தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

வேலாயுதம் ஆடியோ வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு


ஆஸ்கர் ரவி சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்தின் பாடல்கள் அதோ இதோ பாடல்கள் வெளியீட்டு தேதியில் குழப்பம் நீடித்தது. இம்மாதம் 28ம் தேதி பாடல்களை விஜய் ரசிகர்கள் முன்னிலையில் மதுரையில் வெளியிடுவதாக விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துருந்தனர். தற்போது இதனை சோனி நிறுவனம் அதிகாரபூர்வ தெரிவித்துள்ளனர்.  இதற்காக தமிழகம் முழுவதும் 1000 விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

இது சம்பந்தபட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரம் விரைவில் முன்னணி நாளிதழ்களில் வெளியாக உள்ளன. இதனை ஜெயம் ரவி கடந்த வாரம் தனது ட்விட்டரில் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் பாடல்கள் வெளியிடபபடும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காவலன் வெற்றி படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வெளிவர இருக்கும் படம் இதுவாகும்.

மதுரையில் சர்வதேச விமான நிலையம்


வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, எல்லோரும் சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களையே நாடி இருந்தனர். மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தென்மாவட்டங்களின் முக்கிய நகரமான மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன, கடந்த சில வருடங்களாக நடந்து வந்த விமான நிலைய விரிவாக்க பணிகள் இப்போது முடிந்துள்ளன. இதையடுத்து விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவு தொடங்கப்பட உள்ளது.

தற்போது துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகம். அதனால் மக்களின் வசதிக்காக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அகர்வால், "மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவைத் துவக்க, நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அடுத்த கட்டமாக, கஸ்டம்ஸ் கவுன்டர்கள் அமைக்கும் பணி துவக்கப்படும். சர்வதேச விமானங்கள் மதுரையிலிருந்து இயக்கப்படும் போது, கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன் பிரிவுகள் அவசியம். கஸ்டம்ஸ் பிரிவிற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இமிகிரேஷன் பிரிவைத் துவக்க அனுமதிக்கும்படி தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்' என்று கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் குழு பார்வையிட்டு சென்றுள்ளது. ஏர் ஆசியா நிறுவனமும் மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. கஸ்டம்ஸ், இமிகிரேஷன் பிரிவுகள் துவக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்தே வெளிநாட்டு விமானச் சேவையை துவக்க, மதுரை விமான நிலையம் தயாராக உள்ளது.

கெளதம் மேனன் ஜீவா இணையும் நித்தியா!!

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்திற்கு நித்தியா என்று பெயரிடப்பட்டுள்ளதாக கெளதம் சுற்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நித்தியா என்றால் "எப்போதும் நித்திய" என்று அர்த்தமாம். தற்போது கெளதம் இயக்கி இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கும் யோகன்: அத்தியாயம் ஒன்று படதிற்கான விளம்பரம் மற்றும் சுவரொட்டிகளுக்கான வேலைகளை செய்து முடித்தார். இப்போது ஜீவா நடிக்க இருக்கும் படதிற்கான வேலைகளை நவம்பரில் தொடங்க இருக்கிறார். அதற்குள் ஜீவா நண்பன் படத்தை முடித்து விடுவார் ஆயினும், கெளதம் இயக்கும் இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா முடிந்த பிறகுதான் இப்படத்தை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும். இந்த படத்திற்கும் ஏ. ஆர் ரகுமான் இசையமைகிறார் மேலும் கிடைத்த தகவல். ஜீவா அடுத்து நடிக்க இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

50 கோடி மக்கள் பணத்தில் வீடு கட்டும் முதலமைச்சர்

உத்திர பிரதேச துணை வரவு செலவுத் திட்டத்தில் (supplementary budget) ரூ.50 கோடியை முதலமைச்சர் மாயாவதிக்கு ஒதுக்கி உள்ளது. அறிக்கையின்படி ரூ.26 கோடி தனிப்பட்ட பாதுகாப்பிற்க்கும், ரூ.23 கோடி வீட்டின் பராமரிப்பிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் குண்டு துளையா அம்பாசிடர்கள், மற்றும் பிற வகை வண்டிகளும் அடங்கும்.

அண்மையில், 13ஆம் எண் ராசியின் காரணமாக தனது சொந்த வீட்டிற்கு குடியேறியுள்ளார், மூன்று வருடங்களாக அவரது வீடு கட்டப்பட்டு வருகிறது. 18 அடி உயரம் மணற்பாறை மதில், செம்பு கதவுகள், 18 அடியில் அவரது உருவச் சிலை அதை மேல் மார்பில் மேற்கட்டு, முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகள், நிலக்கீழ் வாகனநிறுத்துதல்,  எதிர்மறை சவ்வூடுபரவல் இயந்திரகம் (Reverse Osmosis Plant), பாதுகாப்பிற்கு ஆட்கள் போன்ற வசதிகள் அங்கு உள்ளன. 2002 ஆம் ஆண்டு முதல் அவரது வீட்டிற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.51 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மக்கள் பணத்தை தனது தேவைக்கும், அளவிற்கு அதிகமான ஆடம்பர செலவிற்கும் பயன்படுத்தும் முதலமைச்சர்கள்
எப்போது திருந்துவார்கள்? இந்த வரவு செலவுத் திட்டம் மூலமாக ஒதுக்கப்பட்ட பணத்தில், குறைந்தது 100 அல்லது 50 வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்திருக்கலாமே. நம் நாட்டில் ஏழைகளுக்கா பஞ்சம்?

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content