தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

சமூக வலைபின்னல் ஆபத்தானதா?? பயனுடையதா??


ஒரு காலத்தில் மக்கள் தொலைத்தொடர்பிற்காக ஒற்றன், புறா, கடிதம் போன்றவற்றை பயன்படுத்தினர். சற்று முந்திய தலைமுறை வரை தொலைபேசி மற்றும் கைப்பேசியினை பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போதய தலைமுறை இணைய தளத்தையும், சமூக வலைபின்னல் வலைதளத்தினை (Social Networking website) பயன்படுத்துகிறார்கள்,
இந்த வலைபின்னல் மூலம் ஒருவரின் கருத்துக்கள் மிக வேகமாக அனைவரையும் சென்று சேருகின்றன. இதன் பயன்பாடு சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களை ஆட்டி படைக்கின்றன.

இன்று இந்த சமூக வலைபின்னல் வசதி இல்லாத கைப்பேசிகளே இல்லை எனலாம். காரணம் அந்த அளவிற்கு இந்த இளைய சமுதாயம் அதில் மூழ்கி கிடக்கின்றனர். அப்படி என்னதான் அந்த வலைபின்னல் சேவையைய் தருகிறது.

சமூக வலைபின்னல் நாம் எங்கேயோ, எப்போதோ கண்மூடி திறக்கும் கணத்தில் தொலைத்த முகங்களையும், காலத்தின் கட்டாயத்தால் பிரிந்த முகத்தினையும், உலகத்தின் உறவை ஒருசேர ஒற்றை முகமாய் சிரித்தபடி நம்முன் கொண்டு வருகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

இவைகளில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளையும், ஆங்காங்கே நிகழும் நிகழ்வுகளையும் பதிவு செய்வதன் மூலம் அனைவருக்கும் மிக விரைவான கருத்து பரிமாற்றமும், அறிவியல் சிந்தனை வளரவும் வழிவகுக்கிறது.

லிபியா நாட்டின் புரட்சிக்கு இந்த சமூக வலைபின்னலின் 14 அங்கத்தினர் அனுப்பிய வேண்டுகோள் தான் காரணம். அந்த புரட்சிதான் அந்த நாட்டின் மக்களை இராணுவ ஆட்சியிலிருந்து விடுவித்தது. அது மட்டுமின்றி 2ஜி ஸ்பெக்ட்ரம் (2 ஆம் அலைவரிசை) ஊழல் வெளிப்படவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட ஒரு 10 விழுக்காடு காரணமாக விளங்கியது என்றால் அது மிகை ஆகாது.

அண்ணா ஹசரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு திரண்டமைக்கு இந்த சமூக வலைபின்னலின் மிகவும் பங்கு வகித்தது.

ஒருபுறம் இதன் பயனை அடிக்கொண்டே போவதை போல இதனால் விளையும் சமூக சீர்க்கேடுகளையும் அடிக்கொண்டே போகலாம். தற்போதய ஆய்வரிக்கையின்படி பள்ளி மாணவர்களும், இளைய சமூகத்தினார்களும் சராசரியாக நாளோன்றுக்கு 2 முதல் 5 மணி நேரம் வரை சமூக வலைபின்ன செலவிடுகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி கேள்விக்குறியாகிறது.

இளைய சமுதாயத்தினர் சாட் (chat) எனப்படும் தொகுப்பு உரையாடலில் நீண்ட நேரம் செல்விடுவதால் மன ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேருகின்றது. அது மட்டுமில்லாமல் சில நேரங்களில் அவர்கள் எல்லை மீறவும் தயங்குவதில்லை.

இது போன்ற சமூக வலைபின்னல் தளங்களில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மற்றும் புகைப்படம் (Personal Data and Photo), ஹாக்கர்ஸ் (Hackers) என்று அழைக்கபடும் கணினி தகவல் திருடன் இது போன்ற தகவல்களை திருடி தேச விரோத மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

ஆகையால் அறிவியல் வளர்ச்சியும், தொழில் நுட்ப வளர்ச்சியும் இயல்பாண நிகழ்வுகளே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திணை கருத்தில் கொண்டு பிள்ளைகளின் செயல்பாட்டில் கவனம் கொள்ளவும்.

நன்மையும், தீமையும் பிறர் தர வாரா!!

சென்னையை அச்சுறுத்தும் மலேரியா!

சமீப காலமாக மலேரியா நம் சென்னையை ஆங்காங்கே பிடித்துக் கொண்டு வருகிறது.  இதுவரை மலேரியாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் கணக்கின்படி, 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒரளவு கட்டுக்குள் இருந்த மலேரியா, 2010 ஆம் ஆண்டு 10 சதவீதம் அதிகரித்து விட்டது. அதிலும் தமிழ் நாட்டில் 65 சதவீதம் மலேரியாவின் பாதிப்பு நம் சிங்கார(இந்த வார்த்தையை உபயோகப்படுத்தலாமா?) சென்னையில் தான்.

இன்றும் இது தொடர்வது தான் வருத்ததிற்குறிய விஷயம். பெரும்பாலும் சென்னையில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் எல்லோரும் போவதில்லை, அதனால், இது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில இடங்கள் இன்னும் கவனிப்பற்றே இருக்கிறது. அண்மையில் சென்னை மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில், மருத்துவ பிரிவில் இருந்து, சௌகார்பேட், வியாசர்பாடி, அகரம் (வடக்கு), பெரியார் நகர், செம்பியம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் மலேரியா இருப்பதாக சிபிஎம் கவுன்சிலர் தேவகி கூறியுள்ளார். ஆனால் உயர் நிலை அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.

'மலேரியா அதிகரித்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை, எங்களுக்கு அப்படி ஒரு நிலை தெரியவந்தால் மக்களிடம் கொசு விரட்டி மருந்துகளையும், கொசு வலையையும் உபயோகப்படுத்த வலியுறுத்துவோம்' என சுகாதார அதிகாரி குகநாதன் தெரிவித்தார்.

சென்னை மலேரியாவின் இருப்பிடமாக திகழ, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடமும் ஒரு காரணம். மலேரியா பரப்பும் கொசுக்கள் தேங்கி நிற்கும் தண்ணீரிலேயே பெருகுகிறது, கழிவு நீர்களில் இருப்பதில்லை.  கட்டுமானப் பணிகள் நடக்கும் கட்டிடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால்தான் அதிகமாகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை புதிதாக கட்டப்படும் இடங்களை, மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு கண்காணித்து வந்தது, ஆனால் அது இப்போது நடப்பதில்லை என்று முன்னால் மக்கள் சுகாதார மைய தலைமை நிர்வாகி டாக்டர் இளங்கோ கூறியுள்ளார். முன்பு போல் எந்த தடுப்பு நடவடிக்கையும் இல்லை, சேரி மற்றும் ஊரக பகுதிகளுக்கு எந்த அதிகாரிகளும் வருவதில்லை என  வியாசர்பாடி மக்கள் கூறுகின்றனர். சென்னையில் மட்டும் இந்த வருடம் மட்டுமே சுமார் 6000 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், தலைவலி, வாந்தியெடுத்தல் ஆகிய அறிகுறிகள் 10 முதல் 15 நாட்களுக்கு தொடரும். மலேரியாவை தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், அரசு அலட்சியமாக நடந்தால் பாதிக்கப்படுவது மக்களே. மாநகராட்சி தன் கடமையை செய்யாமல் மக்களை அவதிக்கு உள்ளாக்கலாமா? இந்த அலட்சியம் சென்னையை இன்னும் பாதிக்கதான் போகிறது.

அடுத்து என்ன படிக்கலாம் - மாணவர்களுக்கான கையேடு

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு என்ன படிப்பது?, எத்தனை வகை படிப்புகள் இருக்கின்றன? என்று குழம்புவோருக்கு ஒரு சிறிய கையேட்டினை பகிர்ந்துள்ளோம், இது மாணவர்களின் படிப்புப் பிரிவினை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும், வேலை மேம்பாடிற்க்கும் உதவியாக இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை சொடுக்கவும்.

வலையில் கிடைத்த இப்படத்தில் விட்டுப்போன மற்ற உபயோகமான படிப்புகள் தங்களுக்கு தெரிந்தால், அதை பகிர்ந்து கொள்ளலாம். ஏதேனும் பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டலாம்.

விலை உயர்வு - நமக்கு வாய்த்த விதி


நம் அத்தயாவசிய உணவுப் பொருட்கள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிக கஷ்டப்பட்டு சமாளித்து வருகின்றனர், விலை உயர்வை தடுக்கவோ இல்லை கட்டுப்படுத்தவோ நமது மன்மோகன் அரசு எந்த ஒரு சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதில் போதுமான அக்கறையும் காட்டாவில்லை என்பதே உண்மை.

தற்போது நாம் அனுபவிக்கும் விலை உயர்வும் பணவீக்கமும் தானாக நடந்த ஒன்று அல்ல. நமது இந்தியஅரசு தனியார் நிறுவனங்களுக்கு துணைபோனதும், தனியார் மயமாக்கலுக்கு அடிமையானதும் ஒரு முக்கிய காரணமாகும். அதனால்தான் விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் கூட 30 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்திருகிறது மன்மோகன் அரசு. இதன் சலுகையாக பல கோடிகளை, மானியமாக பெருமுதலாலிகளுக்கு கொடுத்திருக்கிறது.

தனிநபர் ஒவ்வொருவரும் 50,000 டன் வரை உணவு தானியத்தை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருப்பதன் மூலம், உணவுப் பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கும், சந்தையில் விலையை ஏற்றுவதற்கும் சட்டப்படி அனுமதி அளித்துள்ளது.இதன் மூலமாக சில்லரை விற்பனையில் நுழைந்துள்ள டாடா, அம்பானி போன்ற பெரிய முதலாளிகள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன. விலை நிர்ணயமும் அவர்கள் கைகளுக்கு கொடுக்கபட்டுள்ளது, அதுவும் சட்டபூர்வமாக.விவசாயிகள் பல ஆண்டுகளாக உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் அமைத்துக் கொடுக்க கோரிக்கை வைத்தும், அரசு அதை மறுத்தும் செய்யாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். கோயம்பேடு காய்கறி பழச்சந்தையில் மட்டும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன்கள் அழுகிக் குப்பையில் கொட்டப்படுகிறது.

அரசு ஆதரவுகள், நியாயவிலை விற்பனை, மானியங்கள் என எதுவும் கொடுக்காமல், பெருமுதலாலிகளே சந்தைகள், உற்பத்தி, விநியோகம் இதனை தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் தொழில், விற்பனை, உற்பத்தி ஆகியவை உலக தரத்திற்க்கு உயரும் என நம்பி நாட்டை அரசே நாட்டை தனியாரிடம் விற்கிறது. இதனை சாதகமாக்கிக் கொண்டு விலையை ஏற்றுகின்றனர் பெருமுதலாலிகள். மேல்தட்டு மக்களின் சந்தையை மட்டும் உயர்த்த நினைக்கும் அரசு மற்றவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏற்றுமதிக்கும், தனியாருக்கும் நமது வருவாயை கொடுத்துவிட்டு அரசு வேடிக்கை பார்க்கிறது.

உற்பத்தி அதிகமாகும் போது அரசே கிடங்குகளில் சேமித்து வைத்து, பற்றாக்குறையின்போது சேமிப்பை உபயோகப்படுத்தி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தலாம். இது அரசுக்கு தெரியாமலா இருக்கும். அதோடு நில்லாமல் பெட்ரோல் விலையையும் ஏற்றிவிடுகிறது, இதை ஒரு காரணாமக வைத்து அத்தயாவசிய உணவுப் பொருட்களும் இன்னும் விலை ஏறுகிறது.

எல்லாதரப்பு மக்களிடமும் இருக்கும் ஒரே கவலை பெட்ரோல் விலை உயர்வு, இதை கட்டுப்பத்தினாலே போதும் என்றாகிவிட்டது நிலைமை. பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு சொல்லும் பொய் காரணங்கள்

1. உலகச்சந்தையில் கச்சா எண்ணைவிலை உயர்ந்து விட்டது
2. அதானல் எண்ணை நிறுவனங்களுக்கு நஷ்டம்
3. பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுக்கப்படும் மானியங்களால் அரசுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமை.

கச்சா எண்ணைவிலை பீப்பாய் ஒன்றுக்கு தற்போது 85 முதல் 90 டாலர்கள் வரை உள்ளது, பெட்ரோல் விலை ரூ.70ஐ நெருங்கி உள்ளது. 2008 ஆம் ஆண்டு பீப்பாய் ஒன்றின் விலை 135 டாலர்கள் விற்ற போது, அன்று பெட்ரோல் விலை ரூ.54 மட்டுமே. ஆனால் மத்திய அரசு விலையை குறைப்பதற்கு பதிலாக தற்போது அதிகமாக விற்கின்றது.

அரசு நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. அந்த எண்னை நிறுவனங்கள் இந்தியன் ஆயில்,இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation), அவைகளின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையின் படி நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம் கீழே:

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டது. எண்ணை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளதாகமத்திய அரசு ஏமாற்றுகின்றது.எதிர்பார்த்த லாபம்தான் வரவில்லை, அது எப்படி நஷ்டமாகும். நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா? பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கு அரசு போலியான காரணங்களைக் கூறிவருவதைப் பார்த்தால், சமையல் எரிவாயு, டீசல் போன்றவற்றின் விலையையும் கடுமையாக உயர்த்துவதே அதன் நோக்கமாக இருக்கும் என்று தெரிகிறது.வீட்டு உபயோக எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியத்தை இனிமேல் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கலாம் என்கிற திட்டம் அரசிடம் இருக்கிறது.

இதனால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக விலை கொடுத்து எரிவாயு சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் மானிய விலையில்கூட எரிவாயு சிலிண்டர்களை வாங்க முடியாத நிலையில் இருப்பவர்கள் என்பதால், ஒட்டுமொத்தமாகவே மானியம் என்பது இல்லாமல் போய்விடும். அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பல்வேறு சீர்திருத்தங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளில் சில, பொருளாதார வளர்ச்சியுடன் சமரசம் செய்து கொள்பவையாகக் கூட இருக்கின்றன. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.

பெட்ரோலியப் பொருள்களின் இதுதான் உண்மையா? இல்லை, வேறு பல காரணங்கள் உள்ளன.

அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் பொருட்களின் விலை நிர்ணய உரிமை கடந்த 2010 ஆண்டு ஜூலை 25 முதல் எண்ணை நிறுவனங்களே உலக சந்தைக்கேற்ப இந்திய சந்தையிலும் விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற கொள்கை முடிவை இந்திய அரசு எடுத்தது, அதனால் ரிலையன்ஸ், எஸ்ஸார் மற்றும் ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்களின் கையில் தான் விலை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது. அந்நிறுவனங்கள் லாபநோக்கத்தோடு விலைகளை மாற்றிக் கொண்டு இருக்கின்றன.

தற்போது உள்ள சந்தை நிலவரக் கணக்குப் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 ரூபாய் கூட வராது. ஆனால் நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் அரசு விதித்துள்ள வரிகள் தான். வரி அதிகமாக என்ன காரணம்? தனியார் நிறுவனங்கள் தான்

தனியார் எண்னை நிறுவனங்கள் பல பெருகியுள்ளன, தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது. இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.

உலக வங்கியில் இந்திய அரசு கடன் வாங்கியதற்காக 65 சதவிகிதம் வரியும் ஒரு காரணம், பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் மயமாக்குதலை விட வேண்டும்.

மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. இலவசம் என்று கூறி ஒரு பக்கம் கொடுத்தாலும், அன்றாட தேவைகளில் கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காரணம். அரசியல்வாதிகள் ஆட்சியில் இருப்பதால் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை செலவிடுகின்றனர். சொந்த பணத்தை செலவு செய்தால்தானே அதன் கஷ்டம் புரியும்.

மக்களின் பணம் கொள்ளை அடிக்கபடுகிறது, விலை உயர்வை அரசே தூண்டிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறது. டாடா, அம்பானி போன்றவர்களின் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தனியார் மயமாக்குதல் போன்றவற்றை அரசு தவிர்த்தாலே போதும். விலை உயர்வு அரசின் கைகளிலேயே உள்ளது, எப்போது நம் அரசு திருந்துகிறதோ அப்போது தான் நாடு உருப்படும், அதுவரை பணக்காரன் பணக்காரனாவான், ஏழை ஏழையாவான்.

எல்லா விஷயங்களையும் இங்கு எடுத்து கூற முடியாவிட்டாலும், எங்களால் முடிந்ததை தெரிந்ததை பகிர்ந்துள்ளோம். முடிந்தவரை இதை எல்லோருக்கும் இதை பகிரவும்.

தி.மு.க-வின் சொத்து மதிப்பு தெரியவேண்டுமா ???



தி.மு.க வை குடும்ப அரசியல் நடத்துகிறது என கூறினால்,  தி.மு.கவினரும் அதனை சார்ந்தவர்களும் மறுப்பதற்கு தவறுவதில்லை. ஜூவி மற்றும் தி அதர் சைடு வெளியிட்ட கலைஞர் குடும்பச் சொத்துப் பட்டியல் உங்கள் பார்வைக்கு:

படித்துவிட்டு சரியா தவறா எனக் கூறுங்கள்.


1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு  5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு  5 கோடி.


3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு  2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு  4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு  2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு  5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு  2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும்  கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு -  12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு  4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -  10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு -  2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -  2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -  100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு -  10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -  2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -  20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -  5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -  100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு -  50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  4 கோடி.

21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -  108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு -  48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு  30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு -  50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர்  48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில்  13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -  1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு  2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -  2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -  5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -  40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -  1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு -  2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு -  5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -  2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -

 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -  3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -  2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -  1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு -  5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு -  20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content