தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

விலை போகும் ஆண்கள் ! விடையில்லா பெண்கள்!


ஆணுக்கு பெண் இளைப்பில்லை; ஆணுக்கு பெண் சம‌நிகர் சமானம், என்பதெல்லாம் வெறும் வாய்கூற்றாகவே போய்விட்டது இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட. திருமணம் என்னும் வியாபார ச்ந்தையில், வரதட்சனை என்னும் விலை பேசிதான் மணமகனுக்கு திருமணம் செய்யப்படுகிறது.

இந்த வரதட்சனை கொடுமை என்னும் பெண் கொடுமை தமிழகத்திலும், இந்தியாவின் இதர மாநிலங்களிலும் ஒழிந்தபாடில்லை. கடந்த மாதம் நாளிதழ் ஒன்றில் வெளியான் தலைப்பு செய்தியே இதற்கு நற்சான்று.

செய்தி யாவெனில், வரதட்சனை தரமறுத்ததால் மணப்பெண் உயிருடன் எரித்துக்கொலை! நாட்டில் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் மட்டுமே வரதட்சனை கேட்கப்பட்டதா என்றால் இல்லை, இது அனைத்து தரப்பு மக்களிடமும், ஜாதி, மதம், கல்வி, வசதி, வேலைவாய்ப்பு என்ற பாகுப்பாட்டிற்கு ஏற்ப வரதட்சனை பெறப்படுகிறது.

வரதட்சனை என்பது திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை அழைப்பு, பிறப்பு  என அனைத்து விழாக்களிலும் தொடர்கிறது. இத்தனை வரதட்சனை கொடுத்தும் மகிழ்ச்சியும், நல்வாழ்வும் என்பது மணப்பெண்ணிற்கு உறுதியில்லை.


இதன் விளைவுதான், நாட்டில் பெண் பிள்ளையை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மட்டும் தமிழ் நாட்டில் வரதட்சனை கொடுமையின் பெயரில் 8931 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புகார் தரமால் புழுங்குவோர் கணக்கில் அடங்கா.

சென்னையில் கடந்த் ஞாயிறுயன்று வெளியான மண்ப்பெண் தேவை விளம்பரத்தில், வயது, ஜாதி, மதம் முக்கியமில்லை எனக் குறிப்பிட்டிருந்தோர் பலர், வெறும் இருவரே வரதட்சனை தேவையில்லை  எனக் குறிப்பிட்டிருந்தனர். சென்னை போன்ற பெரு நகரங்களிலே இது ஒழியவில்லையெனில் கிராமங்களை பற்றி கூறத்தேவையில்லை. ஆகையால் வியாபார திருமணத்திற்கு  விலைபோகும் ஆண்களும், பெண் கொடுமைகளுக்கு ஆளாகும் ஆண்களும் ஒழிய வேண்டும்.


'கொலவெறி' பாடலுக்கு அழகாக நடனமாடும் மேகா


தனுஷின் 3 படத்தின் கொலவெறி பாடல் இந்தியா முழுவதும் அனைவரையும் கவர்ந்துள்ளது, அந்த பாடலுக்கு ரீமிக்ஸ் நடனம் என புது அவதாரங்கள் வந்த வண்ணம் உள்ளன அதில் ஒன்று இந்த அழகிய பெண் மேகாவின்  நடனம், கடினமான நடன அமைப்பு இல்லையென்றாலும் ஒரு சில நடன அமைப்பு அனைவரையும் கவரும் படி உள்ளது.

இதன் காணொளி இங்கே


சென்னையில் ஒரே பி.பி.ஓ (BPO) நிறுவனத்தின் 4 நிர்வாகிகள் கைது


செவ்வாய்கிழமை அன்று சென்னை போலீசார் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 4 மூத்த நிர்வாகிகளை கைது செய்தனர். அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் செய்த புகாரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஈக்காடு தாங்கல் பகுதியை சேர்ந்த NxtGIPO Technologies எனும் நிறுவனம், கடந்த இரு மாதங்களாக அங்கு வேலை செய்யும் 600க்கும் அதிகமானவர்களுக்கு சம்பளம் கொடுக்காததால் புகார் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் தலைமை அலுவலகத்தினை கொண்டுள்ள நிறுவனம், ரூ 23000 சம்பளம் தருவதாக கூறியுள்ளது, பி.டெக் படித்த ஒருவர் கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் செலவு செய்து வேலைக்கு சேர்ந்துள்ளார், இரண்டு மாதங்களாக நிறுவனம் சம்பளம் கொடுக்க தவறியதால் புகார் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வேறு எந்த புகார்களும் வரவில்லை என்றும், ஒருவர் கொடுத்த புகாரின் பெயரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

2012ம் ஆண்டின் பொதுவிடுமுறைகள்


கீழ்காணும் பொது விடுமுறை தினங்கள், அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேஷன்களுக்கும், வாரியங்களுக்கும் பொருந்தும்.


1. புத்தாண்டு தினம்  ஜனவரி 1 (ஞாயிறு)
2. பொங்கல்  ஜனவரி 15 (ஞாயிறு)
3. திருவள்ளுவர் தினம்  ஜனவரி 16 (திங்கள்)
4. உழவர் திருநாள்  ஜனவரி 17 (செவ்வாய்)
5. குடியரசு தினம்  ஜனவரி 26 (வியாழன்)
6. மிலாடி நபி  பிப்ரவரி 5 (ஞாயிறு)
7. தெலுங்கு வருட பிறப்பு  மார்ச் 23 (வெள்ளி)
8. வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு  ஏப்ரல் 2 (திங்கள்)
9. மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 5 (வியாழன்)
10. புனித வெள்ளி  ஏப்ரல் 6 (வெள்ளி)
11. தமிழ் புத்தாண்டு தினம்  ஏப்ரல் 13 (வெள்ளி)
12. டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்  ஏப்ரல் 14 (சனி)
13. மே தினம்  மே 1 (செவ்வாய்)
14. சுதந்திர தினம்  ஆகஸ்டு 15 (புதன்)
15. ரம்ஜான்  ஆகஸ்டு 20 (திங்கள்)
16. கிருஷ்ண ஜெயந்தி  செப்டம்பர் 8 (சனி)
17. விநாயகர் சதுர்த்தி  செப்டம்பர் 19 (புதன்)
18. வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு  செப்டம்பர் 29 (சனி)
19. காந்தி ஜெயந்தி  அக்டோ பர் 2 (செவ்வாய்)
20. ஆயுத பூஜை  அக்டோ பர் 23 (செவ்வாய்)
21. விஜய தசமி  அக்டோ பர் 24 (புதன்)
22. பக்ரீத்  அக்டோ பர் 27 (சனி)
23. தீபாவளி  நவம்பர் 13 (செவ்வாய்)
24. முகரம்  நவம்பர் 25 (ஞாயிறு)
25. கிறிஸ்துமஸ்  டிசம்பர் 25 (செவ்வாய்)

எஸ்.எம்.எஸ் தொல்லை தரும் பொது நிறுவனங்கள்!!

ஒரு காலத்தில் மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக கடிதம் மற்றும் தந்தி என்றழைக்கப்பட்ட விரைவு குறுந்தகவல் போன்றவற்றை பயன்படுத்தினர். பிற்காலத்தில் தொலைபேசி மற்றும் செல்போன்களின் வரவால் கடிதம், தந்தி மதிப்பிழந்து போனது.

தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட தொலைபேசி, தற்போது விளம்பரச் சேவை என்கிற பெயரில் தொல்லை தர ஆரம்பித்துள்ளன இந்த செல்போன் நிறுவனம் மற்றும் பொது நிறுவனங்கள்.

பொது நிறுவனங்கள் விளம்பரச் சேவைக்காக ஒரு குருந்தகவல் ஒன்றை ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து அனைத்து செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்புகிறது. இது போன்ற பலதரப்பட்ட பொது  நிறுவனங்களின் குருந்தகவல்களால், வேலையில் அல்லது கல்லூரியில் இருக்கும் நமக்கு, மிகவும் தொல்லையாக அமைகின்றது.

இதை தவிர்க்கத்தான் இந்தியா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையும் சமிபத்தில் ஒரு கட்டுப்பாட்டை செல்போன் நிறுவனங்களுக்கு விதித்தது. அதன்படி ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் அதன் பயன்பாட்டாளர்களுக்கும் நாளொன்றுக்கு 100 குருந்தகவல்கள் அணுமதிக்க வேண்டும்.

இதையும் மீறி சில நிறுவனங்கள் இணையத்திலிருந்து குருந்தகவல்களை அணுப்ப ஆரம்பித்துவிட்டனர். இதுபற்றி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், இதனை கட்டுபடுத்த வேண்டியது செல்போன் நிறுவனங்களே.

இணையத்திலிருந்து அனுப்பப்படும் குறுந்தக‌வல்களை இடைமறித்து பயன்பாட்டாளரின் நலனை காப்பது அந்நிறுவனங்களின் கடமை என்றார் அவர். செல்போன் நிறுவனங்கள் கண்கானிக்குமா?

ஜீன்ஸ் பேண்ட் ‍தயாராவது எப்படி!!!

இன்றைய மேற்கத்திய கலச்சார வாழ்க்கையில் ஜீன்ஸ் ஆடை நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண், பெண் என இருபாலரும் அணியும் நாகரீக‌ உடை என்றே கூறலாம். அதைவிட இத்தகைய உடை ஆண்களை விட பெண்களே அதிகமாக விரும்புகின்றனர், காரணம், ஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தால் போதும்,  டி-சர்ட்,  ஷார்ட் டாப்ஸ்,  சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அது மட்டும் இன்றி வெளியில் செல்லும்போது அது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக‌ பெண்கள் கருதுகின்றனர். அத்தகைய உடை வடிவமைப்பு மற்றும் தயாரிக்கும் முறை பற்றிய வீடியோ பதிவு உங்களுக்காக.


பில்லா 2 படப்பிடிப்பில் அஜித் காயம் !!

மங்காத்தாவின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அடுத்த படமான பில்லா 2 வில் அஜித் பிசியாகயுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹதராபாத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது, சண்டைக்காட்சியின் போது அஜித், சிறிய‌ தடுமாற்றத்தால் கிழேவிழ நேரிட்டது. ஆதலால் உள்ளங்கையில் மட்டும் கொஞ்சம் அடிப்பட்டுள்ளது. பிறகு ஒரு மணி நேர ஒய்வுக்கு பின்னர் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

இதுவரை பில்லா 2 வில் அஜித்தை இளமையான அழகான டேவிட் பில்லாவாக காட்டிருக்கிறோம் என்றார் படத்தின் ஒளிப்பதிவாளர்.

இன்று முதல் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடை அடைப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல்  6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று முழுமையான கடை அடைப்பு நாளை முதல் தொடங்குகிறது. இன்று மாலை 5 மணி வரை கடைகள் இயங்கும். இன்று 5  மணி முதல் விடுமுறை தொடங்கும். உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முழுவதும் 6,691 மதுக்கடைகள் உள்ளன, அதில் சென்னையில் மட்டும் 482. நேற்று முதல் விற்பனை அதிகரித்துள்ளது. இன்றும் விற்பனை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் இருப்பு வைத்துள்ளனர். கட்சிகளும் தங்களுக்கு தேவையானதை வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர்.

குடிமகன்களுக்கு 6 நாட்கள் திண்டாட்டம்தான்!

விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு "U" சர்டிபிகேட்!!

ஆஸ்கர் ரவி சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து திபாவளியன்று திரைக்கு வெளிவர இருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தில் ஜெனிலியா மற்றும் ஹன்சிகா இருவரும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் ஆன்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் நேற்று தணிக்கை குழுவினர் (சென்ஸார்) முன்பு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த சென்ஸார் குழுவினர், படத்தில் சிறு திருத்த்ங்களுக்கு பிறகு  கிளின் "U" சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டள்ளனர். பொதுவாக விஜய் படங்கள் "U" ச்ர்டிபிகேட் பெறுவது வழக்கம் என்பது குறிப்பிடதக்கது. சென்ஸாருக்கு பிறகே திபாவளியன்று வெளியாகும் திரையரங்கு பட்டியல் உறுதிபடுத்தப்படும் என்று ஜெயம் ராஜா குறிப்பிட்டிருந்தார். ஆகையால் நாளை முதல் திரையரங்கு பட்டியல் முழுமையாக வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபாசமாக நடித்த நடிகைக்கு 90 சவுக்கடியுடன் சிறை தண்டனை


2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'மை டெஹ்ரான் ஃபார் சேல்'  (My Tehran for Sale) எனும் திரைப்படத்தில் நடித்த மரியா (Marzieh Vafamehr) ஆபாசமாகவும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 90 சவுக்கடியும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அப்படம் டெஹ்ரான் நகரை  சுற்றி எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த இவர் மொட்டை தலையுடனும், முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தா இல்லாமல் நடித்ததற்காகவும் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டு கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக நடிகை மரியாவின் குடும்னபத்தினர் அறிவித்துள்ளனர்.

இப்படம் Independent Spirit Inside Film award  மற்றும் Trimedia Film Trimedia Film Festival-ல் சிறந்த படத்திற்கான விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பில்லா 2 படப்பிடிப்பில் அஜித் ரசிகர்களுடன்

அஜித் பில்லா 2  படப்பிடிப்பில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட படங்கள்




ஸ்டீவ் ஜாப்ஸின் 10 முக்கிய கண்டுபிடிப்புகள்!!

கணினி தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய ‌ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனர்களில் ஒருவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி போட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் எவ்வித முறையான பட்டமும் பெறாத ஸ்டீவ் ஜாப்ஸின் 10 கண்டுபிடிப்புகள்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவைகள் உங்கள் பார்வைக்கு...

1. ஆப்பிள் I (1976) என்ற கணினி முதன் முதலில் உருவாக்கினார்.

2. ஆப்பிள் II (1977) இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

3. லிசா (1983) இது வெளிவந்த போது மிகவும் விலைவுயர்ந்ததாக கருதினர்.

4. மாக்கின்டோஷ் (1984) லிசாவை போன்றே கிரபிகல் யுசர் இன்டர்பேசை கொண்டிருந்தது.

5. நெக்ஸ்ட் (1989) (இது இன்னும் ஐ போனில் பயன் படுகிறது.)‌

6. ஐமேக் (1998)

7. ஐபாட் (2001) இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது.

8. ஐ டுயுன் ஸ்டோர் (2003)

9. ஐ போன் (2007) ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது.

10. ஐபேட் (2010)

ரயிலில் பயண‌ம் செய்பவர்கள் கவனிக்க!!



ரயிலில் முதன் முதலாக மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களாக இருந்தால், நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியவைக‌ள் !

1. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளுதல் மிக நன்று.

2. ஒரு கைக்குவளை(mug) பயணத்தின் போது கொண்டு செல்வது கழிப்பறை உபயோகத்தின் போது பயன்படும்.

3. முடிந்த வரை ரயிலில் விற்கப்படும் தின்பண்டங்களை மற்றும் உணவு வகைகளை வாங்கி உண்பதை தவிர்க்கவும். தண்ணி பாட்டில்களை தவிர.

4. வீட்டிலிருந்து புளியோதரை மற்றும் ரொட்டிதுண்டுகள் கொண்டு செல்லலாம்.

5. பொழுதை போக்க கையில் ஒரு நாவல் அல்லது ஒரு புத்தகம் கொண்டு செல்வது நன்று.

6. வயிற்று உபாதைக்கான மாத்திரை கொண்டு செல்வது அவசரத்திற்கு உதவும்.

7. முன்பின் தெரியாத நபரிடம் எதையும் வாங்கி உண்ண வேண்டாம். அது உங்களுக்கு சிக்கலில் முடியலாம்.

8. செல்போன் உபயோகிப்பவராக இருந்தால், சார்ஜிங் பாயின்ட் எங்கு உள்ளது என்பதை ரயில் புறப்படும் முன்னரே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

 பயணம் இனிதாக முடிய வாழ்த்துகள் ......

மிக மோசமான நகரம் பெங்களூர் !!!

சமீபத்தில் நடத்தப்பட்ட  நான்காவது ஆண்டு ஐ.பி.எம் கம்யூட்டர் பெயின் கணக்கெடுப்பு படி, உலகளாவிய சராசரி நேரம் 20 நிமிடங்களில்  ஏற்படும் போக்குவரத்து நெரிசலை 6 கண்டங்களில் உள்ள 20 நகரங்களில் 8042 பயணிகளிடம்   ஆய்வு நடத்தப்பட்டது.அதில் பெங்களூர் (44%) என குறிபிடப்பட்டுள்ளது. அந்த புள்ளி விவர அடிப்படையில் மிக மோசமான நகரப் பட்டியலில் பெங்களூர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த  ஆண்டின் எட்டு மாத இடைவெளியில் ஆகஸ்ட் 2011 வரை, கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் சட்டவிரோத/ தவறுதலான  பார்க்கிங் என  4 லட்சம் வழக்குகள் பெங்களூர் போலீசாரால்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூர் நகர போக்குவரத்து போலீஸ் பதிவுகளின்படி, ஒவ்வொரு மாதமும் 50,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  தவறான நிறுத்தம், இட பற்றாக்குறை காரணமாக கிட்டத்தட்ட 20 முதல் 35 நிமிடங்களில்  தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளனர்.

ஆரக்கிள் ஆன்லைன் டெஸ்ட் எழுதிய 13 வயது சிறுவன்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான "ஆரக்கிள்' நிறுவனம் ஆன்லைன் மூலம் நடத்திய தொழில்நுட்ப போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் திருநெல்வேலியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் விக்னேஷ்வரன்.  

திருநெல்வேலி வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - ரேவதி தம்பதியின் மகனான இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 8-வது வகுப்பு படித்து வருகிறார். தனது இந்தச் சாதனை குறித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  பாளையங்கோட்டையிலுள்ள தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் "சி' லாங்வேஜ் படித்து வந்தபோது கம்ப்யூட்டரில் எனக்குள்ள ஆர்வத்தைப் பார்த்த பயிற்சியாளர் எஸ்.சுந்தரபாண்டியன், ஆரக்கிள் நிறுவன தேர்வுக்கு உரிய பயிற்சியை அளித்தார். பி.இ., பிடெக் போன்ற உயர் படிப்புகளை முடித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மேலும் பயிற்சிக்காக மைக்ரோசாப்ட், சிஸ்கோ மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் நடத்தும் தொழில்நுட்பத் தேர்வை எழுதி அவர்களது திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.  இதற்காக அந்த நிறுவனங்கள் சான்றிதழ் அளிப்பதுடன் அவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியிலும் அமர்த்திக்கொள்ள வாய்ப்புள்ளது.  இந்த வகையில் ஆரக்கிள் நிறுவனம் நடத்திய ஓசிஏ-11ஜி தேர்வை எழுத என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். இத்தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி எழுதினேன். நானே எதிர்பாராத வகையில் இத்தேர்வில் 83 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். இவ்வளவு சிறிய வயதில் இத்தேர்தவை எழுதி வெற்றி பெற்றது நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என எனது பயிற்சியாளர் தெரிவித்தார்.  

 இதற்கு முன் மிகக் குறைந்த வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த 14 வயதான ராகில் என்பவர் ஆவார். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் பொறியாளர் ஆவதே எனது லட்சியம். இத்தேர்வில் வெற்றி பெற்றதால் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக பி.இ., பி.டெக் வகுப்பில் சேரலாம் என்றார் அவர்.  பேட்டியின்போது உடனிருந்த பயிற்சியாளர் சுந்தரபாண்டியன் கூறுகையில், சாதாரணமாக இத்தேர்வில் வெற்றி பெற முடியாது. விக்னேஷ்வரனின் தீவிர முயற்சியாலும், அவரது பெற்றோர் கொடுத்த ஊக்கத்தாலும் இந்த வெற்றியை அடைந்துள்ளார் என்றார்.

பூமி நாளிதழ்

தமிழ்நாடு அரசு போக்குவரத்தின் ஆன்லைன் இ-டிக்கெட்

 ரயில்களில் முன்பதிவு செய்ய இ-டிக்கெட் வசதி இருப்பது போல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இன்று (அக்.3) தொடங்கி வைக்கிறார்.

டிக்கெட் கவுண்டரில் காத்து நிற்காமல் வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையத்தின் மூலமோ, டிராவல் ஏஜென்சி மூலமோ இனி பேருந்திற்காக முன் பதிவு டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம்.

எந்த ஊரில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அரசு நீண்ட தூர பேருந்துகளுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களுக்கும் இ.டிக்கெட் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும், திருப்பதி, புதுச்சேரி, பெங்களூர் போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு செல்லவும் அரசு விரைவு பேருந்துகளில் ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம். ஒரு மாதத்திற்கு முன்பாக பயணத்திட்டத்தை வகுத்து அதற்கேற்றவாறு அரசு பஸ்களில் முன் பதிவு செய்து கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.

மேலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் இந்த திட்டத்தில் முன் பதிவு செய்து பயணம் செய்யலாம். ஆன்லைன் மூலம் இ.டிக்கெட் பெறும் வசதி செய்யப்படுவதால் தேவையற்ற அலைச்சல், கால விரயம், காத்திருத்தல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

www.tnstc.in என்ற இணையதளத்தின் வழியாக அரசு பேருந்துகளில் இன்று முதல் இ.டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து எந்த இடத்தில் இருந்தும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய முன் பதிவு சேவை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செயலாளர் பிரபாகர்ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். 

பஸ் இ.டிக்கெட் பெறுவதற்கு தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடுகிறது. ஆன்-லைன் முன் பதிவுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்துகளின் தடம் எண், எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும், பணம் செலுத்தும் முறை, தேதி, எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் போன்ற தகவல்களை இணைய தளத்தின் வழியாக பதிவு செய்யும் போது இ-டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

பயணத்தின் போது இ.டிக்கெட் பயணிகள் அடையாள சான்றினை வைத்திருக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு பயணம் செய்ய விரும்புவோர் இந்த வசதியை உடனே பெற்றுக் கொள்ளலாம். 



டிஎன்எஸ்

ரஜினி ரா ஒன்-இல் நடித்ததற்கு நன்றி : ஷாருக்கான்

ஷாரூக்கானின் ‘ரா-ஒன் படத்தில் ரஜினி காந்த் கௌரவ வேடத்தில் நடிக்க மாட்டார், அதற்கு அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காது,  ரஜினிகாந்தின் குடும்பம் மறுத்து விட்டது, ரஜினியே ஷாருக்கானுக்கு தொலைபேசி மூலம் சாரி சொல்லிவிட்டார் என்று செய்திகள் வரத் தொடங்கின ஆனால் ஷாருக்கான் தனது ட்விட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததாகவும், கனவை நனவாக்கியதற்கு சௌந்தரியாவிற்கு நன்றி என்றும், ரஜினி படத்தை ஆசீர்வதித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"Misconcepts, misunderstood.stressed & then rajini sir walks on sets & u know why God made films. Thanx Soundarya for making r dream com true.

Ra.One completed today.Rajini sir blessed it.Have tears in my eyes of gratitude & only prayers & love for his whole family.u complete us sir"

ரஜினி நடித்தது உண்மையா?

பிளாஸ்டிக் பைகளை தடை செய்த அரசு

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. 1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, இதற்கான வரைவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்துவது, வைத்திருத்தல் உள்ளிட்டவை முற்றிலுமாக தடை செய்யப்பட உள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ அல்லது இவை இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்எஸ்

"சச்சின் பற்றி கேள்வி எழுப்பவில்லை" பின்வாங்கிய அப்ரிதி


ஒரு நாள் முன்பு சச்சின் அக்தரின் பந்தை எதிர்கொள்ள நடுங்கினார் என்று கூறி சர்ச்சை கிளப்பிய அப்ரிதி, இன்று மாற்று கருத்து தெரிவிதுள்ளார். "சச்சினின் பெருமையை பற்றி நான் கேள்வி  எழுப்பவில்லை, நான் சொன்னதை மறுக்கவும் இல்ல. டெண்டுல்கர் அக்தரின் பந்தில்  1999 ஆம் ஆண்டு கொல்கட்டா டெஸ்ட் தொடரில் அசௌகரியமாக தெரிந்தார். அது அக்தருக்கு இந்தியாவில் முதல் தொடராகும், டெண்டுல்கரை ரன் எடுக்க விடாமல் போல்ட் ஆக்கினார், ஓரே போடியில் டிராவிடையும் வெளியேற்றினார்.

சச்சின் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் அதை உலகமே அறியும். நானோ மற்றவர்களோ இதற்கு சான்று தரத்தேவையில்லை. அவருடைய சாதனைகளே அதைப் பற்றிச் சொல்லும்.

சச்சின் அதற்குப் பிறகு அக்தரின் பந்தில் எவ்வளவோ சிக்சர்களை விளாசியுள்ளார், ஆனால்  நான் குறிப்பிட்டது அன்று அக்தரின் நாளாக இருந்ததை. அன்று அவர் அக்தரின் பந்தை எதிர்கொள்ள தயங்கினார் என்றே கூறினேன்.

நான் சச்சினின் ரசிகன், அவர் சிறந்த வீரர் மட்டுமல்ல பணிவானவரும்தான். எனது வீட்டின் அறையில் ஓரே ஒரு படம் மாட்டி வைத்துள்ளேன் அது அவருடைய படம்தான், அதில் அவரது கையெழுத்து உள்ளது. இத்ற்கு மேல் எதாவது கூறவேண்டுமா?" என்று அப்ரிதி இன்று கூறியுள்ளார்.

டெண்டுல்கர் முன்பு அப்ரிதியும், அக்தரும் ஒன்றுமில்லை - அஜித் வாடேக்கர்


அப்ரிதியும், அக்தரும் டெண்டுல்கரின் விளையாட்டினை பற்றி வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் வாடேக்கர் இது பற்றி பேசுகையில்,  "இது மனப் புழுக்கத்தின் வெளிபாடுதான். உலக அளவில் 99 சதங்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த ஒருவரை பற்றி இவர்கள் பேசுகிறார்கள்."

"இந்திய கிரிக்கெட் வாரியம் நன்றாக உள்ளது, அணியும் நன்றாகவே உள்ளது, இங்கிலாந்தின் தொடரை தவிற. இந்தியா எனும் ஒரு நாடாக நாம் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளோம், நம்மை போல் அவர்கள் (பாகிஸ்தான் வீரர்கள்) இல்லை."

டெண்டுல்கர் இதற்கு பதில் சொல்ல வேண்டுமா? என்ற கேள்விக்கு, "அவர் ஏன் கூற வேண்டும்? டெண்டுல்கரின் முன்பு இவர்கள் யார்? அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கூட நல்ல மரியாதை இல்லை. நல்ல வேளையாக பிராட்மேன் கூட இப்போது விளையாடவில்லை பொதுவிளம்பரத்திற்காக அவரது திறமையை கூட இப்போது விமர்சிப்பார்கள்" என்று அவர் கூறினார்.

அக்தரின் இந்த கருத்திற்கு கங்குலியும் "அக்தருக்கு புத்தி மாறிவிட்டது" என்று சிரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content