தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை ஒதுக்காதிங்க


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

நன்றி:எழுதமிழா

அதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்



தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)
5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.
இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்
வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்
சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள்
மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள்
புற்றுநோய் – 180 நாட்கள்
காச நோய் – 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். ”நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

நன்றி:எழுதமிழா

பாராசிட்டமால் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து


தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

நன்றி: பிபிசி

தோள்பட்டை வலி அதிகரித்தால் கவனம் தேவை


தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது. தோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் 

இரு சக்கர வாகனங்களில் அதிகம் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமராதவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.

சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.

தோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில்  வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும்.

மூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும்.

தோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்கும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா? தோள்பட்டை வலியா? `ரொட்டேட்டர் கப்’ தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா? மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா? தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா? என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம்.

மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

பிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான தோள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.

இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா?, சுழல் தசைகளின் கோர்வையில் உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.

இதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.

 நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு வலு கொடுத்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content