசையும், பாடல்கள் படத்திற்கு பலம். குறிப்பாக பாடல்களில் "விளையாடு மங்காத்தா, கண்ணாடி நான்" ரசிக்கும் ரகம்.

குறைகள்:

ஹீரோயின் த்ரிஷாவுக்கு வேலையே இல்லை, அஜித்தை காதலிப்பதை தவிர , அஜித்தை உண்மையாக‌ காதலிக்கும் த்ரிஷாவுக்கு காதல் ரசமே ஒட்டவில்லை. ஆன்ட்ரியா, அஞ்சலியை வீணடித்திருக்கிறார்கள்.

வாயசைவை வைத்தே கண்டுபிடிக்கூடிய‌ படத்தில் வரும் கெட்ட வார்த்தைகள், பாத்திரங்களின் அறிமுக காட்சிகள் கொஞ்சம் இழுவைதான்.

அர்ஜுன் கிழடு முக தோற்றத்தில் தெரிவது, படத்தில் எல்லா போலீஸும் கிராப்பை குறைத்து குளோஸ் கட்டிங்கில் வரும்போது இவர்மட்டும் ஹிப்பி தலையுடன் ஃப்ங்குடன் வருவது இவரது கேரக்டர் மதிப்பிழக்கிறது.‌‌

குறைகளை அனைத்தையும் தவிர்த்தால்,  ரசிர்களுக்காக‌ ஆடிய‌
மங்காத்தா ஆட்டத்தில் அஜீத்தும் இயக்குநர் வெங்கட் பிரபுவும்  வென்றிருக்கிறார்கள்.



அஜித் ரசிகர்களுக்காக ....... சில படங்கள்.

















வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content