தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts
Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts

துப்பாக்கி திரை விமர்சனம் - Thuppakki Review

துப்பாக்கி


நடிப்பு

விஜய்
காஜல் அகர்வால்
சத்யன்
அக்ஷரா கொவ்டா
கவுதம் கருப்
வித்யூத் ஜம்வால்


இயக்குனர் : ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பாளர்: கலைப்புலி தாணு
கதை: ஏ. ஆர். முருகதாஸ்

இசையமைப்பு: ஹாரிஸ் ஜயராஜ்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
ஆக்கச்செலவு:  70 கோடி



பெரிய கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது. இங்கு பல விமர்சனங்களின் தொகுப்பை ஒன்றாக பார்ப்போம்


நன்றி: அட்ராசக்க

தமிழ்நாட்டின் வருங்கால சி எம் கனவில் இருக்கும்  கேப்டன் விஜயகாந்த் இதுவரை 34 படங்களிலும், ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் 12 படங்களிலும் அடிச்சு துவைச்சு காயப்போட்ட சாதா கதை தான், ஆனால் ஏ ஆர் முருகதாஸ் அண்ட் டீமின் நல்ல திரைக்கதை இப்படத்தை காப்பாற்றி விடும் .

ஹீரோ ஒரு மிலிட்ரி ஆஃபீசர். லீவில் ஊருக்கு வர்றார். வந்த இடத்துல தீவிரவாதிகள் பாம் வைக்கறாங்க. எதேச்சையான ஒரு நிகழ்வில் ஹீரோ ஸ்லீப்பர் ஸெல்ஸ் என அழைக்கப்படும் தீவிரவாதக்கூட்டத்தில் ஒருவனை பிடிக்கிறார். அவனை வைத்து எப்படி டோட்டல் கேங்கையும் அழிக்கறார் என்பதே மிச்ச மீதித்திரைக்கதை.

தொடர்ந்து 5 தோல்விப்படங்கள் கொடுத்து காவலன் மிதமான வெற்றி , நண்பன் , வேலாயுதம் சராசரி வெற்றி என்று தெம்பில் இருக்கும் விஜய்க்கு கண்டிப்பாக இது ஏறு முகம் தான். நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு உற்சாகமான , வேகமான ,அழகிய விஜயை இதில் பார்க்க முடிகிறது. கடைசியாக சச்சினில் அப்படி பார்த்தது. நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மி. ஏன்னா இது ஆக்‌ஷன் படம் , சும்மா வந்து நின்னா போதும், இயக்குநரும் , வசனகர்த்தாவும் மிச்ச வேலையை பார்த்துக்குவாங்க.. ( இருவரும் ஒருவரே)

ஹீரோயின்  காஜில் அகர் வால்.தமிழ் சினிமாவின் தலைவிதிப்படி அரை லூஸ் போல் சிரிச்சுக்கிட்டு , அரை குறையா உடுத்திக்கிட்டு வர்றார். பாடல் காட்சிகளில் பளிச். டைட் பனியன் போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும்போதெல்லாம் ஆடியன்ஸ் லூஸ் ஆகிடறாங்க.. கொடுத்த 40 லட்சத்துக்கு இது போதும்னு நினைச்சிருப்பார் போல

ஜெயராம், சத்யன் சும்மா டைம் பாஸ்க்கு , காமெடிக்கு. நல்லா யூஸ் பண்ணி இருக்கார் இயக்குநர்.வில்லன் பெருசா ஒண்ணும் பண்ணலை. ஏன்னா வில்லனை ரொம்ப புத்திசாலியா காட்டிட்டா ஹீரோ பேர் வாங்க முடியாதே? ( ஆனா வில்லனை பயங்கர டேலண்ட்டா காட்டி ஹீரோ அவனை வெல்லும்போதுதான் ஹீரோ கிராஃப் டகார்னு எகிறும்..


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  மும்பையின் 12 வெவ்வேறு இடங்களில் பாம் வைக்க பிளான் போடும்  தீவிரவாதிகள் 12 பேரை மிலிட்ரி ஆட்கள் 12 பேரை வைத்து ஒரே டைமில் போட்டுத்தள்ளும் பர பரப்பான சீன்

2. வில்லன் கடத்தும் 5 பெண்களில் தன் தங்கயை தூண்டில் புழுவாய் ஹீரோ யூஸ் பண்ணி வீட்டு நாயை மோப்பம் பண்ண வைத்து இருப்பிடம் அறியும் புத்திசாலித்தனம்

3. க்ளைமாக்ஸில் வில்லனை அழிக்க  ஹீரோ தற்கொலைப்படை  ஐடியா போடுவது அதற்கான திட்டங்கள் , சிஸ்டமேடிக்காக செய்வது

4. ஓப்பனிங்க் ஷாங்க்ல ஆடை அலங்காரங்கள் , பூக்களின் அணி வகுப்பு அழகு

5. பெண் பார்த்து போன பின் ஹீரோயினின் முரண்பாடான குணாதிசயங்களை காமெடியாக காட்டிய விதம்

6. ஹீரோ ம் மேப்பில் 12 இடங்களை வரைந்து அதை இந்திய மேப்பில் வைத்து மேட்ச் பண்ணும் இடம்

7. ஹோட்டலில் விஜய் - ஜெயராம் - காஜில் காமெடி காட்சி. ஜெயராம் பார்க்காத தருணத்தில்  விஜய்க்கு  காஜில்  கிஸ் தருவதும் அதை லேடி பார்த்து திகைப்பதும்

8. ஹீரோவும் அவர் ஆட்கள் 12 பேரும் 12 பேரை ஒரே டைமில் ஷூட் பண்ணும் காட்சி..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. மிலிட்ரிமேன் அப்டின்னா மழு மழு டெயிலி ஷேவிங்க்  உடன் இருக்கனும். இளைய தளபதிக்காக பிரெஞ்ச் தாடிக்கு  அனுமதி கொடுத்துடுவாங்களா?

2. ஹீரோ பெண் பார்க்க வரும்போது ஹீரோயின்  லோ ஹிப் சேலை , ஜெயா டி வி யில் குஷ்பூ போட்டு வரும் ஜாக்கெட்டை விட மோசமான புற முதுகை 98 % காட்டும்  ஜாக்கெட்டை அணிந்து வருகிறாரே? பெண் பார்க்கும் படலத்திலாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு முடிஞ்சவரை மூடி இருக்கக்கூடாதா?

3. முதன் முதலாக பாம் வைப்பவனை எதேச்சையாக விஜய் பிடிக்கும் காட்சி லாஜிக் சறுக்கல்.  யாரோ பிக் பாக்கெட்டை பிடிக்க பஸ்ஸை நிறுத்தி எல்லாரையும் செக் பண்றாங்க. பாம் வைத்த பேக்கை தீவிரவாதி  பஸ்லயே வெச்சுட்டு இறங்கி வர்றான். அவன் பாட்டுக்கு அமைதியா இருந்தா அவனை செக் பண்ணி அவனிடம் பர்ஸ் இல்லை என்றதும் விட்டுடப்போறாங்க. அவன் ஏன் கேனம் மாதிரி ஓடனும்? அதை கடைசி கட்டத்தில் மாட்டின பிறகு பண்ணினா போதுமே? இவனா ஏன் எங்கப்பான் குதிருக்குள் இல்லை என்பது போல் ஓடனும்? ( பாம் வெடிச்சுடும் என சாக்கு சொல்ல முடியாது, அப்படி டைமிங்க் பக்கமா இருந்தா அவன் ஏன் பஸ்ல பயணம் பண்ணனும்? அப்பவே வெச்சுட்டு இறங்கி போய் இருக்கலாமே? )

4. பப்ளிக் ப்ளேஸ்ல பொது மக்கள் முன்னிலையில் 12 பேர் 12 இடங்கள்ல ஷூட் செய்யப்படறாங்க.. ஏன் சைலன்சர் யூஸ் பண்ணாம சுடறாங்க? பில்டப்பா? மக்கள் மத்தியில் யாருக்கும் தெரியாம மேட்டரை முடிச்சு இருக்கலாமே?  தேவையற்ற கலவரம், பீதியை தடுக்க அதுதானே நல்ல வழி?

5. ஸ்லீப்பர் செல்ஸ் ஆசாமிகளைப்பற்றி ஏன் விஜய் சப் இன்ஸ்பெக்டர் சத்யனோட காரிடார்ல நடந்துக்கிட்டே பப்ளிக்கா பேசறார்? தனி ரூம்ல பேச வேண்டிய விஷயம் அல்லவா?

6. தீவிரவாதிங்க  அந்த 5 லேடீசை கடத்துறது ஆள் ஃபோட்டோ அடையாளம் வெச்சுத்தான். ஸ்கூட்டி நெம்பர் பார்த்து அல்ல,. ஹீரோவின் தங்கை ஆள் மாறாட்டம் பண்ணி ஸ்கூட்டில போறப்ப முக ஜாடையை வெரிஃபை  பண்ணாம  சும்மா நெம்பர் பிளேட்டை மட்டும் செக் பண்ணி தீவிரவாதிங்க அவ்ளவ் அசால்ட்டா இருப்பாங்களா?

7. ஒரு சீன்ல ஹீரோவின் தங்கை தீவிரவாதிகள் பிடில இருக்கா. அப்போ ஹீரோ எண்ட்ரி ஆகறார். முறைப்படி வில்லன் கூட்டம் ஹீரோவின் தங்கையை பிணையக்கைதியா வெச்சு எஸ் ஆகி இருக்கலாம்,. அதை விட்டுட்டு லட்டு மாதிரி கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டு தனித்தனியா ஹீரோ கிட்டே ஏன் சண்டை போடனும். அசைஞ்சா உன் தங்கச்சி க்ளோஸ்னு மிரட்ட வே இல்லை?

8. தீவிரவாதிகளிடம் மேலிடம் அவளை முடிச்சுடுன்னு சொன்ன உடனே டப்னு ஷூட் பண்ணாம ஆற அமர வீடியோ கேமரா எல்லாம் செட் பண்ணி எதுக்கு அவளை கொல்வதை வீடியோ எடுக்க ரெடி ஆகறாங்க? அது என்ன பி எஃப்ஃபா? அல்லது மிரட்ட பயன்படும் ஆயுதமா?

9. ஹீரோ தீவிரவதிகள் கூட ஃபைட் பொடும்போது ஒரு ஆம்பளைக்கு கிஸ் கொடுத்து கொலை பண்றாரு. எந்த ஹாலிவுட்ல இருந்து உருவுன சீனோ.. கேவலமா இருக்கு..

10. மிலிட்ரி ஆள்ங்கன்னா கற்பூரம் மாதிரி இருக்க வேணாமா? ஹீரோ ஃபோன் பண்ணி தன் ஆளுக்கு எச்சரிக்கை விடுக்கறார். ஆபத்து, பாம் இருக்குன்னு . டக்னு எஸ் ஆகாம அந்த ஆள் பேக்கு மாதிரி ஸ்டன் ஆகி நிக்கறான். ஏன்?

11. க்ளைமாக்ஸ்ல ரமணா, குருதிப்புனல் மாதிரி ஹீரோ சாகும் கதை அமைப்பு வெச்சுட்டு எப்பவும் போல் சராசரிப்படமாக மாத்தியது ஏன்?அங்கே ஏ ஆர் முருகதாஸ் காணாம போய் ஹீரோ விஜய் தான் நிக்கறார். ரமணாவுல இருந்த தைரியம் ஏன் இதுல இல்லை?

12. படம் ரிலீஸ் ஆகும் முன் கொடுத்த பேட்டில க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, அப்டினு பில்டப் கொடுத்தாறே. அந்த ட்விஸ்ட் என்ன? சார்? ஒரு வேளை எந்த ட்விஸ்ட்டும் இல்லாம இருந்ததுதான் ட்விஸ்ட்டோ?

13. படம் நீளம் அதிகம். ரெண்டே முக்கால் மணி நேரம். பாடல் காட்சிகள் தேவை இல்லாத திணிப்பு. விஜய்க்காக சேர்த்து இருக்காங்க.. அதிலும் க்ளைமாக்ஸில் ஒரு மெலோடி எதுக்கு? கில்லி க்ளைமாக்ஸ் பாட்டு எவ்ளவ் ஸ்பீடு?

14. ஹீரோ மாட்டிக்கிட்டதும் வில்லன் டக்னு போட்டுத்தள்ளாம இன்னும் எத்தனை படத்துல ஒண்டிக்கு ஒண்டி சண்டை வர்றியா?ன்னு ஹீரோ கேட்பதும், அதுக்கு வில்லன் ஓக்கே சொல்லி அநியாயமா சாவதும்   உஷ் அப்பா, முடியல


 மனம் கவர்ந்த வசனங்கள்

1.   -1000 பேரை அழிக்கும் தீவிரவாதிகளே உயிர்தியாகம் செய்யத்தயாரா இருக்கும்போது நாம ஏண்டா உயிர்தியாகம் செய்யக்கூடாது

2. துப்பாக்கி எதுவா வேணா இருக்கலாம் ,எந்த பிராண்டா வேணா இருக்கலாம், ஆனா அதுல தோட்டா நான்டா

3. நீ யாரு?ன்னு எனக்குத்தெரியாது.ஆனா உன் இருப்பிடம் எதுன்னு கண்டுபிடிச்சுட்டா நீ தொலைஞ்சே.உன்னை கொன்னுடுவேன்.

விஜய் - ஐ ஆம் வெயிட்டிங்

4. காஜில் - ஐ . ஐ ...

விஜய் - ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல இருந்து நேரா வர்றியா?

5. உனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது.எனக்கு சஸ்பென்ஸ் ஓப்பன் பண்ணா பிடிக்காது

6. பொண்ணை பாடச்சொல்லுங்க.

மாப்ளை போட்டிருக்கும மிலிட்ரி டிரஸ்க்கு ஜனகனமன தான் பாட முடியும்

7. ஏதாவது பண்ணி பெரிய ரிஸ்க் ஆகிடுமோன்னு பயந்து எதுவுமே செய்யாம இருந்தா அதுதான் பெரிய ரிஸ்க்

8. அழகா இருக்கறவன் திறமைசாலியா இருக்க மாட்டான் ,திறமைசாலி அழகா இருக்க மாட்டான்.அழகும் ,திறமையும் ஒருத்தன் கிட்டெ இருக்கறது அபூர்வம்

9.  ட்ரெயின் கரெக்டா எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க..


 அதை ட்ரெயின் வந்த பின் தான் சொல்ல முடியுமாம்


10.  டேய், வயசாகிட்டே போகுது. மேரேஜை தள்ளிப்போடாதே
 விளையாடாதே, ஒரு நாள்ல எவ்ளவ் வயசு ஏறிடும்?நாளைக்கு போலாம்..

11. எனக்கு பொண்ணை பிடிக்காம போனதுக்கு 3 காரணம்

1. ஒன்னரை மீட்டர் கூந்தல் இருக்கு. மேரேஜ்க்குப்பின் இவ எப்படி ரெடி ஆவா? ரொம்ப லேட் பண்ணுவா

2.  ரொம்ப கூச்ச சுபாவமா இருக்கா..

3. மாடர்ன் லுக்கே இல்லை.. பழம் பஞ்சாங்கமா இருக்கா..


12. நான் வெளில போறேன், வீட்லயே காலைல இருந்து சாயங்காலம் வரை இருந்தா கெட்டுடுவேனாம்.

13. ஏய், சும்மா பிகு பண்ணாதடி, நமக்கு இந்த வளைவு நெளிவுகள் இருக்கும் வரை தான் மார்க்கெட்..

14. எதுக்கு சண்டைக்கு வர்றே? நான் கண்ணாடிக்குத்தானே கிஸ் பண்ணேன்?

 ஆனா கண்ணாடில இருந்தது நான்

15. நான் ஒரு வ்கைல அவளை பாராட்றேன், நம்ம கிட்டே பேசிக்கிட்டே சாவியை எடுத்துட்டுப்போய்ட்டா பாருங்க..

 ஒரு ஸ்மால் கரெக்‌ஷன், பேசிக்கிட்டே இல்லை.. திட்டிட்டே..

16. நீ பெரிய ஆபத்தை தொட்டுட்டே

 ம் ம் ம்

17. ஏண்டி இப்படி ஒரு கேவலமான ஆம்பளையை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சே?

 பி பிராக்டிகல். மாசம் 2 லட்சம் ரூபா சம்பளம்


18. ஆர் யூ ஸ்மீக்கிங்க்?

 வாட்?

 தமும்மா தம்

 ம்ஹூம்

 சாரி, ஐ லைக் ஸ்மோக்கிங்க் கேர்ள்ஸ் ஒன்லி..

 ட்ரிங்க்ஸ் அடிப்பியா? சரக்கு

 ம் ம் லைட்டா, சில டைம் வோட்கா கூட ட்ரை பண்ணி இருக்கேன்


சாரி. எனக்கு தண்ணி அடிக்கும் பெண்களைக்கண்டாலே பிடிக்காது


19. நம்ம லவ்வை பிரேக் பண்ணிடலாம்

 வாட்? இன்னும் ஒன் அவர் கூட ஆகலை.. அதுக்குள்ளேயா?


20. உன் கப்போர்டுல ஒண்ணுல வில்லன், இன்னொண்ணுல ஜோடி.. 2 பேரையும் ஒளிச்சு வெச்சிருக்கே? கப் போர்டுல துணியே வைக்க மாட்டியா?

21. எல்லா ஃபீல்டுலயும்  சின்சியரா ஒர்க் பண்ணீனா  பிரமோஷன் கிடைக்கும், ஆனா போலீஸ் , மிலிட்ரில மட்டும்  பெரிய காயம் பட்டா ரிட்டயர்மெண்ட் தான்

22. அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு பயம் ம் ம்

23. உனக்கு எதும் புரியல இல்லை? சஸ்பென்சோடயே சாவு

24. அவளுக்கு உன்னை பிடிக்கலை ஹா ஹா

 இதுல சிரிக்க என்ன இருக்கு?

 ஒரு மேட்டருக்கே உன்னை பிடிக்கலைன்னா இனிமே யாருக்கு உன்னை பிடிக்கும்?

25. காஜில் - டேட்டிங்க் முதன் முதலா வந்தா கேட்டதை குடுக்கனும், நீ பாட்டுக்கு கிஸ் கேட்டுட்டேன்னா நான் என்ன பண்றது? குடுத்துத்தானே ஆகனும்?

26. எனக்கு எப்படி கிஸ் பண்ணனும்னு தெரியாதே?

 நீ கண்ணை மூடு, நான் பார்த்துக்கறேன்

 ம்ஹூம், நான் கண்ணை மூடினா போன தடவை மாதிரி நீ ஓடிடுவே

27. நாம கெஸ் பண்றது நடக்கலைன்னா நாம் இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும், எதிரி வேற ஏதோ பிளான் பண்றான்னு அர்த்தம்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

 டைம்ஸ் ஆஃப் இண்டியா  ரேங்க் - 6 /10

 போக்கிரிக்கு கீழே , நண்பனுக்கு, வேலாயுதத்துக்கு  மேலே - சாதா கதை, நல்ல திரைக்கதை - ஓக்கே.விஜய் ரசிகர்கள் , பெண்கள் என எல்லாத்தரப்பும் ஃபேமிலியுடன் பார்க்கும்படி தான் படம் இருக்கு


நன்றி: மதிசுதா

முருகதாசின் இயக்கத்தில் கஜால், ஜெயராம் மற்றும் சத்தியன் கூட்டணியில் கலக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹரிஸ்ஜெயராஜ் இசையமைக்க தாணு தயாரித்திருக்கிறார்.
ஒரு மாஸ் ஹீரோவை வைத்துப் படம் எடுப்பது எவ்வளவு சவாலானது என்பதை சாதித்துக் காட்டியிருக்கும் முருகதாசை புகழாமல் இவ்விடத்தில் நகர முடியவில்லை. ஒரு விறு விறுப்புக்கான திரைப்படத்தில் ஆரம்பம் முதலே விறு விறுப்பை புகுத்துவது தான் சாலச்சிறந்தது. ஆனால் விஜய், ரஜனி போன்றோரின் படத்தில் இவை சாத்தியமற்ற ஒன்று காரணம் முதல் அரை மணித்தியாலங்களை ரசிகர்கள் தம் கட்டுப்பட்டுக்குள் வைத்துக் கொள்வதால் பார்வையாளனுக்கு சலிப்பு ஏற்படுத்தி படத்துக்கான முதல் விமர்சனமே எதிர்மறையானதாக அமைய வாய்ப்பிருக்கிறது.
அதைத் தீர்க்கும் வகையில் முதலில் ஒரு சண்டை, அதன் பின் ஒரு பாடல் அடுத்த 10 நிமிடத்துக்குள் கஜால் அகர்வாலின் அறிமுகம் என ரசிகர்கள் அனைவரையும் கத்தி களைக்க வைத்து விட்டு தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.



நடிகர் விஜயின் வழமையான நையாண்டி நகைச்சுவைகள் இருந்தாலும் இம்முறை சற்று முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டே கூறுவதால் படத்தின் சீரியஸ் தன்மையை ஆரம்பத்திலேயே உணர முடிகிறது. உதாரணத்திற்கு முதல் காட்சியிலேயே விஜயிற்கான பெண் பார்க்கும் படலத்துக்கு செல்லும் போது விஜய் கூறுவார். “வந்த ரயட்டுக்கு ஒரு குளியல் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டுப் போகலாமே” அதற்கு தாயார் யதார்த்தமாக இம்முறையும் முடியாது உனக்கு வயசு ஏறிக்கிட்டே போகிறது என்பார். அதற்கிவர் ஒரு நாளைக்குள்ள வயசு ஏறிடாதும்மா என தனது வழமையான பாணியில் முறாய்ப்பாக சொல்லி எம்மை நகைக்க வைத்து விடுகிறார்.
கதைச் சுருக்கத்தில் ராணுவத்தில் இருக்கும் விஜய் மும்பைக்கு விடுமுறையில் வருகிறார். அங்கே பொலிஸில் இருக்கும் சத்தியனுடன் ஊர் சுற்றுவது தான் வேலை. ஒரு முறை இவர்கள் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறேங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடிக்கிறது. ஆனால் அத்தீவிரவாதியை பிடித்து பொலிசில் கொடுக்கிறார். அவன் ஒரு பொலிசாராலேயே தப்பிக்க வைக்கப்பட இவரது வேட்டை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் பொலிசாரைக் கூட தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு செய்யத் தூண்டுகிறது.

கதையில் பெரியளவு வித்தியாசத்தைக் காணமுடியாவிட்டாலும் விஜயின் வழமையான பாணியில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவும் அளவுக்கதிகமான ஹீரோயிசம் இல்லாமலும் கில்லியில் பார்த்த விஜயின் இன்னும் ஒரு புதிய தோற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது.
நடனத்துக்காக தினேசும், சிறீதரும் விஜயை நன்றாகப் புழிந்து விட்டார்கள் என்பது அவரது நடன அசைவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.
கஜால் அகர்வால் அழகு விருந்து படைத்தாலும் திரில் நிறைத்த கதைப் பகுதிக்குள் நுழைக்கப்படவே இல்லை என்பதால் ஆரம்பத்தில் மட்டும் ஒரு சில காட்சிகளால் மனதுக்குள் பதிந்ததோடு மறைந்து போய் விடுகிறார்.
ஒரு திரில் படத்துக்கு பின்பகுதியில் பாடல்களை நுழைப்பது எவ்வளவு தொய்வை ஏற்படுத்தும் என்பதை முருகதாஸ் உணரத் தவறிவிட்டார்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும் இடத்திலும், தீவிரவாதிகளை அவர்கள் இடத்திலேயே தங்கையை பணயமாக வைத்து அழிக்கும் இடத்திலும் விஜய் ஸ்டைலில் ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார். துப்பாக்கி சுழற்றலக்காகவே அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும்காட்சியும் அதற்காக விஜயின் கெட்டப்பும் fox, axn ல் ஒளிபரப்பான பிரபல தொடரான 24 hours ஐயும் அதில் நடித்த ஜக் பவர் ஐயும் அப்படியே நினைவுபடுத்திச் செல்கிறது. அதே போல கையில் சிப்ஸ் பதித்துச் செல்லும் இடத்திலும் misson imposible ஐ நினைவூட்டுவது போல உள்ளது.
சந்தோஷ் சிவன் தனது ஒளிப்பதிவை திறம்படச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பஸ் மற்றும் கப்பல் குண்டு வெடித்தால் காட்சிகள் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் இப்படத்திலும் இரு தங்கைகள் மூலம் தங்கை சென்டிமென்டை கையாண்டிருக்கிறார். அனைவரும் எதிர் பார்த்தது போல படத்தில் அலட்டல் அலப்பாறைகள் நிறைந்த எந்நவொரு பஞ்ச் வசனத்தையும் விஜய் பேசவில்லை.
அதே போல ஹரிசின் இசையும் விஜயின் ஸ்டைலுக்கும் படத்தின் விறுவிறுப்புகம்கும் பெரிதும் ஒத்துப் போவது மிகப் பெரிய பிளசான விடயமாக இருக்கின்றது.
மொத்தத்தில் துப்பாக்கியானது விஜயின் இன்னொரு பரிமானத்தைக் காட்டிய திரைப்படமாகும்.


துப்பாக்கி பலமா வெடிக்குமா??


துப்பாக்கி! இந்த படம் கலை புலி தாணு தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்  நடித்து தீபாவளி அன்று  வெளியாக இருக்கிறது.  நண்பன்  படத்திற்கு பிறகு  ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இதில் காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிச்சுருக்காங்க. படத்துல வில்லனாக வித்யுத் ஜமால் நடிச்சிருக்கார்.

முதன் முறையாக விஜயோட ஏ ஆர் முருகதாஸ் கைகோர்த்து இருப்பதாலும், எப்பவுமே மணிரத்தனம் படத்திற்கு கேமர மேனாக இருக்கிற சந்தோஷ் சிவன் இந்த படத்துல இணைஞ்சு இருப்பதாலும், விஜய்யின் படங்களிலே இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாகி இருப்பதாலும், விஜய் நேரடி தமிழ் படத்தில்  (அதாவது ரீமேக் இல்லாமல் ) நடிச்சிருபதலும் இந்த படத்தோட பல்ஸ் எகிறி இருக்கிறது. (குறிப்பு : இந்த வருஷம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அனைத்து படங்களும் பியுஸ் போயிடுச்சு. எ.கா பில்லா 2, மாற்றான்.)



இந்த படத்தோட தலைப்பு தான் தலையாய பிரச்சனையாய் இருந்துச்சு, ஆனா இந்த பிரச்சனை முடிச்ச உடனே (எப்போ முடிஞ்சதுனு  கேட்ட அது தனி கட்டுற போடணும்), படத்தோட ப்ரோமஷன் (விளம்பர ) வேலையெல்லாம் சூடுபுடிச்சுது. 



இந்த படத்தோட கதைகளம் மும்பையினும், தீவிரவாத கும்பலோட போராடுற ஒரு ராணுவ வீரன்  பற்றியதுதான்னு,  ட்ரைலர்  பாத்தவங்களுக்கு புரிஞ்சுருக்கும்.  ஆனாலும் வழக்கமான திருடன் போலிஸ் கதையாக இல்லாம  இனியமையான காதலோட  திரைக்கதை சொல்லிருக்கிறாராம் நம்ம இயக்குனர் முருகதாஸ். 


அதுமட்டுமில்லாமல்,  படத்துல காஜல் அகர்வால் ஒரு டிபிக்கல் மும்பை பெண்ணாகவும்,   பிளே கேர்ளாக  (Play Girl) வர்ர மாதிரியும்  காட்சி அமைக்க பட்டிருக்குதாம், விஜய் மற்றும் காஜலோட காதல் காட்சி கண்டிப்பா ரசிக்கும்படி இருக்குமாம். புதுமையாக விஜய் ஹிந்தி கூட பேசி நடிசிருக்கறராம்.  



இந்த படத்தோட பாடல்கள் ஏற்கனவே கேட்ட ராகம் தான் என்றாலும் Google Google பாடலின்  டெம்போ நல்ல இருக்கு. இந்த படலை பாடியவர் உங்கள் விஜய்னு கண்டிப்பா திரையில வரும். ஏன் என்ற கரணம் உங்களுக்கே புரியும்.
சரிந்து இருக்கிற விஜயோட மார்க்கெட்,  இந்த ஆக்ஷன் படம் நிச்சயம் தூக்கி நிறுத்தும் என அவர் நம்பரதுனால படத்துக்கு பண உதவியும் செஞ்சு இருக்கார்.


இதில் முருகதாஸ் ஒரு சீனில் கெஸ்ட் ரோலும் பண்ணி இருக்கிறார்,  படம் நேற்று சென்சாருக்கு அனுப்பட்டது. படத்த பார்த்த  படக்குழுவினர் படத்துக்கு "U" (எல்லோரும் பார்க்கலாம்னு ) சர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க. 

இப்படி சின்ன சின்ன விஷயங்களையும் தவிர, துப்பாக்கி  படத்துல  முருகதாஸ், சந்தோஷ் சிவன், விஜய், காஜல், வித்யுத், ஹாரிஸ்  என 6 பெரிய புல்லட் லோடு ஆகி வருகிற நவம்பர் 9 ஆம் தேதி வெடிக்க தயார் இருக்குது.



துப்பாக்கி  பலமா வெடிக்குமா இல்ல திபாவளி துப்பகியாக வெடிக்குமானு பொருது இருந்து பார்போம்.







மாற்றான் ட்ரைலர் புத்தம் புதுசு!!

மாற்றான் ட்ரைலர் புத்தம் புதுசு!!




விஸ்வரூபம் ‍‍‍‍ட்ரைலர் மற்றும் உருவானவிதம்

விஸ்வரூபம் ‍‍‍‍ட்ரைலர் 





உருவானவிதம்



ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு : ரிக்கி பாண்டிங் !


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில், 9 மற்றும் 10-வது போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மோசமான ஆட்டம் காரணமாக முன்னாள் கேப்டன் பாண்டிங் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய தேர்வு குழுவினரின் இந்த அதிரடி முடிவால் பாண்டிங் அதிர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பாண்டிங் இன்று அறிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து என்னை நீக்கியது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 5 ஆட்டத்தில் எனது ஆட்டம் மோசமாக இருந்ததால் எந்த வித உத்தரவாதமும் இருக்காது என்றே நினைத்தேன்.

ஒருநாள் போட்டியில் இனி விளையாடுவேன் என்று எதிர்பார்ப்பு இல்லை. ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. இதனால் ஓய்வு பெறுகிறேன்.

இவர் ஒரு காலத்தில் இந்தியாவிற்கு மிகப் பெரிய சிம்ம சொப்பனமாக விளங்கியவர், பாண்டிங் 1995-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 375 ஒருநாள் போட்டியில் விளையாடி 13,704 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.03 ஆகும். 30 சதமும், 82 அரை சதமும் அடித்து உள்ளார்.

ஆனால் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். டாஸ் மேனியா அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் என்று பாண்டிங் கூறியுள்ளார்.

கமலின் விஸ்வரூபம்! சில தகவல்


இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்க, கமல் இயக்கி வருகிறார். ஷங்கர் இஷான் லாய் இசையமைத்து வருகிறார்கள்.

இப்படத்தினை பற்றிய சில தகவல் துளிகள்:
விஸ்வரூபம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. இதுவரை கமல் நடித்த படங்கள் எல்லாவற்றையும் விட அதிக பொருட்செலவில் தயாராகும் படம் 'விஸ்வரூபம்'.

ஜோர்டன் நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு BLACK HAWK, COBRA, CHINOOK ஆகிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அமெரிக்க ராணுவப்படையை படம் பிடிக்க அனுமதி இல்லாததால், இப்படத்தில் துணை நடிகர்களை வைத்து நகலாக அமெரிக்க ராணுவப்படையை தயார் செய்திருக்கிறார்கள். நியூயார்க் நகரில் ஒரு தெருவில் காட்சி எடுக்க வேண்டும் என்றால் அத்தெருவையே மூடிவிட்டு அனுமதி அளிப்பார்கள்.

அங்கு நடந்து செல்லும் ஆட்கள் கூட படப்பிடிப்பு ஆட்களாக தான் இருக்க வேண்டும். அப்படி படப்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு பிரம்மாண்டமான கார் சேஸ் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.

கமல் இப்படத்தில் கதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பாத்திரத்தில் நடிக்கிறார்.  பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ்  நடனம் அமைக்க, கமல் படத்தில் கதக் நடனம் ஆடி இருக்கிறார்.

வைரமுத்து எழுதி கொடுத்த ஒரு பாடல் கமல் மனதை கவர்ந்து விட, இத்தாலியில் உள்ள Mount Etna எரிமலைக் குழம்பில் செய்த பேனா ஒன்றை பரிசாக கொடுத்து இருக்கிறார்.

நன்றி: விகடன்

பில்லா 2 : புதிய படங்கள்










தாஜ்மகாலில் இசை வெளியிடும் ஏ.ஆர் ரகுமான்!!

தமிழில் வெளியாகி ஹிட் ஆன‌ விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை ஹிந்தியில் கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.  இந்த படத்திற்கு இசைபுயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏக் தேவனா தா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவினை ஆக்ராவில் உள்ள் தாஜ்மகாலில் நடத்த உள்ளனர். இந்த படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதால் தான் பாடல் வெளியிட்டு விழாவினை தாஜ்மாகலில் நிகழ்த்துகிறார்களாம்.




இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக

பில்லா 2 - ஜனவரி டு ஏப்ரல் 2012


மங்காத்தாவின் வெற்றிக்கு பிறகு தல ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பில்லா 2 படத்திற்காக. இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில் அடுத்தக் கட்ட பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. தல இந்த படத்திற்காக சண்டைக் காட்சிகளில் அதிக முயற்சி எடுத்துள்ளார். அதை பற்றி இந்த படத்தில் வில்லனாக வரும் வித்யத் ஜம்வால் கூறுகையில், "மிக ஆபத்து நிறைந்த சண்டை காட்சிகளில் அஜித் நடித்துள்ளார், சண்டை காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு திரைவிருந்தாக இருக்கும்." எனக் குறிப்பிட்டார்.

படத்தின் தயாரிப்பாளர் சுனிர், "பில்லா 2 பற்றி சில தகவல்கள் உள்ளன, 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டது, டைட்டில் பாடல் மட்டும் பாக்கி உள்ளது, இந்த படத்தின் போஸ்டர்கள் ஜனவரியிலும்,  டிரைலர் பிப்ரவரியிலும், பாடல் வெளியீடு மார்ச்சிலும் படம் ஏப்ரல் மாதமும் வெளியாகும்." எனத் தெரிவித்துள்ளார்.

தல ரசிகர்கள் ஜனவரி மாதம் முதல் பில்லா 2 வின் செய்திகளையும் படங்களையும் பார்க்கலாம். பில்லா 2 fever from January to April 2012.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும்.


சூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இருந்தாலும்,உலக நாயகன் கமல் படமாக இருந்தாலும் இருவருக்கும் தனித் தனி இடம் உண்டு, இருவரும் சேர்ந்து நடித்து பல வருடங்கள் ஆகி விட்ட நிலையில், மற்றொரு முறை இரு சிகரங்களையும் ஒன்றாக பார்க்க முடியாத என்ற எண்ணம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் உண்டு. இதனை கமல் ஒரு விழாவில் குறிப்பிட்டு இருந்தார், அது இப்போது இயங்குனர் ஷங்கரின் மூலமாக நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இருவரையும் இணைத்து ஒரு கதையை தயாரித்திருப்பதாக தெரிகிறது, அப்படி இவர்களது கூட்டணியில் இந்த படம் அமைந்தால் அதுவே இந்தியாவின் மிகப்பெரிய படமாக அமையும்.  ஷங்கர் இது பற்றி வரும் ஜனவரி 14 ஆம் தேதி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ரஜினி இப்போது கோச்சடையன் படத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறார், இது அசைவுகளை பதிவு செய்யும் படப்பிடிப்பு என்பதால் 20 நாட்கள் மட்டுமே அவரது கால்ஷீட் தேவைபடும் என்று தெரிகிறது. அதன் பிறகு இந்த படத்தை பற்றி அறிவிப்பை எதிர்பார்க்கலாம், ஆனால் இது ஷங்கர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பாகும் வரை எதையும் உறுதியாக கூறமுடியாது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும் நடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டிவிட்டதோடு நின்றுவிடாமல் இருந்தால் சரி.

2011 ல் ரசிகர்களை கவர்ந்த 30 படங்கள்


2011ஆம் ஆண்டில் பல நல்ல படங்கள் வெளியாகின, முன்னணி நட்சத்திரங்களும், புதிய முகங்களும் வெற்றிப் படங்களை கொடுத்தனர். சில படங்கள் எல்லா ரசிகர்களையும் கவர்ந்து நன்றாக வசூலை குவித்தது. உதாரணங்களாக சிறுத்தை, கோ, தெய்வத்திருமகள், காஞ்சனா, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், 7ஆம் அறிவு, வேலாயுதம் படங்களை குறிப்பிடலாம். ஆனாலும் வசூல் அதிகம் செய்யாத சில படங்களும் ரசிகர்களை கவர்ந்தன, சில திரும்பிப் பார்க்கவும் வைத்தது. அதில் இந்த ஆண்டு எதிர்பார்ப்பு, பிடித்த படங்கள், நல்ல படங்கள் என எல்லா வகையிலும் 30 படங்களின் பெயர்களை குறிப்பிடுள்ளோம், தங்களுக்கு பிடித்த படத்திற்கு ஓட்டளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் புக் முகவரிக்கு செல்லவும், இல்லாதவர்கள் கமெண்டுகள் கொடுக்கலாம்.

https://www.facebook.com/questions/195543120537685/?qa_ref=qd


சிறுத்தை
ஆடுகளம்
காவலன்
பயணம்
யுத்தம் செய்
குள்ளநரி கூட்டம்
மாப்பிள்ளை
கோ
வானம்
எங்கேயும் காதல்
அழகர்சாமியின் குதிரை
எத்தன்
ஆரண்ய காண்டம்
அவன் இவன்
வெப்பம்
தெய்வத்திருமகள்
காஞ்சனா
மங்காத்தா
எங்கேயும் எப்போதும்
முரண்
வாகை சூட வா
7ஆம் அறிவு
வேலாயுதம்
வித்தகன்
மயக்கம் என்ன
போராளி
ஒஸ்தி
ரா ஒன்
மௌன குரு
ராஜபாட்டை

மாஸ் ஹீரோ விஜய் -- கெளதம் !!


கெளதம் மேனன் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க‌ இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கவிருக்கும் படம் யோகன்: அத்தியாயம் ஒன்று. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை தயாரிக்க இருப்பது பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான ஈராஸ் இன்டர்நேஷனல். மேலும் ரானா படத்தை தயாரிப்பதும் இதே நிறுவனம் தான்.

சரி விஷயத்துக்கு வருவோம், சமிபத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த கெளதம் பேசுகையில், விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ணுவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இந்த படம் விஜய்யின் மாஸ் மற்றும் ஸ்டையிலுக்கு ஏற்றவாறும், அதேசமயம் என்னோட ஸ்டையிலிலும் இருக்கும். விஜய்யை வித்தியாசமான பரிமாணத்தில் காண்பிக்க முடியும் என நம்புகிறேன்.

எனக்கு தெரிந்த வரையில் ரஜினி, கமலுக்கு பிறகு ரசிகர்கள் மாஸ் கொண்டுள்ள நடிகர் விஜய் தான். வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு இது போன்ற படம் எடுக்கனும் இருந்தேன், அதுக்கான நேரம் இப்ப வந்தருக்கு என்றார்.  இந்த   படத்தில் விஜய் உளவாளியாக நடிக்கிறார் என்பது மேலும் கிடைத்த் தகவல்.

சிம்புவின் போலீஸ் வேஷத்தை பற்றி பேசவில்லை - ஜீவா



சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படம் ஹிட்டானதில் இருந்து இருவருக்கும் தகராறு நடக்கிறது. அப்படத்தில் நடிக்க முதலில் சிம்புவைதான் இயக்குனர் கே.வி.ஆனந்த் அனுகினார். அவர் மறுத்ததால் ஜீவா வந்தார். படம் வெற்றி பெற்ற பிறகு இன்டர்நெட்டில் ஜீவா ரசிகர்கள் சிம்புவை தாக்கியும், சிம்பு ரசிகர்கள் ஜீவாவை தாக்கியும் கருத்துக்கள் வெளியிட்டனர்.
அதன் பிறகு ஜீவா கூறும்போது, சிம்பு என் நண்பன் இல்லை என்றார். உடனே நடிகர் ஜெய் குறுக்கிட்டு ஜீவாவை கண்டித்தார். இவ்வாறு மறைமுக சண்டைகள் தொடரும் நிலையில் சமீபத்தில் சாந்தோமில் நடந்த “முகமூடி” படப்பிடிப்பு துவக்க விழாவில் சிம்புவை ஜீவா தாக்கிய பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இதுகுறித்து ஜீவாவிடம் கேட்டபோது, மறுத்தார். “அஞ்சாதே” படத்தில் மிஸ்கின் போலீஸ் வேடத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கு மீசை முளைக்கவில்லை. அதைத்தான் குறிப்பிட்டு பேசினேன். வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை. அடக்கடவுளே என் பேச்சில் இப்படியெல்லாம் அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்களே என்றார்.

நன்றி:எழுதமிழா

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா


மங்காத்தா வெற்றியை தொடர்ந்து சூர்யாவை கதாநாயகனாக்கி இயக்கவிருக்கிறார் வெங்கட்பிரபு. அவருடன் இணைந்து தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவும் நடிக்கிறார். வெங்கட்பிரபு படத்தை பற்றி கூறுகையில் திரைக்கதை படத்திற்கு பாதி முடிந்துவிட்டதாகவும், இந்த படம் தமிழுக்கு ஒரு புது பாணியை காண்பிக்கும் என்று தெரிவித்தார்.

படத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும் எனவும், சூர்யா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், அவர் வைத்திருந்த சில கதைகளில் இந்த கதையினை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் முழுவதுமாக திரைக்கதை அமைத்தவுடன் சூர்யாவிடம் கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கதையின் மற்ற நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்கள்,  இன்னும் தேர்வாகவில்லை எப்போதும் போல் யுவன் படத்திற்கு இசை அமைக்கிறார் என்பது மட்டும் உறுதி. வெங்கட்பிரபு படம் என்றால் நகைச்சுவைக்கும், பொழுதுபோக்கிற்கும் பஞ்சம் இல்லை என்பது உறுதி.

மீசை கூட முளைக்கல, போலீஸ் வேஷமா? - ஜீவா கிண்டல்

மிஷ்கினின் பல நாள் கனவுதானாம் இந்த முகமூடி. எதையும் மூடி மறைக்காமல்பேசும் மிஷ்கின், துவக்க நாளான அன்றும் அப்படியேதான் ஆரம்பித்தார் தனது உரையை. இதுவரைக்கும் நான் பார்த்த ஹீரோக்களிலேயே இப்படி ஒரு டெடிக்கேஷனான ஹீரோவை பார்த்ததே இல்லை. ஜீவாவிடம் இந்த கதையை சொல்லணும்னு நினைச்சேன். என் ஆபிஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமான்னு கேட்டேன். அவ்வளவுதான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் ஆபிசில் இருந்தார் ஜீவா. 


மிஷ்கின் இடம் சுட்டி பொருள் விளக்கிய இந்த இடத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகள், ஆரம்பத்திலிருந்து இந்த முகமூடி பிரசவத்தை கவனித்தவர்களுக்கு மட்டும் சட்டென்று புரிந்திருக்கும். (புரியாதவர்களுக்கு சில டேக்ஸ். கமல், அஜீத், எக்ஸட்ரா…) போகட்டும். விஷயத்துக்கு வருவோம். 
முகமூடி பற்றி நிறைய பேசினார் மிஷ்கின். நான் சின்ன வயசிலே நிறைய காமிக்ஸ் படிச்சிருக்கேன். அந்த கதைகளை படமாக்கணும்னு அப்பவே எனக்கு கனவு இருந்திச்சு. தமிழில் வெளிவரப்போகும் முதல் பிரமாண்ட சூப்பர்மேன் கதையா இந்த முகமூடி இருக்கும். இந்த படத்தை இந்த ஒரு பகுதியோட முடிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை. முகமூடி பார்ட் ஒன், டூ, த்ரின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கும்னு நம்புறேன். 

இந்த படத்தில் ஜீவா கமிட் ஆனவுடன் குங்பூ கத்துக்கணும் என்றேன். எனக்குஏற்கனவே தெரியும். ரெண்டு வருஷம் அந்த சண்டையை நான் கத்து வச்சிருக்கேன் என்றார். என்னுடைய வேலை இன்னும் சுலபமாச்சு. ஜீவா 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிச்சு மே மாதம் திரைக்கு கொண்டு வந்துடலாம் என்றார். 

பின்னாலேயே பேச வந்த ஜீவா, 90 நாட்கள் என்ன, 120 நாட்கள் தருகிறேன் என்றார் மிஷ்கினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை போல. வழக்கமாக இருபெரும் நடிகர்கள் முட்டிக் கொள்ளும்போது இடம் கிடைத்தால் போதும். ஒரு வீச்சருவாவை செருகி பார்ப்பார்கள். இந்த முறையும் அதை மின்னல் வேகத்தில் செய்தார் ஜீவா. 

மிஷ்கின் சார் அஞ்சாதே படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைதான் அழைச்சார். சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது? அதுக்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்பதால் அப்படத்தில் நடிக்கல என்றார். 


இப்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெட்டே மிஸ் யுனிவர்சல் போட்டியில் மோதி முன்னேறி இறுதி வரைக்கும் வந்தவர்.

நன்றி: எழுதமிழா

நண்பன் படப் பாடல்கள் 3D யில்




ஷங்கரின் அடுத்த வெளிவரவிருக்கும் நண்பன் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளிவருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்காக 6 பாடல்கள் கொடுத்துள்ளார். இந்ட படத்தின் பாடல் வெளியீட்டு வேலைகள் அதிவேகமாக நடந்து வருகிறது. விஜய்க்கு இப்படம் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, அவரை அவரது மசாலா பாணியில் இருந்து இந்த படம் வெளியே எடுத்துச் செல்லும் என்பது உறுதி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு முதன் முதலாக முப்பரிமாணங்களில் (3D) வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ஆம், கோவையில் ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடக்கவிருக்கும் பாடல் வெளியீட்டு விழா 3D முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு முக்கிய காரணம் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர்தான். விழாவிற்கு வரும் அனைவருக்கும் 3D கண்ணாடி கொடுத்து முப்பரிமாணங்களில் நடத்தவிருக்கின்றனர். ஷங்கர் இந்த விழாவை புதுமையாக நடத்தவே இந்த ஏற்பாடை செய்கிறார், அவர் நினைத்தபடி எல்லாம் நன்றாக அமைந்தால் ரசிகர்கள் 3D யில் பாடல் வெளியீட்டை கொண்டாடுவார்கள்.

ALL IS WELL

'கொலவெறி' பாடலுக்கு அழகாக நடனமாடும் மேகா


தனுஷின் 3 படத்தின் கொலவெறி பாடல் இந்தியா முழுவதும் அனைவரையும் கவர்ந்துள்ளது, அந்த பாடலுக்கு ரீமிக்ஸ் நடனம் என புது அவதாரங்கள் வந்த வண்ணம் உள்ளன அதில் ஒன்று இந்த அழகிய பெண் மேகாவின்  நடனம், கடினமான நடன அமைப்பு இல்லையென்றாலும் ஒரு சில நடன அமைப்பு அனைவரையும் கவரும் படி உள்ளது.

இதன் காணொளி இங்கே


வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content