தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

அமலா பால் (படங்கள் சூப்பர்)











கடைசியாக அஞ்சலியின் படம் (கொசுறு)

செவ்வாய் கிரகத்தில் நீர் - - புகைப்படம் ஆதாரம்.

ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் உறைந்த தண்ணீர் படிமங்கள் உள்ளன என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். தற்போது நிலப்பரப்பின் மீது முழுவதும் நீரோடைகள் நீர் ஓடும்  மணல் பரப்பு தோற்றத்தினை கொண்ட செயற்கைக்கோள் புகைப்படத்தினை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. அவைகளில் சில உங்கள் பார்வைக்கு.










150 ரூபாய் நாணயம் -- விரைவில் வெளியீடு.

மத்திய அரசு விரைவில் 150 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளது. இந்த நாணயங்களை வருமானவரி துறையின் 150 (1860 முதல் 2010 வரை) ஆண்டுகள் நிறைவு விழாவை போற்றும் வகையில் மத்திய அரசு இதை வெளியிடுகிறது.



முதல் முறையாக ரூ.150 மதிப்புடைய நாணயங்களை வெளியிட உள்ளது.  மத்திய அமைச்சகத்தின் நிதித்துறை இதனை அறிவித்துள்ளது. இந்த நாணயம் வெள்ளி, தாமிரம், நிக்கல், மற்றும் துத்தநாகம் போன்ற உலோகத்தின் கலவையில் செய்யப்பட்டதாகும், நாணயத்தின் முன் பக்கத்தில் எப்போதும் போல சிங்கமும் நாணயத்தின் இலக்க எண்ணும், மற்றும் 'இந்தியா' என்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.

150 ரூபாய் நாணயம் 35 கிராம் எடையுடையது. நாணயம் 50 சதவீதம் வெள்ளி மற்றும் 40 சதவீதம் வெண்கல கொண்ட உலோகத்தால் செய்யப்படுகின்றன

இந்தியாவின் தோல்வி

'கண்டிப்பாக எந்த ஒரு தொடருக்கு முன்னும் பயிற்சி ஆட்டங்கள் இருப்பது நல்லது, அது மேலும் சிறப்பாக ஆட உதவியாக இருக்கும். யார் முதல் இடத்தை பிடிக்கப் போகிறார்கள் என்று தீர்மானிக்கும் தொடர், விட்டால் இங்கிலாந்து அதை கைப்பற்றிவிடும். ஓய்வு இல்லை, அதிக கிரிக்கெட் என்ற சாக்குகளைக் கூறக்கூடாது. சரியாக விளையாடவில்லை, அதனால் தோல்வி ஏற்பட்டது, அதை நேர்மையாக ஒப்புக் கொள்ளவேண்டும், அதுதான் சரியான அணுகுமுறை. ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளும் போது 3 துவக்க வீரர்களை அழைத்துச் செல்லவேண்டும். சேவாக்தான் காயமடைந்து விட்டார், வாசிம் ஜாஃபரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? மேலும் இந்திய நடுநிலை வீரர்கள் இங்கிலாந்து வீரர்களை போல் விளையாடவில்லை. ஹர்பஜன் சிங்கும் பேட்டிங்கில் சோடை போவதால் அணி பின்னடைவாகிறது. லஷ்மண் 5 அல்லது 6ஆம் இடத்திலேயே இறக்கப்பட வேண்டும் அவ்ர் மேலே எழும்பும் பந்துகளை நன்றாக எதிர்கொள்கிறார் அது பின்னால் சென்று ஆடக்கூடிய அவரது உத்தி. ஆனால் பந்து ஸ்விங் ஆகும்போது அவரால் ஆட முடியவில்லை. தற்போது தோல்வியை தள்ளிவிட்டு வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்துங்கள் , உங்களுக்கு வயது 28 அல்லது 29 அல்லது 30 இருக்கலாம், இந்தியாவுக்காக வாழ்நாள் முழுதும் ஆடப்போவதில்லை. அணியில் நம் இடம் கையை விட்டுப் போய்விட்டால் மீண்டும் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. சச்சின் இன்னும் தொடரில் சரியாக வரவில்லை, டிராவிட் ஒருத்தரே நன்கு விளையடுகிறார்' என கங்குலி கூறியுள்ளார்.


இதில் எந்த தவறும் இல்லை, சிறந்த வீரர்கள் இருப்பினும் சரியான நேரத்தில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், உலக கோப்பையை கைப்பற்றிய இந்தியாவின் மீது நல்ல பார்வை உள்ளது. தனது வெற்றியை எல்லா இடங்களிலும் பதித்தால் தான், அது ஒரு சிறந்த அணியாகும். 1999 ஆம் ஆண்டு கோப்பையை வென்று, அடுத்த 2003 மற்றும் 2007ஆம் ஆண்டும் தொடர்ந்து உலக கோப்பையை கைப்பற்றி பல ஆண்டுகளாக எல்லா அணிகளையும் மிரள வைத்தது ஆஸ்திரேலியா. இப்போது பல நல்ல வீரர்களின் ஒய்வால் சிறிது பலமிழந்து நிற்கிறது. அதனை உதாரணமாக கொண்டு நமக்கு கிடைத்த முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

சிறந்த வீரர்கள் நம் அணியில் உள்ளனர், ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்துவது நல்லது. கங்குலி ஓய்விற்க்கு முன் சிறிது காலம் சரியாக விளையாடமல் போனதே அவர் மீது பல விமர்சனங்கள் வந்தன, ஆனால் அணித் தலைவராக இந்தியாவிற்கு அதிகமாக 21 டெஸ்ட் தொடர் வெற்றியினை கொடுத்தது அவரே. அனுபவமுள்ள வீரராக அவர் சொல்லுகிற ஞாயத்தினை இந்திய அணி ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அடுத்து வரவிருக்கும் தொடர்களிலாவது இந்தியா வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

அஞ்சனா அஞ்சனா | வந்தான் வென்றான் பாடல்


இன்று முதல் நான் புதிதானேன்
உன் இனிய சிரிப்பினால் முகிலானேன்
கொட்டும் மழை போல் சுகமானேன்
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்

அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா
ஆ போடு போடு, ஆ தந்தனத போடு
நீ அந்தரத்தில் ஆடு, ஆ துள்ளி விளையாடு,
ஆ தொட்டு தொட்டு பாடு, எதுக்கு கட்டுப்பாடு,
நீ வந்து வந்து தேடு, ஆ கிட்ட கிட்ட சூடு
நீ முட்டி முட்டி மூடு, மொத்தத்தில் என்னை நாடு
உனது விழியோடு என்னை மறந்தேனே

உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையானேன் வெண்மையானேன், மெல்ல நானும், தன்மையானேன்

காதல் காதல் வந்தாலே
தண்ணீரும் கூட தீப்போலே
தன்னாலே மாறும் மண் மேலே
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே
ஆகாயம் உந்தன் கால் கீழே
புது கோலம் போடும் அன்பாலே
வேதாளம் ஒன்று உன்னுள்ளே
விளையாடி போகும் செல்லுல்லே

அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா

ஒரு சின்ன பார்வையில்,
நான் விடுதலை விடுதலை அறிந்தேனே
உனது அன்பு வார்த்தையில்,
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே
ஹே கேளு கேளு, நீ என்ன வென்று கேளு
நீ எப்பொழுதும் கேளு, நான் சொல்லுவதை கேளு,
சொல்லாதையும் கேளு, நெருங்கி வந்து கேளு,
உனதருகில் மொழியாய் வருவேனே
உண்மையாலே உண்மையாலே

சிறகில்லை ஆயினும், நான் இறகென இறகென பறந்தேனே
காணவில்லை ஆயினும், நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே
ஹே பாரு பாரு, நீ பக்கம் வந்து பாரு,
நீ பாடி பாடி பாரு, ஆ பத்திரமா பாரு,
ஆனதேச பாரு, பதுக்கவில்லை பாரு
சில நொடியில் அதை நான் தருவேனே

உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையானேன் வெண்மையானேன், மெல்ல நானும், தன்மையானேன்

காதல் காதல் வந்தாலே
தண்ணீரும் கூட தீப்போலே
தன்னாலே மாறும் மண் மேலே
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே
ஆகாயம் உந்தன் கால் கீழே
புது கோலம் போடும் அன்பாலே
வேதாளம் ஒன்று உன்னுள்ளே
விளையாடி போகும் செல்லுல்லே

அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா











வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content